ஊடகங்கள் பரப்பி வரும் ‘முன்ஜென்ம’ பித்தலாட்டம்

 ஊடகங்கள் பரப்பி வரும் ‘முன்ஜென்ம’ பித்தலாட்டம்.

Advertisements

குருபூஜைகள் அவசியமா..? | ~முஹம்மத் ஆஷிக்_citizen of world~

குருபூஜைகள் அவசியமா..? | ~முஹம்மத் ஆஷிக்_citizen of world~.

‘தெஹல்கா லீக்ஸ்’… அடப்பாவிகளா…!

உச்சநீதிமன்றம் நியமித்த Special Investigation Team (SIT), உச்சநீதிமன்றத்திடம்  சமர்ப்பித்த அறிக்கையை நைசாக ‘சுட்டு’ தெஹல்கா நேற்று முன்தினம் வெளியிட்டுவிட்டது..! குஜராத் முஸ்லிம் இனப்படுகொலையில் அம்மாநில முதல்வர் நரேந்திர மோடிக்கு தெளிவான பங்கிருப்பதாக உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட சிறப்பு புலனாய்வுக் குழு (SIT) கண்டறிந்துள்ளது.
2002-ல் குஜராத்தில் நிகழ்ந்த இனப்படுகொலையை உலகம் அவ்வளவு எளிதில் மறக்க முடியாது. 3000 முஸ்லிம்கள் துடிக்கத்துடிக்க சங்பரிவார பயங்கரவாதிகளால் கண்டந்துண்டமாக வெட்டியும், பெண்கள் வன்புணர்வு செய்யப்பட்டும், குழந்தைகள் கூட நெருப்பிலிடப்பட்டும் கொல்லப்பட்டனர்.
கோத்ராவில் நிகழ்ந்த ரயில் தீ விபத்தை ஒரு சதியாக மாற்றி முஸ்லிம்களின் மீது பழிபோட்டு சமூக விரோதிகள் இந்தக்காரியத்தை செய்து முடித்தனர் என்றும்  கோத்ரா விபத்தை முஸ்லிம்களின் சதி என நிரூபிக்க முடியாமல் கெடுமதி படைத்த சங்பரிவார் “சபர்மதி எக்ஸ்பிரசை எரிக்க நான் தான் பெட்ரோல் சப்ளை செய்தேன்” என ஒரு முஸ்லிம் இளைஞரை மிரட்டி வாக்குமூலம் கொடுக்க வைத்தது, உள்ளிட்ட படுபயங்கர சதித்திட்டங்களை இரு ஆண்டுகளுக்கு முன் தெஹல்கா ஏடு அம்பலப்படுத்தியது.
அத்தோடு தீவிர ஹிந்துத்துவாதிகள் போல் வேடமிட்டு சட்டைபட்டன் அளவே உள்ள துல்லிய கேமராவோடு குஜராத் இனப்படுகொலையாளர்களை ரகசியமாக படம்பிடித்த தெஹல்கா ஆஜ்தக் ஹெட்லைன்ஸ் டுடே இணைந்து நடத்திய investigative journalism மூலம் கொலைகாரர்களின் வாக்குமூலங்களைவெளியிட்ட தெஹல்கா செய்தியாளர்களது குஜராத் இனப்படுகொலை குறித்த செய்திகள் உலகையே உலுக்கியது.
கோத்ரா ரயில் விபத்து, விபத்தாகவே அறியப்பட்ட சில மணி நேரத்தில் மோடி வந்து பார்வையிட்டபின் அது திட்டமிட்ட சதியாக மாற்றப்பட்டதும், ‘உங்களுக்கு மூன்று நாள் மட்டும் தருகிறேன் இதற்குள் நினைத்ததை சாதித்துக் கொள்ளுங்கள்’ என மோடியே வன்முறையாளர்களுக்கு முழு ஆதரவை வழங்கியதும் விரட்டி விரட்டி வேட்டையாடிய மனித மிருகங்கள் அந்த கொடூரச்செயல் குறித்து சிறிதும் மன உறுத்தலின்றி வெறித்தனமாக நேரடி வாக்குமூலமாகவே தெஹல்காவின் வீடியோவில் கூறியதையும் இந்த உலகம் மறக்க முடியாதது.
முஸ்லிம் பெண்கள் பழங்கள் போல் இருந்தார்கள் அவர்களை நாங்கள் சளைக்காமல் ருசித்துப் பார்த்தோம், பிறகு எரித்தோம் என்றான் ஒரு வெறிநாய்.
பள்ளிவாசல்களை பெட்ரோல் டாங்கர்களால் தரை மட்டமாக்கி னோம் என்றான் ஒரு மதவெறி மிருகம்.
நாங்கள் இங்கே ஆயுதத் தொழிற்சாலையே உருவாக்கி வைத்திருக்கிறோம் என்றான் ஒரு மனிதப்பதர்.
குறிப்பிட்ட நாளில் பயன்படுத் துவதற்காக பஞ்சாப்பிலிருந்து இரண்டு லாரிகள் நிறைய வாள்களை வரவழைத்தோம் என்றான் கோழை ரத்தம் ஓடும் ஓர் ஈனநாய்.
கடுமையாக தாக்கி படுகாயமடைந்ததோடு உயிருக்கு போராடிய அப்பாவிகளை உயிரோடு சாக்கடையில் போட்டு மூடிய கொடூரமும்.
கை கூப்பி என்னை கொன்று விடாதீர்கள் என கதறிய இளைஞர் அன்சாரியின் கோலமும் யார்தான் மறக்க முடியும்.
தங்களின் உயிர்களைக் காப்பாற்றிக் கொள்வதற்காக முன்னாள் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் இஹ்சான் ஜாஃப்ரியின் வீட்டுக்குள் தஞ்சமடைந்த ஏழை மக்கள் உள்ளிட்ட 72 பேரையும் இரக்கமின்றி காவல்துறை உதவியுடன் கொன்று குவித்தனர் பயங்கரவாதிகள்.
உயிருக்கு ஆபத்தான நிலையிலும் தன் வீட்டில் அடைக்கலம் தேடி வந்த அப்பாவிகளைக் காப்பாற்ற முதியவர் இஹ்சன் ஜாஃப்ரி தம் கட்சி தலைவர்கள் ஒவ்வொருவரிடம் தொலை பேசியில் கெஞ்சினார்.
காவல்துறை அதிகாரிகள், நீதிபதிகள், ஏன் பிற கட்சி அரசியல் தலைவர்களைக் கூட தொலை பேசியில் தொடர்பு கொண்டு ஜாஃப்ரி உதவி கோரினார், கெஞ்சினார், கதறினார். முதலமைச்சர் மோடியை (!?!?!?!?!) கூட தொடர்பு கொண்டு ஜாஃப்ரி உயிர்களை காப்பாற்றக்கோரி கெஞ்சியதாகவும் தற்போதைய செய்திகள் வெளிவந்துள்ளன.

