ஒடுக்கப்பட்டோரின் உரிமைப் பேரணி & மாநாட்டுப் பணிகளுக்கு வாரி வழங்குவீர் !

எதிர் வரும் ஜூலை 4ல் சென்னை தீவுத் திடலில் நடைபெற இருக்கும் மாபெரும் மாநில மாநாடு பற்றி நாம் அறி வோம். மத்திய அரசுப் பணிகளில் முஸ்லிம்ளுக்கு மிஸ்ரா கமிஷன் அறிக்கையின் பரிந்துரையின்படி 10 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கக் கோருவதே மாநாட்டின் முக்கிய நோக்கமாகும்.

இந்த ஒடுக்கப்பட்டோரின் உரிமைப் பேரணி & மாநாடுசிறப்புற நடக்க தகுந்த பொருளாதார வசதிகள் தேவை. எனவே நீங்களும் உங்களது சக்திக்கேற்ப நிதியுதவி அளித்து இந்த சிறப்பான நிகழ்ச்சி மேலும் சிறப்பாக அமைவதற்கு ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

இதுவரை இல்லாத அளவுக்கு பல லட்சங்களில் திடல் வாடகை.

குடி தண்ணீர் பிரச்சினை இல்லாத அளவுக்கு மண்டபங்களிலும், மாநாட்டுத் திடலிலும் இலவசமாக குடிநீர் பாக்கெட்டுகள்.

மனிதனின் அத்தியாவசிய அவசரத் தேவையை தங்கு தடையின்றி நிறைவேற்றிட நடமாடும் கழிவறை.

ஆயிரக்கணக்கான ரூபாய் வாடகையில் ரெமேட் கழிவறை மற்றும் திடலிலேயே நிரந்தரக் கழிவறை, வரிசையில் காத்திருக்காமல் சிறுநீர் கழிக்க அறைகள்.

கழிவறை மற்றும் உளூ போன்றவற்றிற்கு திடலிலேயே நிரந்தரத் நீர்த் தொட்டியல்லாமல் மெட்ரோ வாட்டர் நிரப்பப்பட்ட 200 மீட்டர் இடைவெளியில் ஒரு டேங்.

லட்கக்கணக்கான மக்களின் உணவு, குடிபானம் மற்றும் இதரவற்றை பூர்த்தி செய்வ தற்காக 100க்கும் மேற்பட்ட பிரியாணி, சாப்பாடு, டிபன், டீ, ஸ்நாக்ஸ், ஜூஸ், வாட்டர், இஸ்லாமிய புத்தகங்கள், புர்கா, சி.டி., டி.வி.டி., ஸ்டால்கள் அனைத்தும் வாடகையில்லாமல்.

பஸ், வேன், ரயில் மார்க்கமாக தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, கேரளா, மஹாராஷ்டிரா போன்ற இந்தியாவின் பல பாகங்களிலிருந்து மாநாட்டுக்கு வருகை தரும் லட்சக்கணக்கான மக்களின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்து ஓய்வெடுத்து விட்டு பேரணிக்கு வருவதற்கு வசதியாக பல லட்சங்கள் வாடகையில் 100க்கும் மேற்பட்ட மண்டபங்கள் மற்றும் மர்கஸ்கள்.

லட்சக்கணக்கானோர் மாநாட்டிற்கு வருகை தந்து அங்கு நடக்கும் நிகழ்ச்சிகளை பார்க்க முடியாமல் ஏமாற்றமடைந்து விடக் கூடாது என்பதற்காக அனைவரும் காணும் வகையில் LED (14-8 அடி, 17-10 அடி) அமைத்தல்.

மத்தியில் இடஒதுக்கீட்டைக் கேட்டுப் பெறுவதால் முன் எப்போதும் இல்லாத வகையில் தேசிய ஹிந்து, ஆங்கிலம், உருது, தமிழ் நாளிதழ்களிலும், தொலைக்காட்சிகளிலும் பல லட்சம் ரூபாய் செலவில் விளம்பரங்கள்.

நடைபெறும் பேரணி & மாநாடு அனைத்தையும் ஒளிபரப்பத்தக்கவாறு தரமான ஒளி, ஒலி பதிவு.

மண்டபங்கள், போக்குவரத்து, பேரணி, மாநாட்டுத் திடல் போன்றவற்றில் சேவை செய்வதற்காக பல நூற்றுக்கணக்கான சீருடை அணிந்த தொண்டர்கள்.

பேரணி, மாநாட்டிற்கு லட்சக்கணக்கான மக்கள் வருவதால் அவர்ளுக்கு ஏற்படும் அவசர உதவிக்குத் தேவையான இலவச மருத்துவ மையங்கள் மற்றும் ஆம்புலன்ஸ்கள்.

வெளிநாடு வாழ் தமிழ் நெஞ்சங்கள் நாமும் மாநாட்டில் பங்கெடுக்க முடியவில்லையே என்ற ஏக்கத்தை போக்க http://www.tntj.net மற்றும் http://www.onlinepj.com போன்ற இணைய தளங்கள் மூலம் நேரடி ஒளிபரப்பு.

அல்லாஹ்வுக்கு அடுத்து நம்மை நம்பி வரும் மக்கள் பாதுகாப்பாக நிகழ்ச்சியில் பங்கெடுத்து வீடு திரும்புவதற்கு வசதியாக பாது காப்பு ஏற்பாடுகள்.

முன்னெச்சரிக்கை ஏற்பாடாக போதிய காவல்துறை கண்காணிப்புக்கு ஏற்பாடு.

எனவே உங்கள் பொருளாதார உதவிகளை பணமாகவோ அல்லது வங்கி வரைவோலைகளாகவோ பின்வரும் முகவரிக்கு அனுப்பி ரசீது பெற்றுக் கொள்ளலாம்.

வங்கி கணக்கு விபரம் :
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், வங்கி கணக்கு எண். 788274827,
இந்தியன் வங்கி, மண்ணடி கிளை, சென்னை லி 01

அனுப்ப வேண்டிய முகவரி :
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், 30, அரண்மனைக்காரன் தெரு,
மண்ணடி, சென்னை – 01. போன் : 044 – 2521 5226, செல் : 99520 56555

http://www.tntj.net/?p=17216

Advertisements

ஒரு பதில்

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: