மேற்கு வங்காளத்தில் முஸ்லிம்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு

கொல்கத்தா:மேற்கு வங்காள மாநிலத்தில் பிற்படுத்தப்பட்ட பிரிவில் உட்பட்ட முஸ்லிம்களை ஒ.பி.சி பிரிவில் உட்படுத்தி 10 சதவீத இடஒதுக்கீடு வழங்க மேற்கு வங்காள அரசு முடிவெடுத்துள்ளது.
கல்வி,பொருளாதாரம்,சமூக ரீதியாக பிற்படுத்தப்பட்ட நிலையிலிலுள்ள முஸ்லிம்களுக்குத்தான் இடஒதுக்கீடு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நான்கரை லட்சம் ரூபாய் ஆண்டு வருமானம் உள்ள முஸ்லிம்கள் இந்தப்பிரிவில் இல்லை. முஸ்லிம்களில் மிகவும் பிற்படுத்தப்பட்ட நிலையிலிலுள்ள முஸ்லிம்களின் மேம்பாட்டிற்காக ரங்கநாத் மிஷ்ரா கமிஷன் அளித்துள்ள சிபாரிசுகளை நடைமுறைப்படுத்த மேற்குவங்காள அரசு தீர்மானித்துள்ளதாக முதல் அமைச்சர் புத்ததேவ் பட்டாச்சாரியா தெரிவித்தார்.

“மத்திய அரசு மிஷ்ரா கமிஷனை நடைமுறைப்படுத்துமா என்பது எங்களுக்கு தெரியாது ஆனாலும் நாங்கள் அதனை நடைமுறைப்படுத்துகிறோம்” என புத்ததேவ் தெரிவித்தார். பிற மாநிலங்களைப் போல் மேற்குவங்காளத்திலும் எஸ்.டி, எஸ்.சி, ஒ.பி.சி பிரிவினருக்கு இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. இது 7 சதவீதம் ஆகும். தற்ப்பொழுது முஸ்லிம்களுக்கு தனியாக 10 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளதால் இந்த சதவீத வரம்பு 17 சதவீதமாக உயர்வதாகவும் அவர் தெரிவித்தார். கல்வி, பொருளாதாரம், சமூக ரீதியாக பிற்படுத்தப்பட்ட நிலையிலிலுள்ள முஸ்லிம்களை கண்டறிவதற்கான நடவடிக்கைகள் ஆரம்பித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இதற்காக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் நல கமிஷன், பிற்படுத்தப்பட்டோர் வளர்ச்சி கமிஷன் ஆகியவற்றை உட்படுத்தி கமிட்டி உருவாக்கப்படும்.

கடந்த பிப்ரவரி1-ஆம் தேதி கூடிய இடது முன்னணி கூட்டத்தில் ரங்கநாத் மிஷ்ரா கமிஷனின் சிபாரிசுகளை ஏற்றுக்கொள்வதாக தெரிவிக்கப்பட்டது. மதத்தின் அடிப்படையில் அல்ல மாறாக முஸ்லிம்களின் சமூக, பொருளாதார பிற்படுத்தப்பட்ட நிலைமையின் அடிப்படையில்தான் இடஒதுக்கீட்டை வழங்கப்போவதாக இடது முன்னணி தலைவர் பிமன் போஸ் தெரிவித்தார்.

கொல்கத்தா மாநகராட்சி, 82 நகராட்சிகளுக்கு வருகிற மே-ஜூன் மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ள சூழலில்தான் இந்த இடஒதுக்கீட்டிற்கான அறிவிப்பு வந்துள்ளது. கடந்த மக்களவைத் தேர்தலில் இடதுசாரிகளுக்கு ஏற்பட்ட தோல்விக்கு முக்கியக்காரணம் இங்குள்ள முஸ்லிம்கள் இடதுசாரிகளை கைகழுகிவிட்டார்கள் என்று கூறப்பட்டது.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

இஸ்ரேல் பிரதமருக்கு அரெஸ்ட் வாரண்ட் ?

துபாய் : சமீபத்தில் துபாயில் ஹ்மாஸ் தலைவர்களில் ஒருவரான மஹ்மூத் அல் மப்ஹுஹ் படுகொலை செய்யப்பட்டதில் இஸ்ரேலின் பங்கு உறுதிப்படுத்தப்பட்டால் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹீக்கு சர்வதேச அரெஸ்ட் வாரண்ட் பிறப்பிக்கப்படும் என்று துபாய் காவல் துறை தலைவர் எச்சரித்துள்ளார்.

ஹமாஸ் தலைவர் மஹ்மூத் கடந்த ஜனவரி 20 அன்று துபாய் ஹோட்டலில் வைத்து கொலை செய்யப்பட்டார். இதை செய்தது இஸ்ரேல் தான் என்று ஹமாஸ் ஆணித்தரமாக சொல்லி வருகிறது. இது பற்றி கருத்து தெரிவிக்க மறுக்கும் இஸ்ரேல் மஹ்மூத் துபாயில் சில ஈரான் தலைவர்களை சந்திக்க வந்ததாகவும் அவரின் வேறு எதிரிகள் இக்கொலையில் பின்னால் இருக்க வாய்ப்புண்டு என்றும் தெரிவித்தது.

இச்சூழலில் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த துபாய் காவல் துறை தலைவர் ஜெனரல் தஹி கஃபன் தமீம் இக்கொலையின் பின்னால் இருப்பது மொஸாத் என்பது உறுதிப்படுத்தப்பட்டால் இஸ்ரேலிய பிரதமருக்கு சர்வதேச அரெஸ்ட் வாரண்ட் பிறப்பிக்கப்படும் என்று தெரிவித்தார். ஏனென்றால் மொஸாத் பிரதமரின் ஒப்புதல் இல்லாமல் செய்திருக்க முடியாது என்றும் அவர் விளக்கினார்.

மேலும் மஹ்மூத் ஈரானிய அதிகாரிகளை சந்திக்க விரும்பினால் அவர் எளிதாக ஈரானுக்கோ அல்லது சிரியாவிற்கோ சென்று சந்தித்திருக்க முடியும். அவர் துபாய்க்கு ஹமாஸின் அலுவலாக வரவில்லை என்றும் எதிர்காலத்தில் ஹமாஸ் மற்றும் மொஸாத்தும் தங்கள் அரசியல் எதிரிகளை பழிவாங்கும் தளமாக துபாயை பயன்படுத்த அனுமதிக்க மாட்டோம் என்றும் கூறினார்.

நன்றி- இந்நேரம்.காம்

சுவிஸ்: மினாரா எதிர்ப்பு பிரச்சாரகர் இஸ்லாத்தை தழுவினார்.

ஸ்டாக்ஹோம்:சுவிட்சர்லாந்து நாட்டில் முஸ்லிம் மஸ்ஜிதுகளில் கட்டப்படும் மினாராக்களுக்கெதிரான பிரச்சாரத்திற்கு தலைமை வகித்ததாக கூறப்படும் அரசியல் தலைவர் டானியல் ஸ்ட்ரீக் இஸ்லாத்தை தழுவினார்.

மினாராக்கள் கட்டுவதை தடைச் செய்ய வேண்டுமென்றூம், மஸ்ஜிதுகளை பூட்டவேண்டும் என்றும் கோரிக்கைகளை முன்வைத்து பிரச்சாரத்தை துவக்கியவர்தான் ஸ்ட்ரீக். இவர் சுவிஸ் பீப்பிள்ஸ் பார்டியின் முக்கிய நபர்.மினாராக்கள் கட்டுவதை எதிர்த்த அரசியல் தலைவர் ஒருவர் இஸ்லாத்தை தழுவியது சுவிஸ் நாட்டில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.

நாடு முழுவதும் ஸ்ட்ரீக் நடத்திய மினாராக்களுக்கெதிரான பிரச்சாரம் இஸ்லாத்திர்கெதிரான மக்களின் எதிர்ப்பை அதிகரித்தது. தனது கடந்த கால நடவடிக்கைகளுக்காக வெட்கப்படுவதாகவும், ஐரோப்பாவிலேயே மிக உயர்ந்த மஸ்ஜித் கட்டுவதற்கு தான் விரும்புவதாகவும் ஸ்ட்ரீக் தெரிவித்தார்.

தற்ப்போது சுவிஸ் நாட்டில் 4 மஸ்ஜிதுகளே உள்ளன. ஐந்தாவது மஸ்ஜிதின் அடிக்கல் நாட்டுவது தானாக வேண்டுமென்பது ஸ்ட்ரீக்கின் விருப்பமாகும். மதரீதியான பொறுமைக்கும், நல்லிணக்கத்திற்கும் பிரச்சாரகராக தான் விரும்புவதாகவும் ஸ்ட்ரீக் தெரிவிக்கிறார்.

ஐரோப்பியர்களுக்கு இஸ்லாத்தை குறித்து புரிந்துக்கொள்ள விருப்பமுண்டு என்று முஸ்லிம்களின் நலனுக்காக செயல்படும் அரசு சார்பற்ற அமைப்பான ஒ.பி.ஐயின் தலைவர் அப்துல் மஜீத் அல்தாயி தெரிவிக்கிறார்.

மேலும் அவர் கூறும்போது “சிலர் ஸ்ட்ரீக்கைப் போல் பயங்கரவாதத்திற்கும் இஸ்லாத்திற்கும் இடையிலுள்ள தொடர்பைக் குறித்து அறிய முயற்சிக்கின்றனர். இஸ்லாத்தை எதிர்ப்பதற்காகவே ஸ்ட்ரீக் குர்ஆனை படித்தார். குர்ஆனை ஆழமாக சிந்தித்த போது முடிவு எதிர்மறையாக மாறியது”.என்றார்.

சமீபத்தில் சுவிட்சர்லாந்தில் மினாராக்களை தடைச்செய்வது குறித்து விருப்ப வாக்கெடுப்பில் சுவிஸ் நாட்டவர்கள் மினாராக்களை தடைச் செய்ய ஆதரவாக வாக்களித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி-சத்தியத்தை நோக்கி

வெளிநாடு வாழ் இந்தியருக்கு வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு வேண்டும் :

துபாய் : வெளிநாடு வாழ் இந்தியருக்கு வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு வேண்டும் என புதுதில்லியில் சமீபத்தில் நடைபெற்ற எட்டாவது வெளிநாடு வாழ் இந்தியர் மாநாட்டில் வெளிநாடு வாழ் இந்திய‌ அமைச்ச‌க‌த்தின் அழைப்பின் பேரில் சிற‌ப்பு அழைப்பாள‌ராக‌ க‌ல‌ந்து கொண்டு துபாய் ஈடிஏ அஸ்கான் ஸ்டார் குழும மேலாண்மை இயக்குநர் அல்ஹாஜ் செய்யது எம் ஸலாஹூத்தீன் வேண்டுகோள் விடுத்தார்.
மேலும் அவர் தனது உரையில் கூறியதாவது இந்தியர்கள் உலகின் எப்பகுதிகளில் வாழ்ந்து வந்தாலும் அவர்கள் உலகின் எப்பகுதிகளில் சந்தித்துக் கொண்டாலும் அது தொப்புள் கொடி உறவைப் போன்றது என முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் கூறியதை மேற்கோள் காட்டினார்.இந்தியர்களுக்கும், அரேபியர்களுக்கும் இடையேயான வர்த்தகம் மற்றும் கலாச்சார நிகழ்வுகள் பண்டைக் காலத்தில் இருந்து தொடர்ந்து வருகிறது. அமீரகத்தில் வாழ்ந்து வரும் இந்தியர்கள் தாங்கள் மேலைநாடுகளில் வாழ்வது போலல்லாது தங்களது தாயகத்தில் வாழ்ந்து வருவது போல் அதே மொழி, இனம், கலாச்சாரம், பண்பாடு ஆகிய சிந்தாந்தம் மாறாமல் வாழ்ந்து வருவதிலிருந்து இதனை அறியலாம் என்றார்.
வளைகுடா  நாடுகளில் வரும் காலங்களில் பல்வேறு கட்டமைப்பு திட்டங்கள் மேற்கொள்ளப்பட இருப்பதால் இந்திய முதலீட்டாளர்களுக்கு பெரும் வாய்ப்புகள் இருக்கின்றன என தெரிவித்தார்.
வெளிநாடு வாழ் இந்திய தொழிலதிபர்கள் இந்தியாவில் முதலீடு செய்வதில் இருக்கும் தடைகள் களையப்பட வேண்டும். இதற்காக ஒற்றைச்சாளர முறை நடைமுறைப்படுத்த வேண்டும்.
வெளிநாடு வாழ் இந்தியர்கள் தாயகம் திரும்பிய பின்னர் அரசுப் பணிக்காக விண்ணப்பிக்கும் போது அவர்களுக்கு முன்னாள் ராணுவத்தினர் உள்ளிட்டோருக்கு இட ஒதுக்கீடு அளிப்பது போல் இட ஒதுக்கீடு, வயது உச்சவரம்பு  தளர்வு உள்ளிட்டவற்றில் சலுகை வழங்கப்பட வேண்டும்.

இந்தியாவில் உள்ள அனைத்து சர்வதேச விமான நிலையங்களில் வருகை மற்றும் புறப்பாட்டின் போது  விண்ணப்படிவத்தை நிரப்பி இமிக்ரேஷன் அலுவலர்களிடம் கொடுப்பதற்காக காத்திருக்கும் முறையினை நீக்கி அவர்களது பாஸ்போர்ட்டில் இருந்தே தேவையான விபரங்களை எடுத்துக் கொள்ளும் வகையில் புதிய முறை நடைமுறைப்படுத்த வேண்டும்.  வெளிநாடுகளில் இருப்பது போல் ஈ கேட் ( E – Gate ) முறையினை அமுல்படுத்த வேண்டும். இது அடிக்கடி பயணம் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு பெரிதும் உதவியாக இருக்கும்.வெளிநாடு வாழ் இந்தியர்கள் தங்களுக்கு ஏற்படும் நீதி மற்றும்  நிர்வாகம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு ஒரு தனி நீதித்துறையினை ஏற்படுத்த வேண்டும். மேலும் இதற்கென ஒவ்வொரு மாவட்டத்திலும் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கென சிறப்பு காவல் நிலையம் மற்றும் நீதிமன்றத்தினை ஏற்படுத்தி விரைவான நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.வெளிநாடு வாழ் இந்தியர்கள் அனுப்பும் பணத்தின் மூலம் அந்நியச் செலவானி மூலம் அரசுக்கு முக்கிய வருவாய் கிடைத்து வருகிறது. இவ்வாறு பணம் அனுப்பும் போது எக்ஸ்ஜேஞ்சில் வசூலிக்கப்படும் சேவைக் கட்டணம் நீக்கப்பட வேண்டும்.
இந்திய கல்வி நிறுவனங்களில் வெளிநாடு வாழ் இந்தியர்களின் குழந்தைகளுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும்.வெளிநாடு வாழ் இந்தியர்களின் குழந்தைகளுக்காக வெளிநாடுகளில் குறிப்பாக வளைகுடா நாடுகளில் இந்திய நிறுவனங்களால் துவக்கப்படும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு சிறப்புச் சலுகைகள் வழங்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றித்தர அரசுக்கு வேண்டுகோள் விடுத்தார்.துபாய் ஈடிஏ அஸ்கான் ஸ்டார் நிறுவனம் 73,000 பேரை ஊழியர்களாக்க் கொண்ட நிறுவனம். இதில் 75 சதவீதம் பேர் இந்தியர்கள்  இதில் 25,000 பேர் த‌மிழ‌ர்க‌ள் என்ப‌து குறிப்பிட‌த்த‌க்க‌து.  இந்தியாவிற்கு வெளியே அதிக இந்திய‌ர்க‌ளை பணிக்கமர்த்திய நிறுவனம்  ஈடிஏ அஸ்கான் ஸ்டார் நிறுவ‌ன‌ம் என்ப‌து குறிப்பிட‌த்த‌க்க‌து.
இந்நிறுவனம் கிராமப்புற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பளிக்கும் வண்ணம் தமிழகத்தில் மூன்று பயிற்சி மையங்களும், மத்திய பிரதேசத்தில் ஒரு பயிற்சி மையமும் செயல்பட்டு வருகிறது. விரைவில் ஐந்து பயிற்சி மையங்கள் துவங்கப்பட இருக்கின்றன. மேலும் பட்டதாரிகள், முதுநிலைப் பட்டதாரிகள், பொறியாளர்கள், எம்.பி.ஏ, சி.ஏ. உள்ளிட்ட படிப்பினை முடித்தவர்களும் பயிற்சியளிக்கப்படுகின்றனர்.
இவ்விவாதாத்தின் போது  ந‌டுவ‌ர்க‌ளாக‌ வெளிநாடு இந்தியர் நலத்துறை அமைச்சர் வயலார் ரவி, மத்திய வெளியுறவுத்துறை இணையமைச்சர் சசிதரூர், ரயில்வே இணையமைச்சர் இ. அஹமது,  தொழிலதிபர்கள், வெளிநாடு வாழ் இந்தியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
வ‌ளைகுடாப் ப‌குதியிலிருந்து இந்திய‌ அர‌சு அழைப்பின் பேரில் சிற‌ப்பு அழைப்பாள‌ராக‌ ப‌ங்கேற்ற‌ ஒரே த‌மிழ‌ர் செய்யது எம் ஸலாஹூத்தீன் என்ப‌து குறிப்பிட‌த்த‌க்க‌து.

நன்றி-முதுகுளத்தூர்.காம்

யுத்தமும் சிலுவையும்

மெரிக்காவை உலுக்கி, உலகை வியப்பில் ஆழ்த்திய 9/11 சம்பவத்திற்குப் பிறகு அப்போதைய அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் இராக்கையும் ஆப்கனையும் நோக்கிப் போர் தொடுத்தார். கிறித்தவ மதப் பற்றாளனரான அவர் அப்போது அமெரிக்கர்களுக்கு ஆற்றிய ஓர் உரையில் “இந்த சிலுவை யுத்தம், தீவிரவாதத்திற்கு எதிரான இந்தப் போர், நீண்ட நாள் எடுக்கும்” என்று உள்ளத்தில் உள்ளதை பட்டென்று சொல்லிவிட்டார்.

அமெரிக்கப் படைகளுக்கு நிலம் கொடுத்து, கணைகள் ஏவத் தளம் கொடுத்து, சம்பந்தம் செய்து கொள்ளாத குறையாகத் தோளில் கைபோட்டுக் கொண்டு “மூழ்காதே ஷிப்பே ஃபிரண்ட்ஷிப் தான்” என்று பாட்டுப் பாடிக் கொண்டிருந்த அரபு நாட்டு மன்னர்கள் சில நாட்களிலேயே அடுத்த கையைக் கன்னத்தில் வைத்துக் கொண்டனர்.

அது பிரச்சினை! “சிலுவைப் போர்” என்ற வாசகமே பிரச்னை. உள் நாட்டில் பொதுமக்களிடம் கிளர்ச்சியை உண்டாக்கும். அமெரிக்காவிடம் சங்காத்தம் வைத்துக் கொண்டு இராக், ஆப்கன் போருக்குத் தோள் கொடுப்பதற்கு மக்கள் சங்கடம் விளைவிப்பார்கள்.

தலையில் அடித்துக் கொண்ட புஷ்ஷின் அதிகாரிகள் அமெரிக்கக் காங்கிரஸிற்கு வாக்குத் தெரிவித்தார்கள் – “இது இஸ்லாத்திற்கு எதிரான போர் எல்லாம் கிடையாது. உலக ஞானம் குறைவாயுள்ள நம் ஐயா சற்று தட்டுக் கெட்டுச் சொல்லிவிட்டார், தீவிரவாத கெட்டப் பிள்ளைகளுக்கு எதிரான போர் மட்டுமே இது”.

அரபு மன்னர்களும், “ஆமாமாம். அதிபர் தப்பாய் சொல்லிவிட்டார். இது இஸ்லாத்திற்கு எதிரான போர் அல்ல. எனவே தோள் கொடுக்க வேண்டியது காலத்தின் கட்டாயம், நட்பின் இலக்கணம்” என்று தமது நாட்டில் அமெரிக்கப் படைகளுக்கு அனைத்து சௌகரியங்களும் செய்து கொடுத்தனர்.

போர் தொடங்கியது.

பின்னர் ஈராக்கில் சிறைக்கூடங்களில் நடந்தேறிய அவலங்களும், ஆண்களுக்கும் பெண்களுக்கும் நிகழ்த்தப்பட்ட கொடுமைகளும், குர்ஆன் அவமதிப்பு நிகழ்ச்சிகளும் – அவையெல்லாம் தனிக் கதை, தனி நாவல்.

சென்ற வருடம், ஆவணப்படம் தயாரிக்கும் அமெரிக்கர் ஒருவர் ஆப்கன் பாக்ராம் ராணுவ விமான தளத்தில் அமெரிக்க ராணுவ மதகுருமார்களின் உரையாடல் ஒன்றைத் தெரிந்தோ தெரியாமலோ பதிவு செய்து விட்டார். ஆப்கனியர்கள் பேசும் புஷ்த்து மொழியில் அச்சிட்டுள்ள பைபிளை எப்படி விநியோகம் செய்வது என்ற ஆலோசனை அளவளாவல் அது. எப்படியோ அல்-ஜஸீரா தொலைக்காட்சிக்கு அந்தப் பதிவு வந்து விட்டது. உடனே செய்தியை வெளியிட்டு விட்டார்கள். [வாசிக்க: http://english.aljazeera.net/news/asia/2009/05/200953201315854832.html]

தொடர்ந்து  வாசிக்க……

இஸ்லாத்திற்குள் வாருங்கள்!‏

அன்பின் சகோதர, சகோதரிகளே நாம் இறைவனால் படைக்கப்பட்ட, அறிவு கொடுக்கப்பட்ட, சிந்திக்கக்கூடிய மனித இனமாக இருக்கிறோம் ஆனால் இந்த சிந்தனைத் திறனைக் கொண்டு எதை சிந்திக்க வேண்டுமோ அதை சிந்திக்காமல் சிந்தனையை சிதறடிக்கும் விதமான செயல்களில் ஈடுபடுகிறோம். இறுதியாக படைத்த இறைவனைப் பற்றியே தாருமாராகவும் அவன் இருக்கிறானா? இல்லையா? அவன் இருந்தால் எப்படி இருப்பான்? அவனது உருவம் எப்படி இருக்கும் என்று கேள்வி எழுப்புகிறோம் இந்தக் கேள்வி இறைவனைப் பற்றி அறிந்துக் கொள்வதற்காக கேட்கப்பட்டல் பரவாயில்லை மாறாக இறைவனை இகழக்கூடிய விதமாக அமைந்துவிட்டால் அது மோசமான விளைவுகளை ஏற்படுத்திவிடுகிறது. இதோ மாற்று மதத்தவர்களால் நாள்தோறும் விரும்பிக் கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில்களை இந்தக் கட்டுரையாக வடிவமைத்து உங்கள் முன் சமர்ப்பிக்கப்படுகிறது.

முதல் கேள்வி – கடவுள் உண்டா?

அனைத்து படைப்பினங்களையும் அல்லாஹ் படைத்துவிட்டு மனிதனுக்கு மட்டும் அறிவு, சிந்திக்கும் ஆற்றல், தன்னிச்சையாக முடிவெடுக்கும் திறன், பாவமன்னிப்பு கோரும் தன்மை ஆகியவற்றை கொடுத்து தனது படைப்பினங்களிலேயே மிகச் சிறந்த படைப்பாக நம்மை புகழ்கிறானே அந்த கடவுள் (அல்லாஹ்) இருக்கிறானா? என்று கேட்கிறார்கள் இந்தக் கேள்வியைக் கேட்பதற்கு முன் இவர்கள் என்றைக்காவது கீழ்கண்டவற்றை சிந்தித்த துண்டா?

· தினமும் சூரியன் உதிக்கிறது, மறைகிறது!

· இரவும் பகலும் மாறி மாறி இயங்கிக்கொண்டிருக்கிறது!

· சந்திரன் பல நிலைகளை அடைகிறது!

· மெல்லிய காற்றுடன் மழை பொழிகிறது!

· மேகக்கூட்டங்கள் கீழே விழாமல் விண்ணில் மிதக்கிறது!

· இடி இடிக்கிறது மின்னல் மின்னுகிறது!

மேற்கண்ட இவைகள் மனிதனால் இயக்க முடியாதவை மேலும் மனித சக்திக்கு அப்பாற்பட்டவை! இப்படிப்பட்ட சக்திகளை இயக்குவதற்கு ஒரு ஆற்றல் இருப்பது உண்மையென்றால் கடவுள் இருப்பதும் உண்மைதானே! அவ்வாறு இருக்க நம்மில் பலருக்கு ஏன் இந்த சந்தேகம்!

அல்லாஹ் கூறுகின்றான்;
அல்லாஹ் எத்தகையவன் என்றால் அவன் தான் வானங்களையும், பூமியையும் படைத்து வானத்திலிருந்து மழையையும் பொழியச் செய்து அதைக் கொண்டு கனிவர்க்கங்களையும் உங்களுக்கு – ஆகாரமாக வெளிப்படுத்தித் தன் கட்டளையினால் கடலில் செல்லுமாறு கப்பலை உங்களுக்கு வசப்படுத்திக் கொடுத்தும், ஆறுகளையும் உங்களுக்கு வசப்படுத்தித்தந்தான். அல்குர்ஆன் 14:32

இரண்டாம் கேள்வி – கடவுளை ஏன் பார்க்க முடியவில்லை?

இறைவன் இருக்கிறானா என்று கேட்ட மனிதன் இப்போது இறைவனை ஏன் பார்க்க முடிவதில்லை என்று கேள்வி எழுப்புகிறான் ஆனால் ஒருநாள் கூட அவனால் தன் உடலில் ஒட்டிக் கொண்டிருக்கும் தன்னுடைய உயிரை பார்க்க முடிவதில்லை! என்றைக்காவது இது பற்றி அவன் சிந்தித்தது உண்டா?

மனிதனோ தன்னுடைய உயிரைக்கூட பார்க்கக் வக்கற்றவனாக படைக்கப்பட்டுள்ளான் ஆனால் படைத்த இறைவனைப் பார்க்க ஆசைப்படுகிறான் ஆசை நிராசையானதும் விரக்தியுடன் கடவுள் இருந்தால் தென்படுவான் அவன் இல்லை அதனால்தான் பார்க்க முடிவதில்லை என்கிறான்! இது இவனது அறியாமையா? இவனது இயலாமையா?

இறைவனை இந்த உலகில் பார்க்க முடியாது என்று பல்வேறு வேதங்கள் சான்றுரைக்கின்றன அப்படிப்பட்ட வேதங்களின் வரிசையில் இந்துமத வேதமான யஜூர் வேதம் மற்றும் நமது அருள்மறை திருக்குர்ஆன் ஆகியன படைத்த இறைவனை பார்க்க முடியாது என்று ஆணித்தரமாக தெளிவாக சாட்சி கூறுகின்றன இதோ ஆதாரங்கள் உங்கள் முன் சமர்ப்பிக்கப்படுகிறது!

அவனை உருவகிக்க முடியாது, அவன் தான் தோன்றி. நமது வணக்க வழிபாடுகளுக்கு தகுதியுள்ளவன். உருவமற்ற அவனின் கீர்த்தி மிகப்பெரிது. வானில் உள்ள அத்தனை கோள்களின் இயக்கங்களையும் தன்னகத்தே வைத்துள்ளவன்.

(தேவிசந்த்- யஜூர் வேதம் பக்கம் 377)

பார்வைகள் அவனை அடைய முடியா. ஆனால் அவனோ எல்லாப் பார்வைகளையும் சூழ்ந்து அடைகின்றான். (அருள்மறை குர்ஆன் 6: 103)

ஆனால் அருள்மறை குர்ஆன் ஒருபடி முன்னே சென்று இம்மையில் எவராலும் அல்லாஹ்வை பார்க்க முடியாது என்றும் மறுமையில் அல்லாஹ்வை பார்க்க முடியும் என்றும் ஒளிவு மறைவு இன்றி கூறுகிறது!

மூன்றாம் கேள்வி – கடவுள் எவ்வாறு படைக்கப்பட்டான்?

கடவுள் இருக்கிறான் என்பதை அறிந்துக்கொண்டோம், அவனைப் பார்க்க முடியாது என்பதையும் அறிந்துக்கொண்டோம் அப்படி யானால் அவனை யார் படைத்தது என்பதே உங்களின் அடுத்த கேள்வியாக அமையும் ஆம் இது கேட்கப்படக்கூடிய கேள்விதான்!  காரணம் நாம் பிறக்கிறோம் அதற்கு தாய், தகப்பன் உதவி தேவை எனவேதான் இந்த கேள்வி எழுகிறது ஆனால் மனிதன் சிந்திக்க வேண்டும்!

மனித இனமாகிய நமக்குதான் பெற்றோர் தேவை இறைவன் மனித இனமில்லையே அப்படி இருக்க அவனுக்கு ஏது படைப்பு!  உதாரணமாக ஒரு தொலைக்காட்சி பெட்டியை நீங்கள் உங்கள் கைகளால் உருவாக்குகிறீர்கள் அப்படியானால் தொலைக் காட்சிப் பெட்டியாக நீங்கள் இருப்பீரா? இல்லையே!

கடவுளை யாரும் படைக்க முடியாது என்று எத்தனையோ வேதங்கள் சாட்சிகூறுகின்றன அவைகளின் வரிசையில் யஜூர் வேதம் மற்றும் நமது அருள்மறை திருக்குர்ஆன் ஆகியன இறைவனை யாராலும் படைக்க முடியாது என்று தெளிவாக சாட்சி கூறுகின்றன இதோ ஆதாரங்கள் உங்கள் முன் சமர்ப்பிக்கப்படுகிறது!

அவனை உருவகிக்க முடியாது, அவன் தான் தோன்றி. நமது வணக்க வழிபாடுகளுக்கு தகுதியுள்ளவன். உருவமற்ற அவனின் கீர்த்தி மிகப்பெரிது. வானில் உள்ள அத்தனை கோள்களின் இயக்கங்களையும் தன்னகத்தே வைத்துள்ளவன். (தேவிசந்த்- யஜூர் வேதம் பக்கம் 377)

அல்லாஹ் ஒருவன்” என (முஹம்மத் ) நீர் கூறுவீராக!. அல்லாஹ் தேவையற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை (யாருக்கும்) பிறக்கவும் இல்லை. மேலும் அவனுக்கு நிகராக ஒருவரும் இல்லை (அல்குர்ஆன் 118-1-5)

இந்துமதமோ இறைவனை பார்க்க முடியாது படைக்க முடியாது என்று சாட்சி கூற இறைவேதமான அருள்மறை குர்ஆன் இறைவனுக்கு பிறப்பும் இல்லை, இறப்பும் இல்லை, பெற்றோர், மனைவி, பிள்ளை இல்லை என்று இழிவு கிடையாது இறைவன் இறைவனாகத்தான் இருக்கிறான் என்று தெள்ளத் தெளிவாக சாட்சி கூறுகிறது.

நான்காம் கேள்வி இறைவனுக்கு சிலை, உருவம் கூடாதா?

நம்மால் இந்த உலகில் கடவுளை எங்கும் பார்க்க முடியாது என்பதை இந்துமத வேதம் மற்றும் அல்குர்ஆன் வாயிலாக தெளிவாக அறிந்துக் கொண்டோம் நிலைமை இப்படி இருக்க, கடவுள் இப்படி இருப்பாரோ? அப்படி இருப்பாரோ என்று கற்பனை செய்வது கூடுமா?

உதாரணமாக ஒரு ஆப்பிள் பழத்தை எடுத்துக் கொள்வோம் இந்த பழத்தை பற்றி ஆப்ரிக்காவில் வாழும் ஒரு ஆதிவாசி வாழ்நாளில் ஒருமுறைகூட கண்களில் பார்க்கவில்லை, சுவையை அறியவில்லை ஆனால் காதுகளால் ஆப்பிள் என்ற பழம் ஒன்று உள்ளது என்பதை கேட்டுள்ளான் என்று வைத்துக்கொள்வோம் இப்போது இந்த ஆதிவாசி பெயர் சொல்லத் தெரியாத கடுக்காயை காயை கையில் எடுத்துக் கொண்டு தம் ஆதிவாசி சமுதாய மக்களிடம் சென்று கடுக்காயை நீட்டி இது ஆப்பிள் பழம் இதன் சுவை கசப்பாக இருக்கும் என்று கூறினால் மோசம் போவது யார்?

சிந்தித்துப் பாருங்கள் அந்த ஆதிவாசி தம் சமுதாயத்திடம் சென்று ஆப்பிள் பழத்தின் சுவை, நிறம், எடை, தோற்றம் ஆகியவைகளை நான் உணரவில்லை ஆனால் ஆப்பிள் என்ற பழம் உள்ளது என்று கூறினால் அவன் உண்மை பேசுகிறான் என்று அர்த்தம்? அல்லது கடுக்காயைத்தான் ஆப்பிள் பழம் என்று தானும் தவறாக எண்ணிக்கொண்டு தம் சமுதாய மக்களையும் குழப்பினால் அவன் பொய் பேசுகிறான் என்றுதானே அர்த்தம்?

மேற்கண்ட ஆப்பிள் பழ உதாரணத்தை கடவுளுக்கும் என சிந்தித்துப்பாருங்கள் கடவுளையும் அவனுடைய அழகிய தோற்றத்தையும் கண்களால் காணவில்லை ஆனால் கடவுள் இருக்கிறான் என்பதை அறிந்து வைத்துள்ள மக்களில் ஒரு பகுதியினர் கல்லை எடுத்து கலை நுணுக்கத்துடன் உருவம் கொடுத்து இதுதான் கடவுள் என்றால் என்ன சொல்வது? அந்த அறிவற்ற ஆதிவாசிக்கும் அறிவுள்ள நகரவாசிக்கும் என்ன வித்தியாசம்!

இறைவனுக்கு எந்த வஸ்துவை வைத்தும் இணை வைக்கக்கூடாது என்று எத்தனையோ வேதங்கள் உண்மை கூறுகின்றன அவற்றின் பட்டியலில் இந்துமத வேதமும், கிருத்தவ பைபிளும், உலகப் பொதுமறை அருள்மறை குர்ஆனும் மனிதவர்க்கத்தை நோக்கி இறைவனுக்கு எந்த வஸ்துவை வைத்தும் இணை வைக்கக்கூடாது என்று கடுமையாக எச்சரிக்கை விடுக்கிறது அறிந்துக் கொள்ளுங்கள்!

இறைவனுக்கு இணைவைப்பதை எதிர்க்கும் இந்துமத வேதம்

“ந தஸ்ய ப்ரதிமா அஸ்தி”

(யஜூர் வேதம் 32:3)

பொருள்

அவனை உருவகிக்க முடியாது, அவன் தான் தோன்றி. நமது வணக்க வழிபாடுகளுக்கு தகுதியுள்ளவன். உருவமற்ற அவனின் கீர்த்தி மிகப்பெரிது. வானில் உள்ள அத்தனை கோள்களின் இயக்கங்களையும் தன்னகத்தே வைத்துள்ளவன்.

(தேவிசந்த்- யஜூர் வேதம் பக்கம் 377)

அவன் உருவமற்றவன். தூய்மையானவன். ஓளிமயமான உருவமற்ற, காயமற்ற, பாவங்களற்ற, தூய்மையான பாவங்கள் அண்டாத ஞான வடிவானவன். அவன் நித்திய ஜீவன். 40:8
(
யஜீர்வேத சம்ஹிதா- ரால்ப் T.H. கிரிப்ட் பக்கம் 538)

இறைவனுக்கு இணைவைப்பதை எதிர்க்கும் பைபிள் வசனம்

விக்கிரகங்களை உருவாக்குகிற யாவரும் வீணர்; அவர்களால் இச்சிக்கப்பட்டவைகள் ஒன்றுக்கும் உதவாது; அவைகள் ஒன்றும் காணமலும், ஒன்றும் அதறியாமலும் இருக்கிறதென்று தங்ளுக்கு வெட்கமுண்டாக அவைகளுக்குத் தாங்களே சாட்சிகளா யிருக்கிறார்கள். அவைகளுக்கு வாயிருந்தும் பேசாது; அவைகளுக்குக் கண்களிருந்தும் காணாது.

ஏசாயா 44:9 (Isaiah 44:6,9-20)9.

இறைவனுக்கு இணைவைப்பதை எதிர்க்கும் திருக்குர்ஆன்

وَاعْبُدُواْ اللّهَ وَلاَ تُشْرِكُواْ بِهِ شَيْئًا

மேலும், அல்லாஹ்வை வணங்குங்கள். அவனுக்கு எதையும் இணைவைக்காதீர்கள்

(அல்குர்ஆன் 4:36)

இணைவைப்பவர்கள் நஷ்டவாளிகள் என்று கூறும் வேதங்கள்

இயற்கைப் பொருட்களை வணங்குவோர் இருளில் புகுவர் (காற்று, நீர், நெருப்பை வணங்குவோர்) அவர்கள் மேலும் இருளில் மூழ்குவர். எவர் படைக்கப்பட்ட பொருளை வணங்குகிறாரோ (மரம் சூரியன், சிலை வணங்குவோர்)

இருளில் மூழ்குவர். 40:9

(யஜீர்வேத சம்ஹிதா- ரால்ப் வு.ர். கிரிப்ட் பக்கம் 538)

அவர்களுடைய விக்கிரகங்கள் வெள்ளியும் பொன்னும், மனுஷருடைய கைவேலையுமாயிருக்கிறது. அவைகளுக்குக் காதுகளிருந்தும் கேளாது; அவைகளுக்கு மூக்கிருந்தும் முகராது. அவைகளுக்குக் கைகளிருந்தும் தொடாது; அவைகளுக்குக் கால்களிருந்தும் நடவாது; தங்கள் தொண்டையால் சத்தமிடவும் மாட்டாது. அவைகளைப் பண்ணுகிறவர்களும், அவைகளை நம்புகிற வர்கள் யாவரும், அவைகளைப்போலவே இருக்கிறார்கள்.

(பைபிள்) சங்கீதம் 115:3-8 (Psalms 115:3-8)

விக்கிரகங்களை உருவாக்குகிற யாவரும் வீணர்; அவர்களால் இச்சிக்கப்பட்டவைகள் ஒன்றுக்கும் உதவாது; அவைகள் ஒன்றும் காணமலும், ஒன்றும் அதறியாமலும் இருக்கிறதென்று தங்ளுக்கு வெட்கமுண்டாக அவைகளுக்குத் தாங்களே சாட்சிகளா யிருக்கிறார்கள். 4. அவைகளுக்கு வாயிருந்தும் பேசாது; அவைகளுக்குக் கண்களிருந்தும் காணாது.

ஏசாயா 44:9 (Isaiah 44:6,9-20)9.

நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணை கற்பிப்பதை மன்னிக்க மாட்டான் அதற்கு கீழ் நிலையில் உள்ள (பாவத்)தை தான் நாடியவர்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பவர் மிகப் பெரிய பாவத்தையே கற்பனை செய்கிறார்.” (திருக்குர்ஆன், 004:048,116)

ஐந்தாம் கேள்வி ஏன் பல கடவுள்களை வணங்கக்கூடாது?

ஒரு கடவுளால் ஒன்றும் செய்ய முடியாது பல கடவுள் இருந்தால் நலமாக இருக்கும் என மாற்றுமதத்தவர்கள் நம்புகிறார்கள் அது முறையற்ற வாதமாகும். பல கடவுள் கொள்கை நம்புபவர்கள் கீழ்கண்ட உதாரணத்தை அறிந்துக் கொண்டால் தங்கள் வாதம் முற்றிலும் தவறானது என்பதை உணர்ந்துக் கொள்வார்கள்

ஒரு மனிதன் 10 பாவங்கள் செய்துவிட்டான் உடனே பகவானை-1 அணுகி பாவ மன்னிப்பு கேட்கிறான் ஆனால் பகவானோ-1 ஒரு பாவத்தை மட்டும் மன்னித்துவிட்டு மற்ற 9 பாவங்களை மன்னிக்க முடியாது என்று கூறி கைவிறிக்கிறார் என்று வைத்துக்கொள்வோம் உடனே அந்த பாவியான மனிதன் மற்ற 9 பாவங்களை சுமந்துக்கொண்டு பகவான்-2. பகவான்-3, பகவான்-4, பகவான்-5 ஆகியோரிடம் செல்கிறான் அவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு பாவத்தை மன்னித்து விடடுகின்றனர் இப்படிப்பட்ட நிலையில் முதன் முதலாக மன்னிக்க மாட்டேன் என்று கூறிய பகவான்-1க்கு என்ன மரியாதை இருக்கிறது.

சரி, ஆண் பகவான் ஒரு பாவத்தை மன்னிக்கவில்லை உடனே பெண் பகவானிடம் செல்கிறான் அதுவும் மன்னிக்கவில்லை உடனே அண்-பெண் (ஆண் பாதி, பெண் பாதி) கடவுளிடம் செல்கிறான் உடனே பாதி உடல் கொண்ட அண்-பெண்  பகவான் மன்னித்துவிடுகிறது. இங்கு கேள்வி என்னவெனில் ஆண் மற்றும் பெண் பகவான் ஆகியோர் தனித்தனியாக இருக்கும் போது மன்னிக்கமாட்டேன் என்று கூறிய ஒரு பாவத்தை இருவரும் இணைந்து அண்-பெண்  பகவானாக இருக்கும்போது மன்னிப் பார்களா?

கீழ்கண்ட யஜுர் வேத வசனத்தில் இறைவனைக் குறித்து அவன் என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளதை உற்று நோக்கவும் இந்த வசனத்தில் அவர்கள் என பண்மையாக இருந்தால் பல கடவுள்கள் வணங்க வேதம் அறிவுறுத்தியிருக்கும் ஆனால் இறைவனை ஒருமையாக அவன் என்று வர்ணிக்கப்பட்டுள்ளதை கவனிக்க வேண்டும்.

அவன் உருவமற்றவன். தூய்மையானவன். ஓளிமயமான உருவமற்ற, காயமற்ற, பாவங்களற்ற, தூய்மையான பாவங்கள் அண்டாத ஞான வடிவானவன். அவன் நித்திய ஜீவன். 40:8
(
யஜீர்வேத சம்ஹிதா- ரால்ப் T.H. கிரிப்ட் பக்கம் 538)

ஆறாம் கேள்விஏசுநாதர் இறைவன் மகன் இல்லையா?

ஏசுநாதர் தந்தையின்றி பிறந்ததால் அவரை இறைவன் மகன் என்று கிருத்தவர்கள் வர்ணிக்கிறார்கள் காரணம் ஏசுநாதருக்கு தந்தை கிடையாது என்பதே! தந்தையின்றி பிறந்த ஏசுநாதரை இறைவனின் மகன் என்று கிருத்தவர்கள் வர்ணிக்கும் போது தந்தையும் தாயும் இன்றி பிறந்த ஆதாம் மற்றும் ஏவாலை ஏன் இவர்கள் இறைமகனாக, மகளாக வர்ணிக்கவில்லை! ஆண் துணையின்றி ஏசுநாதர் பிறந்தார் ஆனால் ஆண், பெண் எந்த துணையுமின்றி ஆதாம் படைக்கப்பட்டாரே!

ஏசுநாதர் அதாவது நம் இறைத் தூதர் ஈஸா (அலை) அவர்கள் மனிதர்களின் மீது இரக்கம் கொண்டதாலும் அவர்களின் மீது பரிவு கொண்டதாலும் அவரை உண்மை குமாரர் என்று பைபிள் கூறுகிறது இதனை வைத்துக்கொண்டே கிருத்தவர்கள் ஏசுநாதரை சர்வ வல்லமை படைத்த பிதாவின் குமாரர் என்று கூறுகின்றனர் ஆனால் அதே பைபிள் வேதம் சாதாரண மனிதர்கள் கூட பிதாவுக்கு உண்மையான குமாரர்களாக மாறமுடியும் என்று சாட்சி கூறுகிறது! இந்த உண்மையை ஏன் கிருத்தவர்கள் ஏற்றுக் கொள்வதில்லை. இதோ ஆதாரம் கீழே!

மத்தேயு எழுதிய சுவிசேஷம் 5-ல் பைபிளின் கீழ்கண்ட வசனங்களை படித்துப்பாருங்கள் நீங்களும் தேவ குமாரராகளாம்!

43 உன் சினேகிதனை நேசி. உன் பகைவனை வெறு, என்று கூறப்பட்டுள்ளதை நீங்கள் அறிவீர்கள்.

44 ஆனால் நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், உங்கள் பகைவர்களையும் நேசியுங்கள். உங்களுக்குத் தீமை செய்கிறவர்களுக்காக ஜெபியுங்கள்.

45 நீங்கள் இதைச் செய்தால் பரலோகத்திலிருக்கும் உங்கள் பிதாவுக்கு உண்மையான குமாரர்களாவீர்கள். உங்கள் பிதாவானவர் நல்லவர்களுக்கும் தீயவர்களுக்கும் சூரியனை உதிக்கச் செய்கிறார். உங்கள் பிதாவானவர் நன்மை செய்பவர்களுக்கும் தீமை செய்பவர்களுக்கும் மழையை அனுப்புகிறார்.

46 உங்களை நேசிக்கிறவர்களை மட்டுமே நீங்கள் நேசித்தால், உங்களுக்கு எந்த வெகுமதியும் கிடைக்காது. வரிவசூலிப் பவர்கள் கூட அப்படிச் செய்கிறார்கள்.

47 உங்கள் நண்பர்களுடன் மட்டுமே நீங்கள் இனிமையுடன் பழகினால், மற்றவர்களைவிட நீங்கள் எவ்வகையிலும் சிறந்தவர்கள் அல்ல. தேவனை மறுக்கிறவர்கள் கூட, தங்கள் நண்பர்களுக்கு இனிமையானவராய் இருக்கிறார்கள்.

48 பரலோகத்திலிருக்கும் உங்கள் பிதா மிகச் சிறந்த நற் குணங்கள் கொண்ட பூரணராயிருப்பது போல நீங்களும் பூரணராக இருக்க வேண்டும்.

ஏசுநாதர் தேவ குமாரனா? தேவ ஊழியனா?

சகோதரர்களே! மேற்கண்ட மத்தேயு எழுதிய சுவிசேஷம் 5-ஐ படித்திருப்பீர்கள் இதில் ஏசுநாதர் பிதாவின் மீது உண்மையான விசுவாசம் கொண்டு மனிதர்கள் மீது பரிவு காட்டியது குறிப்பிடப்பட்டுள்ளது அதுபோன்று அவரது சமுதாயமும் விளங்க வேண்டும் அப்போது அவர்கள் பிதாவுக்கு உண்மையான குமாரர்களாவார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது. இங்கு குமாரர்கள் என்ற வார்த்தை ஊழியன் என்ற வகையில் தானே பொருள்படும்! அப்படியானால் தேவ குமாரன் ஏசு என்பதை தேவனின் ஊழியன் ஏசுநாதர் என்றுதானே எடுத்துக்கொள்ள வேண்டும் ஆனால் கிருத்தவர்கள் ஏசுநாதர் உண்மையாளராக இருப்பதால் அவரை தேவ குமாரனாகவும், ஏசுநாதரை பின்பற்றியவர்கள் உண்மை யாளர்களாக இருந்தால் தேவ ஊழியன் என்றும் கூறுவது எந்த விதத்தில் நியாயம்? ஏசுநாதர் தேவ குமாரர் என்றால் அவரைப் பின்பற்றும் அனைவரும் தேவ குமாரர்கள்தான்! ஏசுநாதர் தேவ ஊழியன் என்றால் அவரைப் பின்பற்றும் அனைவரும் தேவ ஊழியர்கள்தான்! இதுதான் உண்மை! ஈஸா (அலை) அல்லாஹ்வின் மகனல்ல! திருக்குர்ஆனை புரட்டிப்பாருங்கள்!

وَقَالَتِ الْيَهُودُ عُزَيْرٌ ابْنُ اللّهِ وَقَالَتْ النَّصَارَى الْمَسِيحُ ابْنُ اللّهِ ذَلِكَ قَوْلُهُم بِأَفْوَاهِهِمْ يُضَاهِؤُونَ قَوْلَ الَّذِينَ كَفَرُواْ مِن قَبْلُ قَاتَلَهُمُ اللّهُ أَنَّى يُؤْفَكُونَ

யூதர்கள் உஜைரை அல்லாஹ்வுடைய மகன் என்று கூறுகிறார்கள்; கிறிஸ்தவர்கள் (ஈஸா) மஸீஹை அல்லாஹ்வுடைய மகன் என்று கூறுகிறார்கள்; இது அவர்கள் வாய்களால் கூறும் கூற்றேயாகும்; இவர்களுக்கு, முன்னிருந்த நிராகரிப்போரின் கூற்றுக்கு இவர்கள் ஒத்துப்போகிறார்கள்; அல்லாஹ் அவர்களை அழிப்பானாக! எங்கே திருப்பப்படுகிறார்கள்? அல்குர்ஆன் 9:30

முடிவுரை

இந்துக்களின் வேதம், கிருத்தவகளின் வேதம் ஆகியன இறைவன் ஒருவன், இணைதுணை இல்லாதவன், படைப்பினங்கள் அவனை இவ்வுலகில் காண முடியாது அவனுக்கு நிகர் யாருமில்லை என்கிறது! இதையே இறுதியாக வந்த அருள்மறை குர்ஆனும் கூறுகிறது.

திருமறைக் குர்ஆனுக்கு முன் வந்த பல வேதங்களில் திருத்தல்கள் இணைப்புகள் என எத்தனையோ நடந்தேரியுள்ளன ஆனாலும் திருமறைக் குர்ஆனில் அப்படிப்பட்ட திருத்தங்கள் எதுவும் நுழையாமல் 1400 ஆண்டுகளாக அல்லாஹ் பாதுகாத்து வருவதும் மேலும் அருள்மறை குர்ஆன் அருளப்படும்போது இருந்த அதே நடையில் சுவையுடன் இருப்பதும் மாபெரும் அற்புதம்தானே!

அல்லாஹ் கூறுகிறான்:

மேலும் (நபியே! முற்றிலும்) உண்மையைக் கொண்டுள்ள இவ்வேதத்தை நாம் உம்மீது இறக்கிவைத்துள்ளோம். இது தனக்கு முன்னுள்ள வேதங்களை உண்மையாக்கி வைக்கக்கூடியதாகவும், அவற்றைப் பாதுகாப்ப தாகவுமிருக்கின்றது‘. (அல்மாயிதா 5:48)

இது(குர்ஆன்) இறைவனின் வேதமாகும். இதில் யாதொரு சந்தேமும் இல்லை. (திருக்குர்ஆன் 2:2)


இது உலக மக்கள் அனைவருக்கும் ஒரு நல்லுரையே அன்றி வேறில்லை.(திருக்குர்ஆன் 68:52)


(
முஹம்மதே) இது ஒரு வேதமாகும். இதனை உம்மீது நாம் இறக்கியுள்ளோம். மக்களை அவர்களுடைய இறைவனின் உதவி கொண்டு இருளிலிருந்து வெளியேற்றி ஒளியின் பக்கம் நீர் கொண்டு வர வேண்டும் என்பதற்காக!

(திருக்குர்ஆன் 14:1)


நாம் இந்தக் குர்ஆனை, அறிவுரை பெறுவதற்கான எளிய வழியாக அமைத்திருக்கின்றோம். பின்னர் அறிவுரையை ஏற்றுக் கொள்ள எவரேனும் இருக்கின்றாரா?

(திருக்குர்ஆன்54:17)

எவ்வித ஐயமின்றி அகில உலகின் அதிபதியிடமிருந்தே இவ்வேதம் இறக்கியருளப்பட்டிருக்கின்றது. (நபியே) எது உம்மீது இறக்கியருளப் பட்டிருக்கிறதோ அது சத்தியமேயாகும்.

(திருக்குர் ஆன் 32:2;13:1)


திண்ணமாக இந்த நல்லுரையை நாம் தான் இறக்கி வைத்தோம். மேலும் நாமே இதனைப் பாதுகாப்போராகவும் இருக்கின்றோம். (திருக்குர்ஆன்15:9)

சகோதர சகோதரிகளே உங்களுக்கு ஓர் அழகிய அழைப்பு!

நிச்சயமாக இதுவே என்னுடைய நேரான வழியாகும்; ஆகவே இதனையே பின்பற்றுங்கள் – இதர வழிகளை நீங்கள் பின்பற்ற வேண்டாம் – அவை உங்களை அவனுடைய வழியைவிட்டுப் பிரித்துவிடும்; நீங்கள் (நேர் வழியைப் பின்பற்றி) பயபக்தியுடையவர்களாக இருப்பதற்கு இவ்வாறு அவன் உங்களுக்கு போதிக்கிறான். அல்குர்ஆன் 6:153

لا اله الا الله محمد رسول الله

லா இலாஹா இல்லல்லாஹு முஹம்மதுர் ரசூலில்லாஹ்

இறைவன் ஒருவனே அவனே அல்லாஹ், முஹம்மது அவரது தூதர்

எழுத்துப்பிழை, தவறுகள் இருந்தால் மன்னிக்கவும்! சுட்டிக்காட்டவும் இன்ஷா அல்லாஹ் திருத்திக்கொள்வோம்!

நன்றி-
சகோதரர் ஜாகிர் நாயக் மற்றும் பி. ஜைனுல் ஆபிதீன் அவர்களின் சொற்பொழிவுகள் அதிகமாக கேட்டது இந்த கட்டுரை வரைய உதவியாக இருந்தது மேலும் சில செய்திகளை கீழ்கண்ட தளங்களில் படித்தது உதவியாக இருந்தது! நன்றிகள் (ஜஜாகல்லாஹ் கைரன்)

http://maricair.blogspot.com/

http://egathuvam.blogspot.com/

http://www.islamkalvi.com/

http://www.tamilmuslimmedia.com/darulsafa/www/Tamil/drzakir_ravi.htm

http://www.islamiyadawa.com/qa/qa47.htm

சில பிளாக்-இணையதளங்கள் ஞாபக மறதியால் மறந்துவிட்டது குறிப்பிட இயலவில்லை!

அல்லாஹ் நம் அனைவருக்கும் நேர்வழிகாட்டுவானாக!

அறிவைக் கொடுத்தவன் அல்லாஹ் அவனுக்கே புகழனைத்தும்

நாம் அவனின் அடிமைகளாக இருப்போம்!

அல்ஹம்துலில்லாஹ்!

நன்றி- சிராஜ் அப்துல்லாஹ்

fromgn@googlegroups.com குழுமத்திலிருந்து

நல்ல(!) நேரம்

நல்ல/கெட்ட நேரம் இல்லைமூடநம்பிக்கை என்பது எப்போது தோன்றியது என்று சரியாகத் தெரியவில்லை. ஏதேனும் ஒரு காரியம் தனக்கு சாதகமாகவோ அல்லது பாதகமாகவோ அமைந்திட, அல்லது நல்லதாகவோ தீயதாகவோ அமைந்திடக் காரணமாக குறிப்பிட்ட சில நாட்கள், நேரங்கள், விஷயங்கள், செயல்கள், அனுஷ்டானங்கள், பொருள்கள், உயிரினங்கள், போன்றவைதாம் காரணிகள் என்று மனிதன் நம்புவதற்குப் பெயர் மூடநம்பிக்கையாகும்.

உதாரணத்திற்கு ஒரு பூனை குறுக்கே செல்வதால் தனக்கு ஏதாவது கெடுதி ஏற்படும் என்று நம்புவது; அல்லது தான் நாடிய/நடக்கவிருந்த நல்ல காரியம் நடைபெறாமல் போகக்கூடும் என்ற ஒரு சஞ்சலம், அல்லது ஒரு ஆந்தை அலறுவதால் ஒரு கெட்ட காரியம் நிகழும் அல்லது மரணம் நடைபெறும் என்று கருதுவது ஆகிய இவை காலங்காலமாக மனிதனிடம் காணப்படும் மூடநம்பிக்கையாகும்.

ஒருவர் தும்மினால் நல்லது நடக்கும் அல்லது நடக்காது என்று நம்புவது; வீட்டை விட்டு வெளியே போகும்போது எதிரில் விதவைகள்/குருடர்களைக் கண்டால் தனது காரியம் கெட்டு விடும் என்று கருதுவது; தனக்குப் பாதகமாக ஏதேனும் நிகழ்ந்தால், “காலையில் யார் முகத்தில் விழித்தோனோ?” என்று கருதி அந்த முகத்தை இணைத்து சம்பந்தப்படுத்துவது போன்றவையும் மூடநம்பிக்கையே.

இதேபோல்தான் ஒரு பொருளை, ஒரு நிறத்தை, ஒரு எண்ணை, ஒரு நாளை அல்லது நேரத்தை நல்லதாகவோ தீயதாகவோ மனிதன் கருதுவது இன்றைய நவீனகாலத்திலும் அன்றாட நிகழ்வுகளாகக் காண முடிகிறது. 13 என்ற எண் தீமை பயப்பது என்பதாகக் கருதி அதைத் தமது இல்லங்களுக்கோ வாகனங்களுக்கோ அல்லது உடமைகளுக்கோ தவிர்த்துக் கொள்ளக்கூடிய மக்களை இன்றும் மேற்குலகில் பரவலாகக் காணமுடிகிறது. சில முன்னேற்றமடைந்த நாடுகளிலும் வீட்டு எண்ணிக்கையில் 13ஐத் தவிர்ப்பதும், மாடிக் கட்டடங்களிலும் 12ஆவது மாடியை அடுத்து 13ஐத் தவிர்த்து அடுத்த எண்ணான 14ஐத் தருவது போன்றவையும் மூடநம்பிக்கையாகும்.

அதேபோல் ஒரு சில எண்களை/பொருள்களை அதிர்ஷ்டமானதாகக் கருதி அந்த எண்களை/பொருட்களைத் தேடி அதிக விலைகொடுத்துப் பெறுதலும் அந்த எண்/பொருள் தனக்கு அதிகமான இலாபத்தை அல்லது பாதுகாப்பை வழங்கிடும் என்று கருதும் மூடநம்பிக்கையும் நடப்பில் உள்ளது.

அறிவியல், கல்வி, விஞ்ஞானக் கண்டுபிடிப்புகள் என்று எல்லாவிதத்திலும் வளர்ச்சியின் உச்சியில் இருப்பதாகக் கருதப்படும் தற்போதய காலத்திலும் இந்த மூடநம்பிக்கை எனும் நோய் முழுவதுமாக ஒழிக்கப்படவில்லை என்பதே யதார்த்தம்.

இதுபோன்ற மூடநம்பிக்கைகளைக் கல்வியறிவில் பின்தங்கியவர்கள் முதல் ஆண்கள் பெண்கள் சிறுவர் சிறுமியர் நன்கு படித்த இளைஞர்கள் முதியவர்கள் என்ற அனைவர்களிடமும், பகுத்தறிவுவாதிகள் என்று சொல்லிக் கொள்ளும் அறிவுஜீவிகள் முதல் ஆன்மீகவாதிகளிலும் பரவலாகக் காணமுடிகிறது. சிலர் இதற்கு மதச் சாயம் பூசிடுவதும் அதன் மூலம் இதைச் சரிகாணுவதும் இம்மடமையை ஆதரிக்கும் சிலருடைய துணையுடன் இதைத் தொடர்ந்து நிலை நாட்டிவருவதும் சுய இலாப நோக்கில் தொடர்ந்து நடைபெற்று வருகின்ற ஒரு துர்ப்பாக்கியமான காரியம் ஆகும்.

ஒரு நாள் என்பது நல்லநாள் அல்லது கெட்டநாளாக; ஒரு நேரம் என்பது நல்லநேரம் அல்லது கெட்டநேரமாக எப்படி அமையும்? ஒரே நாளில் ஒரே நேரத்தில் ஒரு சிலருக்கு நல்லதும் மற்றவர்களுக்குத் தீயதும் இழப்புகளும் ஏற்படத்தான் செய்கின்றன என்பதை எவரும் மறுத்திட இயலாது.

உதாரணத்திற்கு ஒரே நேரத்தில் பிறப்புகளும் இறப்புகளும் இவ்வுலகத்தில் ஏற்பட்டுக் கொண்டே இருக்கின்றன. சிலர் நோயுறுவதும் நிலர் நிவாரணம் பெறுவதும், சிலர் கல்வியில் தேர்ச்சி பெறுவதும் சிலர் தோல்வியுறுவதும், சமுதாயத்தில் அன்றாடம் நிகழும் நிகழ்வுகள் ஆகும். அதே போல் ஒரே நேரத்தில் எதிரெதிர் அணியில் போட்டியிடும் இரு அணிகளில் ஒன்று வெல்வதும் ஒன்று தோல்வியுறுவதும் இயல்பானதும் தவிர்க்க இயலாத ஒன்றுமாகும்.

மேலும்….

2010க்கான ஹஜ் பயணத்திற்கு சர்வதேச பாஸ்போர்ட்: தமிழக அரசு வேண்டுகோள்

சென்னை: ஹஜ் பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் உடனடியாக சர்வதேச பாஸ்போர்ட் பெற விண்ணப்பிக்குமாறு தமிழக அரசு அறிவித்துள்ளது.

//

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

ஹஜ் விசா பெறுவதற்கு பயணிகள் சர்வதேச பாஸ்போர்ட் வைத்திருக்க வேண்டியது அவசியம் என சவூதி அரேபிய அரசு முடிவு செய்துள்ளதாக மும்பை, இந்திய ஹஜ் குழுவின் முதன்மைச் செயல் அலுவலர் தெரிவித்துள்ளார்.

இதனால், ஹஜ் 2010க்கு புனித பயணம் மேற்கொள்ள உள்ளவர்கள் விண்ணப்பிக்கும்போது பன்னாட்டு பாஸ்போர்ட்களை தங்களுடன் வைத்திருக்க வேண்டும்.

ஹஜ் 2010க்கு புனிதப் பயணம் மேற்கொள்ள விரும்புவோர் தங்களிடம் பன்னாட்டு பாஸ்போர்ட் தற்போது இல்லாதிருப்பின் அதற்காக இப்போதே விண்ணப்பிக்க தயாராக வேண்டும்.

ஹஜ் 2010க்கான அறிவிப்பு வரும் பிப்ரவரி, மார்ச் மாதத்தில் அறிவிக்கப்படலாம். இந்தக்கால அவகாசத்தைப் பயன்படுத்தி சர்வதேச பாஸ்போர்ட் பெற்றுக்கொள்ள வேண்டும்’ என கூறப்பட்டுள்ளது.

நன்றி- ThatsTamil

மத வெறியர்கள்- போலி முற்போக்குவாதிகள் – ஹிஜாப்

சமீப காலமாகவே இஸ்லாத்தையும் அதன் கோட்பாடுகளையும் எந்த வகையிலாவது களங்கப்படுத்திட வேண்டும் என வெறி பிடித்த சில கூட்டங்கள் இணைய தளத்தில் காழ்ப்புணர்ச்சியுடன் அலைந்து கொண்டிருப்பதை பல இணையதளங்களையும் பார்வையிடுவோர் மிக எளிதில் உணரலாம். இப்படி இஸ்லாத்தை விமர்சிக்க கிளம்பிய பல அறிவுஜீவிகள் (தங்களைத் தாங்களே அவ்வாறு தான் நினைத்துக் கொள்கின்றனர்) ஆக்கப்பூர்வமான விமர்சனத்தை முன்வைத்தால் அவர்களுக்கு பதில் சொல்லிவிடலாம். ஆனால் வெறுமனே தங்கள் மனதினில் ஊடுருவியிருக்கும் இஸ்லாமிய எதிர்ப்பு என்ற ஒற்றைத் தனத்தை மட்டுமே அடிப்படையாக வைத்து கருத்துகளை முன்வைக்கின்றனர். எந்த கருத்தை முன்வைக்கின்றனரோ அதில் இஸ்லாமிய நிலைப்பாடு என்ன என்பதைக் கூட அறியாத பல அறிவிலிகள் தான் இத்தகைய அறிவுஜீவி வேடம் தரித்து இணையத்தில் உலாவிக் கொண்டிருக்கின்றனர்.

இத்தகைய அறிவிலிகளை இரண்டு வகையினராக மிக எளிதில் பிரித்து விடலாம். முதல் கூட்டம் மதக் காழ்ப்புணர்ச்சியுடன் திரிந்து கொண்டிருப்பவர்களை அடிப்படையாக வைத்து உருவானது. தாங்கள் பின்பற்றும் மதத்தினில் இருக்கும் பல பிற்போக்குத்தனங்களை மறைக்க வேண்டியோ அல்லது அதை நியாயப்படுத்த வேண்டியோ இஸ்லாத்தின் மீது அவதூறு சேற்றை அள்ளி இறைக்கின்ற வகையினர் இவர்கள். இரண்டாவது கூட்டம் மதங்களை புறக்கணித்து ஏதோ ஒரு மனித மூளையினில் உருவான சித்தாந்தத்தை வாழ்வின் வெற்றிக்கான உத்தியாக நினைத்துக் கொள்பவர்கள். இவர்கள் தங்களுடைய சித்தாந்தம் தான் சிறந்தது என நிரூபிக்க வேண்டி மற்ற மதங்களை போலவே இஸ்லாத்திலும் பிற்போக்குத்தனம் இருக்கின்றது என்ற ரீதியில் பொய்ப்பரப்புரைகளை முன்னெடுத்துச் செல்கின்றனர்.

இவர்களுடைய மதங்களும் சித்தாந்தங்களும் இவர்கள் கண்ணெதிரிலேயே பரிதாபகரமான தோல்வியை தழுவி நிற்பதை காண சகிக்காமல், அத்தகைய தோல்விக்கு காரணமாய் இருக்கின்ற இஸ்லாத்தையும் அதன் கோட்பாடுகளையும் கறைப்படுத்தி விட வேண்டும் என இவர்களின் ஆழ்மனதில் படிந்து விட்ட இஸ்லாமிய காழ்ப்புணர்ச்சியே அவ்வப்போது இணையத்தில் வெளிப்பட்டுக் கொண்டிருக்கின்றது. சந்தர்ப்பம் கிடைக்காதா என ஏங்கிக் கொண்டிருந்தவர்களுக்கு சகோதரி சுமஜ்லாவின் பதிவுகள் வரப்பிரசாதமாக அமைந்து விட்டன. என்னைப் பொறுத்தவரை சுமஜ்லா மிகவும் தைரியமான ஒரு மங்கை. அவர் மேல் வைக்கப்படும் அனைத்துக் கருத்துக்களுக்கும் அவர் தனி ஆளாக நின்றே பதில் கொடுக்கும் திறமை வாய்ந்தவர். என்னுடைய இந்த கட்டுரை தன்னுடைய பேசுபொருளாக முன்வைப்பது “ஹிஜாப்” என்ற பெண்களின் உடையைப் பற்றியது. ஹிஜாப் என்பது பெண்கள் தங்களுடைய முழுமுகம் மற்றும் முன்கைகள் இரண்டை தவிர மற்றதை மறைத்துக் கொள்ளும் வகையில் உடையனிதலாகும். வெறுமனே கருப்பு அங்கி மட்டும் ஹிஜாபல்ல. முகம் மற்றும் முன்கைகளை தவிர மற்ற பகுதிகளை மறைக்கும் வண்ணம் உடல் அங்கங்கள் வெளியே தெரியாத வண்ணம் இறுக்கமாக இல்லாமல் எந்த உடை அணிந்தாலும் அவை ஹிஜாப் என்றே அழைக்கப்படும். இந்த ஹிஜாபை தான் ஆணடிமைத்தனம் என்றும் பிற்போக்குத்தனம் என்றும் மதவெறியர்களும் போலி முற்போக்குவாதிகளும் காட்டுக் கூச்சல் போட்டுக் கொண்டிருக்கின்றனர்.

மேலும்……

ஒபாமாவுக்கு ஒரு ஹைத்தி அகதியின் திறந்த மடல்‏

அன்புடன் ஒபாமாவுக்கு,

அமெரிக்கா உலகில் மிக முன்னேறிய ஜனநாயக நாடு என்று தான் நினைத்துக் கொண்டிருந்தேன். ஹைத்தியின் நிலநடுக்கத்தில் அந்த நம்பிக்கை நொறுங்கி விட்டது. நிலநடுக்கத்திற்கு மறு நாள், “நிவாரணப் பணிக்கென 2000 மரைன் துருப்புகளை இன்னும் சில நாட்களில் அனுப்புவதாக” புதன்கிழமை AP செய்தி தெரிவித்தது. “இன்னும் சில தினங்களில்?”

திருவாளர் ஒபாமா அவர்களே, அமெரிக்காவில் இருந்து ரொம்ம்ம்ப தூரத்தில் இருக்கும் ஐஸ்லாந்து ஜனாதிபதி ஒலாபூர் கிராம்சொன் உங்களை முந்திக் கொண்டு உதவினார். உங்கள் அறிவிப்பை உலகத் தொலைக்காட்சிகள் ஒளிபரப்புவதற்கு முன்னரே, 4000 மைல் தூரத்தில் உள்ள ஐஸ்லாந்தில் இருந்து உதவி வந்து சேர்ந்து விட்டிருந்தது. வெறும் 700 மைல் தூரத்தில் இருக்கும் அமெரிக்காவில் இருந்து உதவி கிடைப்பதற்கு “இன்னும் சில தினங்கள்” காத்திருக்க வேண்டும். 8000 மைல் தொலைவில் உள்ள சீனா 48 மணி நேரத்திற்குள் மோப்பம் பிடிக்கும் நாய்களையும், பிற உதவிப் பொருட்களையும் அனுப்பி வைத்தது. ஹைத்திக்கு மிக அருகாமையில் மியாமியிலும், புவேட்டோரீகொவிலும் (700 மைல்) அமெரிக்க தளங்கள் உள்ளன. அங்கிருந்து மரைன் துருப்புகளின் உதவியைப் பெறுவதற்கு நாம் இன்னும் சில தினங்கள் காத்திருக்க வேண்டும்.

ஒபாமா அவர்களே! ஹைத்தியின் மீட்பு பணிக்கும், நிவாரணத்துக்கும் எத்தனையோ மில்லியன் டாலர்கள் ஒதுக்கியிருப்பதாக அறிவித்தீர்கள். உண்மையிலேயே மிகப் பெரிய தொகை தான். ஆனால் அந்த தொகை கூட, நீங்கள் ஈராக்கில் ஒரு மாதத்திற்கு செலவிடும் தொகையின் சிறு பகுதி என அறியும் போது மனதை நெருடுகின்றது. யுத்தம் என்று வந்துவிட்டால், காற்றிலும் விரைவாக அமெரிக்க படையினர் அனுப்பப்படுவார்கள் என்பதை அறிந்திருக்கிறேன். ஹைத்திக்கு நீங்கள் அனுப்பிய உதவி மூன்று தினங்களில் வந்து சேர்ந்தது. அது ஒரு விமானம் தாங்கிக் கப்பல். (USS Carl Vinson) அந்தக் கப்பலில் எந்த வித அவசர கால உதவிப் பொருளையும் காணாதது ஏமாற்றமளித்தது. அதற்கு பதிலாக 19 ஹெலிகாப்டர்களும் ஏவுகணைகளும் இருந்தன.

ஒருவேளை நிவாரணப் பொருட்களை கப்பலில் அனுப்ப மறந்து விட்டீர்களா, ஒபாமா? கவலை வேண்டாம். ஏற்கனவே சர்வதேச மீட்புக் குழுக்கள் (அமெரிக்கர்களுக்கு முன்னர்)களத்தில் இறங்கி விட்டன. பத்து மெட்ரிக் தொன் உணவுப்பொருட்கள், குடிநீர், கூடாரங்கள், பிற மீட்பு உபகரணங்கள் எல்லாம் சின்னச்சிறு நாடான ஐஸ்லாந்தில் இருந்து வந்து சேர்ந்து விட்டன. உடனடியாக எமக்கு உதவிய ஐஸ்லாந்து, கடந்த வருட நிதி நெருக்கடியில் சிக்கி பொருளாதாரம் திவாலாகும் நிலையில் இருந்தது. “அமெரிக்கா உடனடியாக உதவி அனுப்பாததற்கு காரணம், ஹைத்தியில் நிலவிய பாதுகாப்புக் குறைபாடு…” உங்களது பாதுகாப்பு அமைச்சர் ராபர்ட் கேட்ஸ் திருவாய் மலர்ந்தருளி இருக்கிறார். ஆமாம், ஏற்கனவே பஞ்சத்தில் அடிபட்ட ஹைத்தி ஏழைகள் நீங்கள் அனுப்பும் நிவாரணப் பொருட்களை கொள்ளயிட்டால் என்ன செய்வது? அதைத் தடுக்க ஆயுதந் தரித்த Blackwater கூலிப்படையினரை அனுப்பியிருக்கிறார். சபாஷ்! நாம் கேட்டது drinking water , கிடைத்ததோ Blak water.

திரு. ஒபாமா அவர்களே ஹைத்தியின் அவலத்திற்கு நிலநடுக்கம் மட்டும் காரணமல்ல. எல்லாவற்றுக்கும் இயற்கை அன்னையை குறை கூறாதீர்கள். அமெரிக்க ஆசியுடன் ஹைத்தியை மூன்று சகாப்தங்களாக ஆட்சி செய்த கொடுங்கோலன் டுவாலியர் காலத்தில் தான் பெருமளவு கட்டடங்கள் கட்டப்பட்டன. எதிர்ப்பவர்களை எல்லாம் சுட்டுப் போட்ட சர்வாதிகாரியின் கீழ், ஊழல் செய்து கட்டிய தரங்குறைந்த கட்டிடங்கள் எவ்வாறு பூகம்பத்தை எதிர்த்து நிற்கும்? சர்வதேச நிதி உதவியில் என்பது சதவீதம் டுவாலியர் குடும்பத்தின் தனிப்பட்ட சொத்துகளாக மாறின. மிகுதியை ஐ.எம்.எப்.பின் சலுகைக் குறைப்பு திட்டம் செய்து முடித்தது. ஐ.எம்.எப். நிபுணர்களின் ஆலோசனையின் பேரில் கட்டப்பட்ட சேரி வீடுகள் இடிந்து விழுந்து லட்சக்கணக்கான மக்களை பலி எடுத்துள்ளன. சொன்னால் நம்ப மாட்டீர்கள். ஹைத்தி முழுவதற்கும் இரண்டே இரண்டு தீயணைப்பு நிலையங்கள் மட்டுமே இருந்தன. குடிநீர் விநியோகமோ, வைத்தியசாலைகளோ இன்றி அவதிப்பட்ட மக்களின் துன்பத்தை நிலநடுக்கம் முடித்து வைத்தது.

தசாப்த கால சர்வாதிகார ஆட்சியின் முடிவில் வந்த 1991 பொதுத் தேர்தலில் மக்கள் அரிஸ்டீட்டை தெரிவு செய்தார்கள். அவர் ஐ.எம்.எப். நிபந்தனைகளை ஏற்றுக் கொள்ளவில்லை என்பதற்காக, அமெரிக்க அரசு படை அனுப்பி ஆட்சியைக் கவிழ்த்தது. (அப்போது மட்டும் என்ன விரைவாக படைகள் வந்தன?) 2004 ம் ஆண்டு, அரிஸ்டீட்டை மக்கள் மீண்டும் ஜனாதிபதியாக்கினார்கள். இம்முறை உங்கள் படைகள் தலையிட்டு அவரை கடத்திச் சென்று விட்டன. அப்போது அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த புஷ், இராணுவ நடவடிக்கையை நியாயப் படுத்தி என்னனவோ எல்லாம் பேசினார். எமது நாட்டின் ஜனநாயகத்தை முளையிலேயே கிள்ளி எறிந்த அமெரிக்கர்களின் கடமை உணர்ச்சி எம்மை புல்லரிக்க வைத்தது.

இராணுவத் தலையீடு என்று வந்து விட்டால் மட்டும் உங்கள் படைகள் கண்ணிமைக்கும் நேரத்திற்குள் வந்திறங்கி விட்டன. அப்போது மட்டும் உங்கள் அரசின் விரைவான நடவடிக்கை எம்மை வியப்பில் ஆழ்த்தின. ஆனால் இப்போது உங்கள் பாதுகாப்பு செயலாளர் கூறுகிறார்: “தவிர்க்கவியலாத காரணங்களால் மீட்புப் பணிகள் தாமதமடைகின்றன. இன்னும் ஒரு வாரத்தில் கடற்படையின் நடமாடும் மருத்துவமனை அனுப்பி வைக்கப்படும்.” கடவுளே! அமெரிக்க மருத்துகள் வரும் வரையில் ஹைத்திய மக்கள் உயிரைக் கையில் பிடித்து வைத்திருக்க வேண்டும்.

ஒபாமா அவர்களே! ஹைத்தி உலகில் மிகவும் வறிய நாடு என்று உங்கள் ஊடகங்கள் எம் மேல் அனுதாபப்படுகின்றன. அவர்களின் அனுதாபத்திற்கு நன்றி கூறும் தருணத்தில், அறியாமையையும் இடித்துக் கூற வேண்டியுள்ளது. ஒரு காலத்தில் எமது தாயகமான ஹைத்தி செல்வந்த நாடாக இருந்தது. 18 ம் நூற்றாண்டு பிரெஞ்சு சிந்தனாவாதி வோல்டேயர் ஹைத்தியின் செல்வம் “கறுப்புத் தங்கம்” என அழைக்கப்படும் அடிமைகள் தான் என்றார்.

அந்தோ பரிதாபம்! ஹைத்தியின் கறுப்பின அடிமைகள் பிரெஞ்சு காலனிய எஜமானுக்கு எதிராக கிளர்ந்தெழுந்தார்கள். அடிமைகளின் புரட்சி வென்றது. நவீன உலகின் முதலாவது அடிமைகளின் குடியரசு உருவானது. ஏதோ காரணத்தால், ஹைத்தியை விட்டோடிய பிரெஞ்சுப் படைகள் திரும்பி வரவேயில்லை. ஆனால் அதற்காக அவர்கள் ஹைத்தியின் சுதந்திரத்தை ஏற்றுக் கொண்டார்கள் என்று அர்த்தமா? இல்லை. இல்லவே இல்லை. 1825 முதல் 1947 வரை, ஹைத்தி பிரான்சுக்கு நஷ்டஈடு கட்டுமாறு நிர்ப்பந்திக்கப் பட்டது. எதற்காக அந்த நஷ்டஈடு? அடிமைகள் கிளர்ச்சி செய்து விடுதலை ஆனதால், எஜமானர்களுக்கு பெருந்தொகை நஷ்டம் ஏற்பட்டு விட்டதாம். அந்த நஷ்டத்தை அடிமைகள் சந்ததி சந்ததியாக அடைத்து வர வேண்டுமாம்.

மனிதர்களை தனித்தனியாக அடிமைகளாக வைத்திருப்பதை விட, முழு தேசத்தையுமே அடிமையாக வைத்திருப்பது லாபகரமானது. இதைத் தான் பிரான்ஸின் “நவ-காலனித்துவம்” என்கிறார்களா? எமது உழைப்பில் பிரெஞ்சு மக்கள் வசதியான வாழ்க்கை வாழ்கிறார்களா? அடியேனின் சிற்றறிவுக்கு எட்டிய அரசியல் அவ்வளவுதான். ஒரு வேளை எமது மக்களின் வறுமைக்கான காரணியை, 18ம் நூற்றாண்டு காலனிய சரித்திரத்தில் தேட வேண்டுமா?

இப்படிக்கு,

ஒரு ஹைத்தி அகதி

நன்றி-முத்துப்பேட்டை.org