வெடித்தது மக்கள் புரட்சி! பற்றி எரிகிறது எகிப்து

 

பெருகிய பஞ்சம், பற்றிப்பிடித்த பட்டினி, வாட்டி வதைத்த வேலையில்லா திண்டாட்டம்…& தாங்க முடியாத அந்த அப்பாவி வாலிபன் பவ்சி தன்னைத்தானே மாய்த்துக் கொண்டான். அவன் தன் உடல் மீது பற்ற வைத்த நெருப்பு இன்று துனிசியாவை மட்டுமல்ல, மேற்கு ஆசியாவின் சர்வாதிகார சக்திகளின் பேராசைகளையும் காவு கேட்கிறது. “ஓடு! ஓடு! நீ உயிர் பிழைக்க வேண்டும் என்றால் நாட்டை விட்டே ஓடு!” என சொந்த நாட்டு மக்களாலே விரட்டப்படும் அவல நிலை தொடரத் தொடங்கியுள்ளது.

சர்வாதிகாரி

துனிசியாவின் சர்வாதிகாரி பின் அலி ஜெய்னுல் ஆபிதீன் இன்று சவூதி அரேபியாவில் உயிருக்கு தஞ்சம் கேட்கும் நிலையில் வாழ்ந்து வருகிறார். 35 ஆண்டுகளுக்கும் மேலாக எகிப்தின் அதிபராக பதவி வகித்த ஹோஸ்னி முபாரக் இன்றும் அந்நாட்டின் சர்வாதிகாரியாக அந்நாட்டை ஆட்டிப் படைத்து வருகிறார். அரசியலில் தூய்மை வேண்டும் என நாளும் போராடி வரும் இஹ்வான்கள் வெஞ்சிறையில் வாடி வருகிறார்கள். மக்களின் சுதந்திர தாகம் ஆள்வோரின் அதிகாரப் பசிக்கு முன் சிதைக்கப்பட்டு வருகிறது. எகிப்தில் இதுவரை நடைபெற்ற அனைத்து தேர்தல்களிலும் 99.9 சதவீத வாக்குகளை (முறைகேடான வழியில்) பெற்று அதிபராக தொடர்ந்த ஹோஸ்னி முபாரக்கின் கட்சிக்கு இன்றுவரை அதே அளவு(?) வெற்றியே கிடைத்து வருகிறது. ஆனால், மக்களின் புரட்சி நைல் நதியின் வேகத்தை விட அதிகமானதாகவும் மத்திய தரைக்கடலை விட சீற்றமாகவும் உருவெடுத்து விட்டது.

இன்றைய மக்கள் போராட்டத்தின் கருப்பொருளே, எரிபொருளே இஸ்லாமிய சகோதரத்துவ எழுச்சிதான் என்பது அரசியல் ஆய்வாளர்களின் கருத்தாக உள்ளது.

கட்டுப்படுத்த முடியாத வீதிகள்

ஊழல், வேலையின்மை, விலைவாசி உயர்வு இவற்றை எதிர்த்தே போராட்டத்தில் குதித்திருக்கிறோம் என கோபாவேசத்துடன் கூறுகிறார் 26 வயதான ரதவா கயவானி என்ற இளைஞர்.

முஸ்லிம் நாடுகளில் பதட்டம்!

பேஸ் புக் உள்ளிட்ட சமூக இணையதளங்களின் மூலமும் மக்கள் புரட்சிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதில் லட்சக்கணக்கான மக்கள் வீதியில் திரண்டனர்.

துனிசியாவில் வேலையற்ற இளைஞனின் உயிர் பறிப்பு மக்களை புரட்சியின் பக்கம் இழுத்துச் சென்றதைப்போல் எகிப்தில் காவல்துறையின் வன்முறைக்கு பலியான ஹாலித் சையத்தின் மரணம் எகிப்தில் வெடித்த மக்கள் புரட்சிக்கு உடனடிக் காரணமாகியது.

ஹாலித் சையத் என்ற அந்த இளைஞர் காவல்துறையினரின் மனித உரிமை மீறல்களை வீடியோ பதிவுகளாக இணையத்தில் உலவவிட்டதால் ஆத்திரமுற்ற காவல் துறையினர் ஹாலிதை படுகொலை செய்தனர்.

போதை மருந்துகளை அளவுக்கு மீறி உட்கொண்டதால் ஹாலித் இறந்ததாக காவல்துறை கட்டவிழ்த்த கதையை மக்கள் நம்பவில்லை. மனித உரிமை ஆர்வலர்களும் களத்தில் குதித்ததால் படுகொலை செய்த காவல்துறை அதிகாரியை அரசு கைது செய்தது.

துனீசியாவில் நடந்த மக்கள் புரட்சி அளித்தகூடுதல் உற்சாகத்தால் 30 ஆண்டுகளுக்கும் மேலாக சர்வாதிகார ஆட்சி நடத்திவரும் ஹோஸ்னி முபாரக்கின் ஆட்சிக்கெதிராக மக்கள்நாடெங்கும் தொடர்ந்து கிளர்ந்தெழுந்து வருகின்றனர்.

தீ பரவுகிறது

மக்கள் புரட்சியினைத் தொடர்ந்து எகிப்து நாட்டின் முரட்டு சர்வாதிகாரி ஹோஸ்னி முபாரக் எகிப்து அமைச்சரவையை கலைத்து உத்தரவிட்டார். உடனடியாக புதிய அமைச்சரவை பதவியேற்குமென்று அறிவித் தார். பிரச்சனையின் மூலத்தை கண்டறியாமல் ஹோஸ்னி முபாரக் செய்த அறிவிப்பு குழப்பத்தை மேலும் அதிகரித்துள்ளது.

எகிப்தில் புரட்சியை அடக்கி ஒடுக்குவதில் தோல்வி அடைந்த அரசு படைகளை அவர் விரக்தியுடன் கடுமையாக விமர்சித்துள்ளார். இது அதிபர் முபாரக், விரக்தியின் விளிம்பில் சென்று விட்டதை காட்டுவதாக அரசியல் பார்வையாளர்கள் தெரிவித் துள்ளனர்.

போராட்டத்தைத் தொடர்ந்து எகிப்தின் அனைத்து நகரங்க ளிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக் கப்பட்டுள்ளது. துனீசியாவில் ஏற்பட்ட மக்கள் புரட்சியால் உத்வேகமடைந்த எகிப்திய மக்கள் வீதிகளில் இறங்கி போராடத் துவங்கியுள்ளன.

30 வருடங்களாக எகிப்தை ஆட்சி செய்யும் சர்வாதிகாரி ஹோஸ்னி முபாரக் ராஜினாமா செய்யக்கோரி ஆயிரக்கணக்கான எகிப்திய மக்கள் வீதிகளில் இறங்கி தீவிரமாக போராடத் துவங்கியுள்ளனர்.
MORE…….

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: