தீர்ப்பை மதிப்போம்…

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)…
உங்கள் அனைவர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக…ஆமின்.
பாப்ரி மஸ்ஜித் தொடர்பான வழக்கில் இன்ஷா அல்லாஹ் இன்று தீர்ப்பு வழங்கப்பட இருக்கின்றது. இந்நேரத்தில் நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய சிலவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன்.
தீர்ப்பு எதுவாகினும் அது இறைவனின் நாட்டம் என்பதை நாம் நன்றாகவே அறிந்துள்ளோம். ஒரு உண்மையான முஸ்லிம் இறைவனுக்கு அடிபணியவும், அவனுடைய தூதர் வாழ்ந்து காட்டியப்படி வாழவுமே நினைப்பான்.
குறைஷிகளுடனான ஒப்பந்தத்தில் அவர்கள் விரும்பவில்லை என்பதற்காக நபி என்ற பெயரையே அழிக்க சொன்ன நாயகம் (ஸல்) அவர்களின் வழிவந்தவர்கள் நாம். சமூக ஒற்றுமையில் நமக்கு மிகப்பெரும் பங்கிருக்கின்றது. இறுதித்தூதரும் அப்படித்தான் வாழ்ந்து காட்டினார்கள். தமக்கு ஏற்பட்ட எண்ணற்ற துயரங்களை சகித்து கொண்டு பொறுமையை கடைபிடித்தவர்கள் அவர்கள்.
தான் உண்மையான முஸ்லிம் என்று நினைக்கும் ஒவ்வொருவரும் நபியவர்கள் காட்டிய அந்த பொறுமையை கடைபிடிக்கட்டும். இறைவன் பொறுமையாளர்களுடன் இருக்கின்றான் என்பதை உணர்ந்து கொள்ளட்டும்.
உங்கள் உணர்ச்சிகளை தூண்டுமாறு வரும் எந்தவொரு sms சையும் உங்களோடு அழித்து விடுங்கள்.
தீர்ப்பு நமக்கு எதிராக வந்தால் அதற்காக உணர்ச்சிவசப்பட்டு அடுத்தவருக்கு பாதகம் செய்யும் செயலில் இறங்குபவர்கள் இறைவனுக்கு அஞ்சி கொள்ளட்டும். நபியவர்களின் வழிமுறைக்கு எதிரான எந்தவொரு காரியத்தையும் செய்ய நமக்கு உரிமை இல்லை என்பதை உணர்ந்து கொள்ளட்டும்.
அதே நேரம், தீர்ப்பு நமக்கு சாதகமாக வந்தால், அதனை காரணமாகக் கொண்டு அடுத்தவருக்கு தொந்தரவு தருபவர்கள், தீங்கு விளைவிப்பவர்கள் நான் மேற்கூறியதையே மற்றொரு முறை படித்து கொள்ளட்டும்.
வெற்றியோ, தோல்வியோ இரண்டும் நமக்கு இறைவன் கொடுத்திருக்கும் சோதனை தான். பொறுமை காத்து நமக்கான இந்த சோதனையை சந்திப்போம். அதற்கான மனவலிமையை இறைவன் தரவேண்டுமென்று துவாச் செய்வோம்.
போதும், பாப்ரி மஸ்ஜித் இடிபட்டதால் நம் நாடு உலக அளவில் பட்ட அவமானங்கள் போதும். இன்னொரு முறை அது நடக்க வேண்டாம். நீதித்துறையை மதிப்போம், சமூக ஒற்றுமையை காப்போம்….
அல்லாஹ்வே எல்லாம் அறிந்தவன்.
உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அ.
Advertisements

ஒரு பதில்

  1. […] மேலும் 0 கருத்து | அக்டோபர் 11th, 2010 at 2:42 am under  Blog திரட்டி […]

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: