நாத்திகத்திலிருந்து இஸ்லாத்திற்கு

பிறப்பில் இந்துவாக, பிறகு பெரியாரிஸ்டாக, அம்பேத்கரிஸ்டாக, பகுத்தறிவாளராக, சிறந்த சிந்தனையாளராக, எழுத்தாளராக, தலைச்சிறந்தப் பேச்சாளராக உலகம் முழுவதும் ‘பெரியார்தாசனாக’ அறியப்பட்டவர், இப்பொழுது ‘நான் ஒரு முஸ்லிம்’; என் பெயர் அப்துல்லாஹ்’ என தன்னை உலகிற்கு பிரகடனப்படுத்தியிருக்கிறார். முனைவர் அப்துல்லாஹ் தேசிய அளவிலும் சர்வதேச அளவிலும் பல விருதுகளைக் குவித்தவர். ஆயிரம் பேருக்கும் மேலாக தற்கொலையில் இருந்து காப்பாற்றியதற்காக சர்வதேச மனநல மருத்துவர் கழகம் இவருக்கு 2008 ஆம் ஆண்டிற்கான ‘சிறந்த மனநல மருத்துவர்’ என்ற விருது வழங்கிச் சிறப்பித்தது. அவர் இஸ்லாத்தை ஏற்று, மக்காவிலுள்ள இறை ஆலயத்தையும் தரிசித்து விட்டுத் தமிழகம் திரும்பிய பிறகு அவரை அவருடைய இல்லத்தில் சந்தித்தோம்…
……………………………………………………………………………………………………………..

*சேசாச்சலம், பெரியார்தாசன், சித்தார்த்தன், அப்துல்லாஹ் இந்த நான்கும் ஒவ்வொரு கட்டத்தில் உங்களுக்கான பெயர்கள். இதுபற்றி கூறுங்கள்.

சேசாச்சலம் என்பது இந்து பெற்றோருக்குப் பிறந்ததனால் அவர்கள் எனக்கு வைத்த பெயர். நான் ஒன்றும் இந்தப் பெயருக்காக மனு கொடுத்து வேண்டு விரும்பிப் பெற்றது அல்ல. பெரியார்தாசன் என்பது ஒருமுறை பெரியாரை எங்கள் கல்லூரியில் சந்தித்து ஒரு கவிதை எழுதினேன். அதில் ‘சேசாச்சலம்’ என்று பெயரை எழுதியிருந்தேன். அதைப் பார்த்த என் ஆசிரியர் இந்த பெயர் ஒரு பிராமணப் பெயரைப் போன்று இருக்கிறது என்று சொன்னதால் ‘பெரியார்தாசன்’ என்று பெயர் மாற்றி எழுதியிருந்தேன். அடிப்படையில் நான் ஒரு பேச்சாளன் என்பதால், எனக்கு புதிய புதிய தத்துவங்கள், தகவல்கள், செய்திகள் தேவைப்பட்டன. அதனால் அம்பேத்கருடைய புத்தகங்களைப் ப்டித்தேன். மாறாக நான் எந்தக் காலத்திலும் அவர்களின் கொள்கையால் ஈர்க்கப்பட்டதில்லை. பிறகு 2000ஆம் ஆண்டில் என்னை நானே சுயபரிசோதனை செய்யும் பொழுது நான் பரப்பிக் கொண்டிருக்கின்ற செய்தி உண்மைதான என்ற சந்தேகம் என்னுள் எழுந்தது. இறைவன் இல்லாமலிருந்தால் பிரச்சினை இல்லை. ஒருவேளை இறைவன் இருந்துவிட்டால் என்ன செய்வது? மறுமை என்று இல்லாமலிருந்தால் பரவாயில்லை. ஒரு வேளை இருந்துவிட்டால் என்ன செய்வது என்ற கேள்விகள் என்னுள் எழுந்த போது நான் IFT-யினுடைய திருக்குர் ஆன் விளம்பரத்தைப் பார்த்து வியாசர்பாடி ஜீவா ரயில் நிலையத்திலிருந்து ஜமாலியா(IFT)விற்கு நடந்தே சென்று திருக்குர்ஆனை வாங்கினேன். அப்பொழுதுதான் இஸ்லாமியர்களை அருகில் நெருங்கினேன். அதுவரை இஸ்லாமியர்களை தூரத்தில் இருந்தே பார்த்திருக்கிறேன். அவர்களைப் பற்றி விமர்சனம் செய்திருக்கிறேன். ஆனால் அவர்களிடம் நெருங்கிப் பழகியதில்லை. அத்தகைய சூழலில்தான் திருக்குர்ஆனைப் படிக்கப் படிக்க உலக சமுதாயத்தை அது மாற்றியது போல் திருக்குர்ஆன் என்னையும் மாற்றியது; அப்போதிலிருந்து இறைமறுப்புக் கொள்கையை விட்டு விட்டேன். அதைத் தொடர்ந்து ‘கல்கி’ பத்திரிக்கையில் நான் ஏன் நாத்திகன் இல்லை என்ற தலைப்பில் தொடர்ந்து 23 வாரங்கள் தொடர் எழுதினேன். பிறகு இறையில்லமான கஅபாவிற்குச் சென்று இறைவனை முழுமையாகச் சரணடைந்தேன். இப்பொழுது அப்துல்லாஹ்வாக உங்கள் முன் இருக்கிறேன். இறைவன் என்னை அவனுடைய நேர்வழியில் செலுத்தியிருக்கிறான்.

மேலும்

ஒரு பதில்

  1. […] மேலும் 0 கருத்து | ஏப்ரல் 13th, 2010 at 6:08 am under  Blog திரட்டி […]

பின்னூட்டமொன்றை இடுக