மேற்குவங்காளத்தில் முஸ்லிம்களுக்கு 10 சதவீத இடஓதுக்கீடு :காம்ரேடுகளின் திடீர் பாசத்தின் பின்னணி !

மார்க்சிஸ்ட் கொடியுடன் முஸ்லிம் முதியவர் ?
– அபு ஸாலிஹ்
மேற்கு வங்கத்தில் முஸ்லிம்களுக்கு 10 சதவீத இடஓதுக்கீடு வழங்கப்படும் என்றும் ரங்கநாத் மிஸ்ரா ஆணையத்தின் பரிந்துரைகள் அடிப்படையில் நடவடிக்கைகள் மேற் கொள்ளப்படும் என்றும் மேற்கு வங்க முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா தெரி வித்திருக்கிறார்.
இது சமய அடிப்படையிலான இட ஒதுக்கீடு அல்ல, பிற்படுத்தப்பட்ட மக்களான முஸ்லிம்களின் உரிமைகளை பேணுவதில் பெருமிதம் கொள்வதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்திருக்கிறது.
முஸ்லிம்களின் இடஒதுக்கீட்டின் உரிமையை கேள்விக்குறியாக்கும் விதத்தில் ஆந்திர உயர்நீதிமன்றத்தின் 7 நீதிபதிகள் கொண்ட உயர்நீதிமன்றத்தின் அரசமைப்பு அமர்வின் தீர்ப்பு சமூக நீதியாளர்களின் மனதை வருத்தமுறச் செய்த நிலையில் மேற்குவங்க அரசின் இந்த அறிவிப்பு வெளிவந்துள்ளது.