அஜ்மீர் குண்டுவெடிப்பு: ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதிகள் சிக்கினர்!

2007-ம்ஆண்டு அஜ்மீர்   தர்கா வுக்கு அருகே உள்ள பள்ளிவாசலில் ரமலான் நோன்பு துறக்கும் வேளையில் குண்டுவெடித்தது. அதில் மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உடல்சிதறி பலியானார்கள். ஏராளமானவர்கள் படுகாயம் அடைந்தனர்.
அந்த ஆண்டின் ரமலானின் கடைசி நோன்பு நாள். விடிந்தால் நோன்புப் பெருநாள் என்ற மகிழ்ச்சியில் திளைத்திருந்த முஸ்லிம்களுக்கு மிகவும் அதிர்ச்சி யாகவும் வேதனையாகவும் மக்களை மேலும் துயரத்தில் ஆழ்த்தும் வண்ணமும் அன்றைய ராஜஸ்தான் மாநிலத்தை ஆண்ட பா.ஜ.க. அரசின் நடவடிக்கைகள் அமைந்தன.முஸ்லிம்களின் இடங்களில் முஸ்லிம்களே குண்டு வைத்தார்கள்(!) எனக் கூறி தொடர் கைதுகளை நிகழ்த்தினார்கள். அஜ்மீர் குண்டுவெடிப்புத் தொடர்பான வழக்கில் ராஜஸ்தான் முஸ்லிம் இளைஞர்கள் அடைந்த துன்பத்திற்கு அளவேயில்லாமல் போனது. எண்ணற்ற முஸ்லிம் இளைஞர் களின் கைது நடவடிக்கைகளால் ராஜஸ்தான் மாநில முஸ்லிம்கள் பீதியில் உறைந்தனர்.
இந்நிலையில் அஜ்மீர் குண்டுவெடிப்பும் ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாதிகளால் நடத்தப் பட்டது என்ற உண்மை தற்போது வெளியாகி உள்ளது.நடுநிலையாளர்கள், தொடக் கத்திலேயே கூறிவந்த குற்றச் சாட்டுகள் இதன்மூலம் நிரூபணமாகியுள்ளன.அஜ்மீர் குண்டுவெடிப்பு தொடர் பாக தேவேந்திர தாஸ்குப்தா, சந்திரசேகர் என்ற இரண்டு ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டனர். இருவரை யும் ராஜஸ்தான் மாநில தீவிரவாதத் தடுப்புப்படை கைது செய்தது.
இந்த இரண்டு தீவிரவாதி கள் மட்டுமன்றி மாலேகான் குண்டுவெடிப்பு பயங்கரவாதி களான பெண் சாமியார் பிரக்யா சிங், மற்றும் ராணுவத்தில் இருந்து கொண்டு ஹிந்துத்துவா இயக்கத்திற்கு ஆதரவாக செயல்பட்டு தேசத் துரோகம் செய்த கர்னல் ஸ்ரீகாந்த் புரோகித் என்பவனுக்கும் தொடர்பு இருக்கலாம் என்றும் சந்தேகம் இருப்பதால் அவர்களும் விசாரணை வளையத்தில் கொண்டு வரப்படுவார்கள் எனத் தெரிகிறது.
Advertisements

ஒரு பதில்

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: