அரங்கம்

இறைவனின் திருப் பெயரால்…..
 
அன்பர்கள் அனைவருக்கும்       அஸ்ஸலாமு அலைக்கும்!

இகமெங்கும் வாழும் இணைய உலகின் தமிழ் நேய நெஞ்சங்களை அகம் குளிர வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறது தமிழ் இஸ்லாம் அரங்கம்.

இணைய உலகில் தினந்தோறும் இனிய இஸ்லாத்தை இன்பத் தமிழில் தேடும் அன்பர்கள் அனைவருக்கும் வசதியாக, பல்வேறு இஸ்லாமியத் தமிழ் வலைத்தளங்கள் மற்றும் வலைப் பதிவுகளில் அவ்வப்போது வெளிவரும் அருமையான ஆக்கங்கள் அனைத்தையும் ஒரே இடத்தில் தொகுத்து வழங்குவதற்காக உருவாக்கப்பட்டது தான் இந்த தமிழ் இஸ்லாம் அரங்கம்.

இஸ்லாம் மற்றும் முஸ்லிம்கள் தொடர்பான கட்டுரைகள் மட்டுமின்றி முழு மனித சமுதாயத்திற்கும் பயன்படும் பல்வேறு ஆக்கங்களும் இப்பகுதியில் தொடர்ந்து இடம் பெறும் இன்ஷா அல்லாஹ்.

 ஆக்கங்களின் தலைப்புகளை சொடுக்கினால் அப்படியே உங்களை  அந்த ஆக்கங்களை வெளியிட்டுள்ள வலைத்தளங்களுக்கும், வலைப்பதிவுகளுக்கும் நேரடியாக அழைத்துச் செல்லும் வசதியைச் செய்திருக்கிறோம்.

பல்வேறு வலைத் தளங்கள் மற்றும் வலைப்பதிவுகளில் சிறந்த ஆக்கங்களைக் காணும் வாசகர்கள், ‘யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்’ என்னும் மூதுரைக் கொப்ப  அவற்றின் தொடுப்புகளை எமக்கு அனுப்பித் தந்தால் தரமானவற்றைத் தேர்வு செய்து எமது இப்பதிவில் நன்றியுடன் பதிவு செய்கிறோம்.

இணையத்தில் காணக் கிடைக்கும் தரமான இஸ்லாமியத் தமிழ் வலைத்தளங்கள் மற்றும் வலைப்பதிவுகளின் விரிவான பட்டியல் ஒன்றையும் இப்பதிவில் வெகு விரைவில் இணைக்க உள்ளோம். ஆர்வமிக்க வலைப் பதிவர்கள் தங்கள் பதிவுகள் பற்றிய விபரங்களை எமக்கு அனுப்பி வைத்தால் பரிசீலனைக்குப்பின் பட்டியலில் சேர்க்கப்படும்.

எமது இப்பதிவுக்கு வருகை தரும் வாசகர்கள் தங்கள் மேலான ஆலோசனைகளையும் அபிப்பிராயங்களையும் எமக்குத் தெரிவித்தால் எமது இப்பதிவை மேலும் சிறப்பாக அமைக்கப் பேருதவியாக இருக்கும். இணையத்தில் செலவிடும் உங்கள் பொன்னான நேரத்தை தமிழ் இஸ்லாம் அரங்கம் இனி மிச்சப்படுத்தும் என நம்புகிறோம்.

மார்க்க சேவையே எமது நோக்கம்

இறைவா! உண்மையை உண்மையென எங்களுக்குக் காண்பித்துத் தந்து அதைப் பின்பற்றி ஓங்கவும் எங்களுக்கு அருள்வாயாக! தீமையை தீமையென எங்களுக்குக் காண்பித்துத் தந்து அதை விட்டு நீங்கவும் எங்களுக்கு அருள்வாயாக!
 
  தொடர்பு கொள்ள: masdooka@gmail.com 

                                             masdooka@hotmail.com

Advertisements

3 பதில்கள்

 1. Assalaamu alaikum,

  Please add my blog also in your blog roll. I started it recently to share the knowledge which we get from the english books and articles to the tamil speaking ummah. Jazakallahu khair.

  website:
  http://iniyaislam.wordpress.com

 2. வ அலைக்குமுஸ்ஸலாம்
  தங்களது ‘இஸ்லாமும் என் எண்ணங்களும் வலைப்பதிவு நமது அரங்கத்தில் ‘இஸ்லாம் பதிவுகள்” பகுதியில் இணைக்கப்பட்டுவிட்டது. தங்கள் ஆர்வத்துக்கு நன்றி.

 3. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

  நான் ஒரு இளைஞன் எனக்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளது எனவே இஸ்லாம் கூறும் திருமணம் மற்றும் உடலுரவு சட்டங்கள் பற்றிய விளக்கங்கள் தேவை மனைவியிடம் முதல் முறையாக அணுகும் போது எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என முஹம்மது நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார் என விளக்கம் அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். எனது வாழ்க்கை இஸ்லாம் காட்டிய வழியில் தொடங்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். முழுமையான விளக்கம் அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

  வஸ்ஸலாம்……..

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: