இஸ்லாம் குறித்து அறிஞர்கள் கூற்று

தேசத் தந்தை மஹாத்மா காந்தி

இஸ்லாத்தை பற்றி நன்கு ஆராய்ந்த காந்தியடிகள் இவ்வாறு கூறுகிறார்:

இஸ்லாம் அதன் மகத்துவமிக்க நாட்களில் சகிப்புத்தன்மை அற்றதாக இருக்கவில்லை. உலக நிர்வாகத்தையே அது பொறுப்பேற்றிருந்தது. மேற்கு இருளில் மூழ்கியிருந்தபோது ஒரு பிரகாசமான தாரகை கிழக்கில் தோன்றி துயரில் ஆழ்ந்திருந்த உலகுக்கு ஒளியையும் செழிப்பையும் வழங்கியிருந்தது. இஸ்லாம் ஒரு பொய்யான மார்க்கமல்ல. இந்துக்கள் அதனை கண்ணியத்துடன் அணுகட்டும். அப்போது நான் அதனை நேசிப்பது போல் அவர்களும் நேசிப்பார்கள்

ஆண்டவன் ஒருவனே கடவுள் ஒன்றுதான் என்பதை எள்ளளவும் குழப்பமின்றி உறுதிப்படுத்தியது இஸ்லாம்தான்.  குர்ஆனைப் பக்திப் பரவசத்துடன் படிக்கும் போது எனக்கு ஒரு வித காந்த சக்தி ஏற்படுகின்றது. என் இந்து சகோதரர்கள் இதைப் பரிசுத்த உள்ளத்துடன் படித்தால் உண்மை உபதேசம் வெளியாவதை உணர்வார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) பற்றி காந்தியடிகளின் கருத்து

அம்மஹானின் சிறிதும் பிசகாத ஆடம்பரமற்ற வாழ்க்கையும் தான் என்ற அகம்பாவத்தை அறவே நீக்கிய தன்மையும் கொடுத்த வாக்குறுதியை தவறாது கண்ணியப்படுத்துதலும் நண்பர்களிடத்தும் தம்மைப் பின்பற்றியவர்களிடத்தும் கொண்டிருந்த ஆழ்ந்த அன்பும் அவருடைய ஆண்மையும் அசாமையும் கடவுளினிடத்திலும் தாம் கொண்ட வேலையிடத்தும் தளராத நம்பிக்கையும் ஆகிய இவைகளே அவருடைய வெற்றிக்குக் காரணமாயிருந்து எதிர்த்துவந்த பல இடையூறுகளையும் வென்றன. (யங் இந்தியா 21. 03. 1929)

அத்தகைய மகானை உண்மையை நாடும் என்னைப் போன்ற ஒருவன் எவ்வாறு கண்ணியப்படுத்தாதிருக்க முடியும்?

பண்டித ஜவஹர்லால் நேரு

அரசியல் சக்தியாக பாரதத்திற்குள் நுழைவதற்கு சில ஆண்டுகளுக்கு முன்பே இஸ்லாம் ஒரு மார்க்கம் என்ற நிலையில் இந்திய நாட்டின் தென்பகுதியை அடைந்துவிட்டது.

முஹம்மது நபி (ஸல்) அவர்களின் இஸ்லாத்தைப் பரப்பபும் துணிவால் அவர் தம்மீதும் தமது கொள்கைமீதும் எத்துணை உறுதி பூண்டிருந்தார் என்பது தெளிவு.

இத்தகைய உறுதியான மனோபாவத்தை அன்றைய சூழ்நிலையில் அவர் உண்டாக்கிக்கொண்டது ஆச்சிரியப்படத் தக்கதே! இத்தகைய ஒரு உறுதியால்தான் மனித வாழ்க்கைக்கு புறம்பான நிலையிலிருந்த காட்டரபிகளைக் கொண்டு உலகில் சரிபாதி பகுதியிலே வெற்றிக்கொடி நாட்டினார்.

இத்தகைய வெற்றிக்குக் காரணம் முதலாவதாக முஹம்மத் நபி (ஸல்) கொண்டிருந்த உறுதிஊக்கம். இரண்டாவதாக இஸ்லாம் போதிக்கும் சமத்துவம் சகோதரத்துவம். (டிஸ்கவரி ஆப் இந்தியா)

மேலும்……

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: