பின்லேடன் புகைப்படத்தை நம்ப மறுக்கும் அமெரிக்கர்கள்

உலக சரித்திரத்திலேயே இல்லாத வகையில் தேடப்படும் பிரபல குற்றவாளியை அவசர அவசரமாக நடுக்கடலில் சமாதி கட்டியதோடு, உலக மகா தீவிரவாதி என்று கடந்த 10 ஆண்டுகளாக நாட்டு மக்களை நம்பவைத்து வந்த அமெரிக்கா,அவர் கொல்லப்பட்டதாக வெளியிட்ட புகைப்படம் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

நவீன தொழில்நுட்ப உதவியுடன் போட்டோக்களில் ஏமாற்றும் வித்தையை பள்ளிக்குழந்தைகளால்கூட செய்ய முடியும் என்பதால் ஒசாமாவினுடையது என்று வெளியிடப்பட்டிருக்கும் புகைப்படம், ஏற்கனவே கொல்லப்பட்ட வேறு நபரின் புகைப்படத்த்தை வெட்டி ஒட்டியது என்ற கருத்து உலகெங்கும் டிவிட்டர் மற்றும் ப்ளாக்குகளிலும் பகிர்ந்து கொள்ளப்பட்டுள்ளது.

பாகிஸ்தானில் கொல்லப்பட்டது பின்லேடன்தான் என்று அமெரிக்கா ராணுவம் மரபணு சோதனை நடத்தி உறுதி செய்ததாக காட்டுகத்து கத்தினாலும் இதை அமெரிக்கர்களில் பெரும்பாலோர் நம்பவில்லை. கொல்லப்பட்டதாகச் சொல்லப்படுவது பின்லேடன்தான் என்று அல்கொய்தாவும் உறுதி செய்யாதவரை அதை பெரும்பாலோர் நம்பத் தயாராக இல்லை.

                                மேலும் வாசிக்க..

Advertisements

நாங்கள் முபாரக்கிற்கு ஆதரவளிக்கவில்லை – அமெரிக்கா கைவிரிப்பு(வீடியோ இணைப்பு)

எகிப்து அதிபர் ஹோஸ்னி முபாரக்கிற்கு எதிராக மக்கள் போராட்டம் தொடர்ச்சியாக எட்டாவது நாளையும் கடந்து வீரியத்துடன் நடந்து வரும் நிலையில், “எகிப்து மக்கள் அமெரிக்கா ஹோஸ்னி முபாரக்கிற்கு ஆதரவளிப்பதாக தவறாக நினைத்துள்ளனர். அமெரிக்கா ஹோஸ்னி முபாரக்கிற்கு ஆதரவளிக்கவில்லை” என அமெரிக்க செனட்டர் ஜாண் கெர்ரி பத்திரிக்கையாளர்களிடம் கூறியுள்ளார்.
30 ஆண்டுகளுக்கும் மேலாக எகிப்தில் சர்வாதிகார ஆட்சி செலுத்தும் ஹோஸ்னி முபாரக்கை எதிர்த்து எட்டாவது நாளாக எகிப்தில் மக்கள் எழுச்சிப் போராட்டம் தொடர்ந்து நடந்து வருகிறது.

இன்றைய நிகழ்வில்,

* 10 லட்சம் மக்கள் எதிர்ப்புப் பேரணியில் ஈடுபடுவர் என முக்கிய எதிர்கட்சிகள் முன்னர் அறிவித்திருந்தன. ஆனால் எதிர்பார்த்ததை விடவும் மேலாக சுமார் 20 லட்சம் மக்கள் எகிப்து தலைநகர் கெய்ரோவிலுள்ள தஹ்ரீர் ஸ்கொயர் பகுதியில் கூடினர்.

* மிகப் பிரம்மாண்டமான இப்போராட்டத்தை “எகிப்தில் இதற்கு முன்னர் நிகழ்ந்திராத காவியம்” என பிரபலங்கள் கருத்து தெரிவித்துள்ளன.

Dim lights

* தலைநகரில் நடக்கும் மிகப்பெரும் போராட்டத்தைத் தொடர்ந்து, அலெக்ஸாண்டிரியா உட்பட எகிப்தின் பல முக்கிய நகரங்களில் மக்கள் போராட்டம் துவங்கியுள்ளது.

* மக்கள் போராட்டத்தினிடையே கொள்ளையர்களும் கிரிமினல்களும் புகுந்து விடாமல் இருக்க இராணுவம் மிகுந்த கவனத்துடன் கண்காணித்து வருகிறது. இராணுவ கண்காணிப்பில் தீவிரமாக பரிசோதிக்கப்பட்டு உள்ளே வரும் போராட்டக்காரர்களை மக்களில் ஒரு பகுதியினரும் தீவிரமாக சோதித்து போராட்டத்தினுள் அனுமதிக்கின்றனர்.

* எகிப்து முழுவதும் இராணுவ ட்ரக்குகளும் டாங்குகளும் பேரணி நடக்கும் வீதிகள் தோறும் நிறைக்கப்பட்டுள்ளன.

தொடர்ந்து வாசிக்க

ஈராக் போரில் அமெரிக்கா கொடுத்த விலை அதிகம்: ஒபாமா


ஈராக்கில் அமெரிக்கா நடத்தி வந்த் போர் முடிவுக்கு வந்துள்ளதாக அறிவித்துள்ள அதிபர் பராக் ஒபாமா, இந்த போருக்காக அமெரிக்கா கொடுத்துள்ள விலை மிக அதிகம் என்று தெரிவித்துள்ளார். பேரழிவு ஆயுதங்களை ஈராக் பதுக்கி வைத்து இருப்பதாக கூறி அப்போதைய அமெரிக்க அதிபர் புஷ், ஈராக் மீது 2003 ஆம் ஆண்டு படையெடுத்தார். இந்நிலையில், அமெரிக்க அதிபராக பதவி ஏற்ற ஒபாமா, போரை முடிவுக்கு கொண்டு வந்து அமெரிக்க படைகள் 2010 ஆம் ஆண்டு ஆகஸ்டு 31 ஆம் தேதிக்குள் ஈராக்கில் இருந்து வாபஸ் பெறப்படும் என்று அறிவித்து இருந்தார். அதன்படி படிப்படியாக அமெரிக்க ராணுவ வீரர்கள் திரும்ப பெறப்பட்டனர். இந்நிலையில், ஏறக்குறைய 8 ஆண்டுகள் நடந்த இந்த போர் முடிவுக்கு வந்து இருப்பதாக அமெரிக்க அதிபர் ஒபாமா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

இது தொடர்பான கொள்கை அறிவிப்பை வெளியிட்டுப் பேசிய அவர், ஈராக் நாட்டின் உள்நாட்டு பாதுகாப்பு இனி அந்நாட்டு மக்களின் பொறுப்பு என்றும், அந்நாட்டின் பாதுகாப்பிற்காக அமெரிக்கா இது வரையிலும் மிகப் பெரிய விலையை கொடுத்துள்ளது என்றும் தெரிவித்தார்.

நன்றி- திருவை.காம்

2010 ஆப்கானிஸ்தானுக்கு மிக மோசமான ஆண்டு

ஆப்கான் மனித உரிமை கண்காணிப்பாளர் அறிக்கை

2001ஆம் ஆண்டில் அமெரிக்கா ஆப்கானிஸ்தானை ஆக்கிரமித்த பின்னர் இந்த ஆண்டிலேயே ஆப்கானிஸ்தானில் வன்முறைகள் அதிகம் இடம்பெற்றுள்ளதாக ஆப்கான் மனித உரிமை அமைப்பின் அறிக்கை தெரிவிக்கின்றது.

தாலிபான்களை தோற் கடிப்பதென்பது அமெரிக்காவுக்கு மிகவும் கடினமான பணியாக அமைந்துள்ள அதேவேளை அதிகரித்துச் செல்லும் பாதுகாப்பற்ற சூழ்நிலைகளுக்கு மத்தியில் பொதுமக்கள் கொல்லப்படும் வீதம் நாளுக்குநாள் அதிகரித்துச் செல்வதாக ஆப்கான் மனித உரிமை கண்கானிப்பாளர் அமைப்பு தெரிவிக்கின்றது.

பாதுகாப்புச் சம்பவங்களின் எண் ணிக்கை மாத்திரமன்றி கிளர்ச்சி மற்றும் எதிர்க்கிளர்ச்சி வன் முறைகளும் ஒன்றுபட்டு அதி கரித்துள்ளதாகவும் அவ்வறிக்கை குறிப்பிடுகின்றது.

நன்றி-EAST ADIRAI

போர் சம்மந்தப்பட்ட சம்பவங்களில் கடந்த வருடத்தின் முதல் ஆறு மாத காலப்பகுதியில் கொல்லப்பட்ட 1059 பொது மக்க ளுடன் ஒப்பிடும் போது, 2010ஆம் ஆண்டின் முதல் ஆறு மாத காலங்களில் 1074 பொது மக்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் 1500 பேர் காயப்பட்டுள்ளனர் என இம் மனித உரிமை அமைப்பின் அறிக்கை சுட்டிக்காட்டுகின்றது.

இதேவேளை கடந்த டிசம்பர் மாதம் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா 30 ஆயிரம் மேலதிக அமெரிக்க துருப்புக்களை `தாலிபான்களை முறியடித்து ஒன்பது வருட கால யுத்தத்திற்கு முடிவை காணும் திட்டமென’ அமெரிக்காவால் வர்ணிக்கப்பட்ட புதிய இராணுவத் திட்டத்தின் பகுதியாக ஆப்கானிஸ்தானுக்கு அனுப்புவதற்கு கட்டளை யிட்டார். ஆனால் ஆப்கான் மனித உரிமை கண்காணிப்பாளர் அமைப்பின் இந்த மத்திய வருட அறிக்கை, தாலிபான் களுக்கெதிரான இராணுவ நடவடிக்கைகளை கடுமையாக்குவதற்கான ஒபா மாவின் கொள்கை தாலிபான் களை முறியடிக்கவோ அல்லது துண்டாக்கவோ இல்லை எனத் தெரிவிக்கின்றது. மாறாக அந்நிய படைகளுக்கெதிரான தாலிபா ன்களின் போராட்டம் பலமடை ந்துள்ளதுடன் வகைப்படுத்தப் பட்டுமுள்ளது என இவ்வறிக்கை கூறுகின்றது. 1200 வன்முறைச் சம்பவங்கள் ஜூன் மாதம் மட்டும் பதிவு செய்யப்பட்டுள்ளன. 2002 ஆம் ஆண்டின் பின்னரான எந்தவொரு மாதத்துடனும் ஒப்பிடும் போது இதுவே உயர்ந்த எண்ணிக்கையான சம்பவமாகும்.

இதேவேளை இவ்வறிக்கையின் படி, அமெரிக்காவும் நேட்டோவும் இணைந்து 140,000 இற்கும் மேற் பட்ட துருப்புக்களை ஆப்கானில் நிலைகொள்ளச் செய் துள்ளன. மேலும் 10,000 துருப் புக்கள் எதிர்க் கிளர்ச்சி திட்டத்தின் பகுதியாக ஆப்கானுக்கு அனுப்பப்பட வுள்ளனர். மேலும் தாலிபான்களின் தற்கொலைக் குண்டுத்தாக்குதல் பொது மக்களுக்கு இறப்பை ஏற்படுத்தும் இரண்டாவது சம்பவமாக அமைந் துள்ளதாக இவ் அறிக்கை மேலும் தெரிவிக்கின்றது.

எண்ணெய் யுத்தம்

2005ஆம் வருடம் ஆகஸ்ட் மாதம். அமெரிக்காவின் லூசியானா (Louisiana) மாநிலத்திலுள்ள நியூ ஆர்லியன்ஸ் (New Orleans) நகரை கேட்ரினா எனும கடும் புயல் தாக்கி சர்வ நாசமொன்றை உண்டாக்கியது. அப்போதைய அதிபர் ஜார்ஜ் புஷ்ஷும் அவருடைய நிர்வாகமும் மீட்புப் பணிகளை சரியான வகையில் கையாள முடியாமல் திணறினர். எதை ஒழுங்காகக் கையாண்டிருக்கிறார்கள் அதைச் செய்வதற்கு? கேட்ரினாவின் மீட்புப் பணிகளில் கிடைத்த அவமானத்தையெல்லாம் புஷ் வழக்கம்போல் துடைத்து, தன் கோட்டுப் பைக்குள் திணித்துக் கொண்டார். அமெரிக்க வரலாற்றிலேயே பெரும் இயற்கை அழிவாய் அது இடம் பெற்றது.

2010, ஏப்ரல் மாதம். ஐந்து வருடங்களுக்குப் பிறகு அதே லூசியானா மாநிலத்தின் கடலில் மற்றொரு பேரழிவு. இம்முறை புயல் இல்லை. கடலுக்கு அடியிலுள்ள எண்ணெய்க் கிணறு ஒன்று பொத்துக் கொண்டது. அதனுடன் ஆஜானுபாகுவான அமெரிக்கா தடுமாறி, அரையடியாகக் குன்றிப்போய் மல்லுக்கட்டிக் கொண்டிருப்பதை, உலகம் கிலியுடன் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது.

படத்தில் நீங்கள் பார்ப்பது, சினிமாவில் வரும் 3D டயனோஸர் குட்டியல்ல. அமெரிக்காவின் மானத்தைக் கப்பல் ஏற்றிக் கொண்டிருக்கும் கல்ஃப் ஆஃப் மெக்ஸிகோவின் கிணற்று எண்ணெயில் மூழ்கிச் சாகப் போகும் பல்லாயிரக் கணக்கான கடல் பறவைகளில் ஒன்றுதான் அது. கிணறு என்றால் கொல்லைபுறத்தில் வாளியில் கயிறு கட்டி இறக்கி நீரெடுப்பது போலெல்லாம் அல்லாமல், இது பெரிசு. அதன் பிரம்மாண்டத்தைப் புரிந்து கொள்ளச் சில தகவல்கள் பார்த்து விடுவோம்.

ஆழ்கடலில் எண்ணெய்க் கிணறு தோண்ட வடிவமைக்கப்பட்டது டீப்வாட்டர் ஹாரிஸான் (Deepwater Horizon) எனப்படும் கடற்தளம். சுமார் 396 அடி நீளமும் 256 அடி அகலமுமான தளம் அது. கடலில் உள்ள எண்ணெய்க் கிணற்றினைத் தேர்ந்தெடுத்து அதை உறிஞ்சி எடுக்கத் துளையிடும் வேலை நடந்து கொண்டிருந்தது. பிரிட்டிஷ் பெட்ரோலியம் நிறுவனம்(BP)தான் இந்தக் களத்தைக் குத்தகைக்கு எடுத்து, லூசியானா மாநிலத்திற்குத் தென்கிழக்கே 64 கி.மீ. தொலைவில், பணியில் ஈடுபட்டிருந்தார்கள். கல்ஃப் ஆஃப் மெக்ஸிகோ (Gulf of Mexico) கடலுக்கு அடியில் 5000 அடி ஆழத்தில் (சுமார் ஒன்றரை கிலோமீட்டர் தூரம்தான்) துளையிட்டு வேலை நடந்து கொண்டிருந்தது.

Dim lights Download Embed 

ஏப்ரல் மாதம், 20-ந் தேதி, இரவு 9:45 மணி இருக்கும். தளத்தில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது. அடுத்து பிரம்மாண்டமாய் வெடித்தது. பணியில் ஈடுபட்டிருந்த 11 பேர் இறந்து விழுந்தார்கள். 98 பேர்வரை தப்பித்து விட்டார்கள். அடுக்கு மாடி கட்டட உயரத்திற்குக் கொழுந்து விட்டு எரிந்தது தீ. காப்பாற்ற விரைந்த படகுகளின் பெயிண்ட்டெல்லாம் அந்தத் தீயின் கொடிய வெப்பத்தில் உருகின. அந்தப் பிரம்மாண்டத் தீயை அணைக்க வாய்ப்பெல்லாம் இல்லாமல் 22ஆம் தேதி தளம் கடலில் முழுவதும் மூழ்கிப் போனது. “அய்யோ பாவமே!” என்று உச்சுக் கொட்டி அனுதாபப்பட்டு, பேருக்கு ஓர் இரங்கல் தெரிவித்துவிட்டு அடுத்த இரண்டாம் நாள் வேறு செய்திக்கு முன்னுரிமை தரமுடியாமல் மாபெரும் தலைவலி ஒன்று அமெரிக்காவை மெதுவாய், மிக மெதுவாய்ச் சூழ ஆரம்பித்தது. ஜுன் மாதம் தொடங்கியும் அது இன்னும் முடிந்த பாடில்லை.

தொடர்ந்து வாசிக்க

ஏன் இஸ்லாம்? – III

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)…

தங்கள் மீதும், தங்களின் குடும்பத்தினர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும், சமாதானமும் நிலவுவதாக…ஆமின்.

சென்ற ஆண்டு அக்டோபர் மாதம், பிரிட்டனின் பிரபல தினசரியான “தி கார்டியன் (The Guardian)”, இஸ்லாம் குறித்த ஒரு சுவாரசியமான கட்டுரையை வெளியிட்டிருந்தது.

“கறுப்பின மக்கள் ஏன் இஸ்லாத்தை தழுவுகின்றார்கள் (Why are black people turning to Islam?)” என்று தலைப்பிடப்பட்டிருந்த அந்த பதிவை எழுதியவர் ரிச்சர்ட் ரெட்டி (Richard Reddie) அவர்கள்.

இஸ்லாத்தை தழுவிய பலரிடம் நேர்க்காணல் செய்து அந்த கட்டுரையை எழுதியிருந்தார் அவர். அவருடைய ஆய்வு அடங்கிய அந்த பதிவு இங்கே உங்கள் பார்வைக்கு…
“கறுப்பின மக்கள் இஸ்லாத்தை தழுவுவதென்பது புதிய நிகழ்வு அல்ல. காலங்காலமாகவே அது நடந்து கொண்டுதான் இருக்கின்றது.
ஆனாலும், ஏன் அதிக கறுப்பின பிரிட்டன் மக்கள், குறிப்பாக இளைய தலைமுறையினர், இஸ்லாத்தை தழுவுகின்றார்கள் என்று ஆழமாக சென்று ஆய்வு செய்தேன். நான் முஸ்லிமில்லை என்றாலும் எனக்கு இஸ்லாம் மீது எப்போதுமே ஆர்வம் இருந்ததுண்டு.

என்னுடைய வாழ்வில், நான் ஹீரோக்களாக காணும் மால்கம் எக்ஸ், முஹம்மது அலி, பிரின்ஸ் பஸ்டர் என்று மூவருமே இஸ்லாத்தை தழுவியவர்கள். இவர்களை எந்த வகையில் இஸ்லாம் கவர்ந்தது?, அது அவர்களது வாழ்வில் எத்தகைய மாற்றத்தை உண்டாக்கியது? என்பதை அறிய விருப்பம்.

என்னுடைய ஆய்வின் ஆரம்பத்திலேயே நான் புரிந்து கொண்ட ஒரு விஷயம், இஸ்லாத்தை தழுவிய இந்த மக்களில் பலர், தாங்கள் “கறுப்பின முஸ்லிம்கள் (Black Muslims)” என்று அழைக்கப்படுவதை விரும்பவில்லை. உலகளாவிய முஸ்லிம்களில் தாங்களும் ஒரு பகுதி, தங்கள் இனத்தை பார்த்து தங்களை அடையாளப்படுத்த வேண்டாம் என்றே கூறுகின்றனர்.

அது போல, இந்த மக்களில் சிறு பகுதி, தங்களை கறுப்பின முஸ்லிம்கள் என்று அழைத்தாலும் பரவாயில்லை என்று கருதுகின்றனர். இஸ்லாம், கறுப்பின மக்களின் இயற்கை மார்க்கமென்றும்; ஆன்மீக ரீதியாகவும், உடல் ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் ஒடுக்கப்பட்ட மக்களை விடுவிக்க வந்த மார்க்கம் என்றும் கூறுகின்றனர்.

நான் நேர்க்காணல் செய்த மக்கள் அனைவருமே ஒப்புக்கொண்ட ஒரு கருத்தென்றால், அது, இஸ்லாம், தங்களுடைய வாழ்வை அர்த்தமுள்ளதாக உருவாக்கியது என்பதும், ஆன்மீக ரீதியாக ஒரு புத்துணர்ச்சியை கொடுத்தது என்பதும் தான்.

அதுமட்டுமல்லாமல், Materialism மற்றும் Moral relativism போன்றவற்றால் சீரழிந்த இந்த சமூகத்தை எதிர்த்து நிற்கக்கூடிய ஊக்கத்தையும் வலிமையையும் இஸ்லாம் தங்களுக்கு தந்துள்ளதாக கூறுகின்றனர்.

தொடர்ந்து வாசிக்க

ஈரானின் ராணுவ பலத்தை இஸ்ரேலால் எதிர்க்கொள்ள இயலாது: ஈரான் பாதுகாப்புத்துறை அமைச்சர்


தெஹ்ரான்:ஈரானின் ராணுவ பலத்தை எதிர்க்கொள்ள இஸ்ரேலுக்கு துணிவில்லை என்று ஈரானின் பாதுகாப்புத்துறை அமைச்சர் பிரிகேடியர் ஜெனரல் அஹ்மத் வாஹிதி தெரிவித்தார். ஈரானின் வடக்கு நகரான பபோலில் FNA வுக்கு அளித்த பேட்டியில் அவர் இதனை தெரிவித்தார்.

’ஈரானின் ராணுவ மற்றும் ஆன்மீக பலம் இஸ்ரேலுக்கு மரணத்தையும் துயரத்தையும் விளைவிக்கும்.’ இஸ்ரேல் சர்வதேச அளவிலும், உள்நாட்டிலும் சந்தித்துவரும் பிரச்சனைகளை நினைவுக்கூறிய வாஹிதி ,’சியோனிஷ அரசு சர்வதேச தனிமைப்படுத்தப்படுதலிருந்தும், உள்நாட்டுப் பிரச்சனையிலிருந்தும் தப்பிக்கலாம் என கற்பனைச் செய்கிறது. ஆனால் அது தோல்வியையே தழுவும்.

மேலும்……..