சவூதியில் பொதுமன்னிப்பு

NEWS from பாலைவனத் தூது
ரியாத்,செப்.22:இதர வளைகுடா நாடுகளை பின்பற்றி சவூதி அரேபியாவும் சட்டத்திற்கு புறம்பாக நாட்டில் வசிக்கும் வெளி நாட்டவர்களுக்கு பொதுமன்னிப்பு வழங்கி வெளியேற உத்தரவிட்டுள்ளது.

வருகிற செப்.25 முதல் 2011 ஆம் ஆண்டு மார் 23 வரையிலான 6 மாத கால அவகாசம் இதற்காக வழங்கப்பட்டுள்ளது. இக்காலக்கட்டத்தில் உம்ரா விசா, ஹஜ் விசா, சுற்றுலா விசா ஆகியவற்றில் சவூதி அரேபியாவிற்கு வருகை தந்து விசா காலாவதியான பிறகும் சவூதியில் சட்டத்திற்கு புறம்பாக தங்கியிருக்கும் வெளிநாட்டினர் சரணடைந்து நாட்டைவிட்டு வெளியேற வேண்டும் என சவூதி அரேபியாவின் உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

விசா காலாவதியாகிவிட்டால் 10 ஆயிரம் ரியால் அபராதமாக செலுத்தவேண்டும் என்பது சட்டம். ஆனால் பொதுமன்னிப்புக் காலக்கட்டத்தில் போதிய ஆவணங்கள் இல்லாமல் சவூதியில் சிக்கியவர்கள் அபராதம் கட்டாமல் நாட்டை விட்டு வெளியேறலாம். லட்சக்கணக்கான வெளிநாட்டவர்கள் சவூதி அரேபியாவில் சட்டத்திற்கு புறம்பாக வசித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்தி : தேஜஸ் மலையாள நாளிதழ்

நன்றி- மண்ணடிகாக்கா

நினைவெல்லாம் நித்யா

நினைவெல்லாம் நித்யா

Filed under 2010 ஆகஸ்ட் by அந்நஜாத்

பெங்களூர் M.Sகமாலுத்தீன்

“உடுத்தும் உடையில் மாற்றம் மட்டும் சந்நியாசம் ஆகாது, வீட்டைத் துறப்பதும் சந்நியாசமில்லை; உண்மையில் மனதிலுள்ள பாசத்தையும், பந்தத்தையும், ஆசையையும், கோபத்தையும், காமத்தையும் துறப்பதே உண்மையான சந்நியாசமாகும்’ ஸ்ரீரமணமகரி´.

கடந்த கால் நூற்றாண்டு காலமாக நம் கழுத்தை பிடித்துக் கொண்டிருக்கும் கார்ப்பரேட் கலாச்சாரத்தின் கோரமுகங்களில் ஒன்று மன அழுத்தம் (Tension). ஒரே நேரத்தில் பல ஆயிரம் பேர்கள் மன அழுத்தத்தால் மருத்துவர்களை நாட, திகைத்து போனது மருத்துவ உலகம். மருந்து கண்டுபிடிக்க கால அவகாசம் எடுத்த நேரத்தில் நீண்டது வரிசை. அழுத்தம் தாங்காமல் அலறினார்கள் பலர். சிலர் சுய வைத்தியமாக “தற்கொலை’ செய்துகொள்ள ஆன்மீகத்தை நாடும்படி அறிவுறுத்தப்பட்டது. துரித உணவு (Fast food) கலாசாரத்தில் பழகிப் போனவர்கள் ஆன்மீகத்திலும் அதையே எதிர் பார்த்தார்கள். அங்குதான் போனியாகாமல் கிடந்த யோகா (Yoga)வுக்கு புது வாழ்வு கிடைத்தது.

இந்து மதத்தின் மிகச்சிறந்த கலையாக யோகா முன் நிறுத்தப்பட்டது. இதைக் கற்றுக் கொண்டால் எல்லா நோய்களிலிருந்தும் விடுபடலாம். ஆயுள் அதிகரிக்கும், ஆரோக்கியம் நிலைத்திருக்கும் என சொன்னதோடு நில்லாமல் ஊடகங்கள் மூலம் உயர்த்தியும் பிடித்தார்கள். “அவாள்’ நடத்தும் பத்திரிக்கைகளில் முன்னுரிமை தந்தார்கள். சிறு செய்திகளையும் கட்டம் போட்டு கவனம் ஈர்த்தார்கள். விளைவு பலர் காவி உடை தரித்து களம் இறங்கி கோடி கோடியாகக் காசு பார்த்தார்கள். அத்தகையவர்களில் ஒருவன்தான் திருவண்ணாமலையை சேர்ந்த அருணாச்சலம் முதலியாரின் மகன் ராஜசேகர்.

ஜெயின் ஸ்கூலில் ஆரம்பக் கல்வியை முடித்து, குடியாத்தம் ராஜகோபால் பாலிடெக்னிக்கில் டிப்ளமோவை அரைகுறையாக முடித்து 16 வயதில் வீட்டை விட்டு ஓடி சாமியார்களிடம் சில சித்து விஷயங்களை கற்று புத்தாயிரம் தினமான 2000 ஜனவரி 1ம் தேதி ஞானம் பிறந்ததாக பொய் சொல்லி “பரம ஹம்ஸா நித்யானந்தாவாக’ தன்னை அறிமுகம் செய்து கொண்டு 2003ம் ஆண்டு ஈரோடு மாவட்டம் பள்ளிப் பாளையத்தில் முதல் ஆசிரமத்தை பெங்களூர் புறநகர் பகுதியான “பிடுதி’யில் 14 ஏக்கரில் தலைமை நித்தியானந்த பீடம் அமைத்தது வரை சந்தேகம் ஏற்படாத கெட்டிகாரத் தனம். இது பிரசங்கத்திலும் தியானம், யோகா, ஹீலிங் பயிற்சி தருவதிலும் தென்பட்டது.

முப்பத்தி மூன்று நாடுகளில் 1500க்கும் மேற்பட்ட கிளைகளையும் இருபது ஆயிரம் கோடி சொத்து மதிப்போடு இயங்கிய 2010 ஆசிரமத்தின் கதவை திறந்தால் காற்று வரவில்லை. காமக் காட்சிகள் தான் சி.டி.யாக வெளி வந்தன. மார்ச் 3ம் தேதி நக்கீரன் இதழிலும 4ம் தேதி சன் தொலைக் காட்சியிலும் கண்றாவிக் காட்சிகளை திரும்ப திரும்ப ஒளிபரப்பி மக்களை கொதிப்படைய வைத்தார்கள். ஆசிரமங்கள் அமைந்த பகுதிகளில் எல்லாம் மக்கள் காரித் துப்பி செருப்பால் அடித்து தீ வைத்தார்கள். சீடர்கள் ஞானம் அடைவதற்கு பிரம்மச்சாரியத்தை கடைப்பிடிக்க வேண்டும். பெண்களோடு பேசக் கூடாது, தொடக்கூடாது ஏன் பெண் வாசனையே கூடாது என வழிமுறை வகுத்தவன் தன் தியான கூட்டத்துக்கு வரும் அழகான பெண்களை கட்டிப்பிடித்து ஆசீர்வதிப்பான்.

தொடர்ந்து வாசிக்க…..

அமெரிக்காவில் நித்தியானந்தாவின் லீலைகள்

நித்திய ஆனந்தாவுக்கு எதிராக, ‘பிளாக்மெயில்’ சீடர் தர்மானந்தா ஒரு பக்கம்

குடைச்சல் கொடுத்துக் கொண்டே இருக்க… ‘குடைச்சல் நம்பர் டூ’வாக கடல் தாண்டி குபீரென்று பாய்ந்திருக்கிறது புது தோட்டா! இது அச்சு அசல் அமெரிக்க பிரஜை ஒருத்தரின் கைங்கரியம்! அவர் பெயர் டக்ளஸ் மெக்கெல்லர்!

கலிஃபோர்னியாவில் அட்டார்னி ஜெனரல் ஜெரி ப்ரவுனுக்கு இவர் எழுதியிருப்பதாகச் சொல்லப்படும் கடிதத்தின் நகலில், அதிரடியாக பல குற்றச்சாட்டுகள் நித்தியானந்தா மீது!

‘ஐயா அட்டார்னி ஜெனரல் அவர்களே,

நித்தியானந்தா என்ற சாமியார் அமெரிக்காவில் பல கிளைகள் வைத்து ஆன்மிகம் என்ற பெயரில் பலே மோசடிகள் செய்து வருகிறார். நித்தியானந்தா ஃபவுண்டேஷன், லைஃப் ப்ளிஸ் ஃபவுண்டேஷன், நித்ய யோகா, வேதிக் டெம்பிள், தியானபீடம் ஃபவுண்டேஷன் என்று அவர் பலவகையிலும் நிறுவி பல குற்றங்கள் செய்து வருகிறார். அதையெல்லாம் நீங்கள் விசாரித்து உரிய தண்டனையை அவருக்குத் தரவேண்டும். அதற்கான பக்கா சாட்சியாக நானே வந்து எல்லாம் சொல்லத் தயார்! 2003-ம் வருடம் தொடங்கி, ஆறு வருடங்கள் அவரோடு ஒட்டி உறவாடிய பக்தன் என்ற முறையில் எனக்கு பல ரகசியங்கள் தெரியும்…’ என்கிறது, இந்த டக்ளஸ் மெக்கெல்லர் எழுதியதாகச் சொல்லப்படும் கவரிங் லெட்டர்!

எல்லாம் போச்சு சாமியாராலே!

செக்ஸ் க்ரைம், மோசடிகளோடு சேர்த்து ‘ஹவாலா’ டைப்பிலான ‘மணி லாண்டரிங்’ விவகாரத்திலும் நித்தியானந்தாவின் ஆசிரமத்துக்குத் தொடர்பு இருப்பதாகச் சொல்லி திகில் கிளப்புகிறது இந்தக் கடிதம். ‘அந்த சாமியாராலேதான் என் வேலை போச்சு. என்னைவிட்டு என் பொண்டாட்டிபோயிட்டா! இப்ப நான் கிட்டத்தட்ட நடுத்தெருவில் நிக்கிறேன் அவராலே! தேவைப்பட்டா இந்தியாவின் எந்த கோர்ட்டிலும் போய் நின்றுகூட இதைப் பற்றியெல் லாம் நான் விவரமாகச் சொல்லத் தயார்’ என்று போட்டுத் தாக்குகிறது அந்தக் கடிதம்!

மேலும் ……...

சனீஸ்வர பகவானை வணங்கும் ஜார்கண்ட் முஸ்லிம் (?) கவர்னர் பரூக் மரைக்காயர்!

புதுவை பதிப்பில் நேற்று (8-3-2010) வெளியான செய்தி இது! பாருக் மரைக்காயர் என்கிற இவர் தற்போது ஜார்ண்ட் மாநில கவர்னராக உள்ளார். இவரின் மகன் புதுவையில் கல்வி அமைச்சராக தற்போது உள்ளார்.

காங்கிரஸ் கட்சியில் உள்ள இவர்கள் சிறுபான்மை சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் காங்கிரஸில் அரபு நாட்டு தூதர் உட்பட பல பதவிகளை வகித்த வந்துள்ளனர். இஸ்லாத்தின் அடிப்படை கொள்கைக்கே விரோதியாகி விட்ட இவருக்கு முஸ்லிம் பெயர் வைத்துள்ளதால் காங்கிரஸில் பதிவகள், அதிகாரங்கள்! இவருக்கு இஸ்லாத்திற்கும் எந்த சம்பந்தமில்லை என்பதை காங்கிரஸ் அரசு விளங்கிக் கொண்டு முஸ்லிம் என்கின்ற காரணத்தினால் கொடுக்கப்பட்ட பதிவிகளை திரும்ப பெற்றால், பெயர் தாங்கி முஸ்லிம்களாக உள்ள அரசியல் வாதிகளுக்கு அது ஒரு பாடமாக இருக்கும்.

நன்றி- TNTJ.NET