இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய மாநாட்டில்

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய மாநாட்டில் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் அறைகூவல்
பெங்களுரு, ஜன.17-

மதச்சார்பற்ற ஜன நாயக கோட்பாடுகளே நமது லட்சியம்.  சிறு பான்மையினரின் உரிமை களை பாதுகாப்பதில் இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் என்றைக்கும் முன்ன ணியில் நிற்கும்|. அடிமட் டத்திலிருந்து இயக்கத்தை உருவாக்கும் பணியில் நம்மை அர்ப்பணித்துக் கொள்ள வேண்டும் என இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் தேசியப் பொதுச் செயலாளர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் அறைகூவல் விடுத்துள் ளார்.

கர்நாடகத் தலைநகர் பெங்களூருவில் இரண்டு நாள் நடைபெற்ற இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் தேசியப் பிரதிநிதிகள் மாநாட்டில் ஹஇயக்க வளர்ச் சியும் – எதிர்காலமும்| குறித்து தாக்கல் செய்த அறிக்கையில் அவர் குறிப் பிட்டுள்ளதாவது-

பார்வையும் – பயணமும்

நமது புனிதமான பய ணத்தை உறுதிப்படுத்துவ தற்கும், எதிர்காலத்தில் நமது செயல் திட்டத்தை வகுக்கவும், நமது கட்சியின் தேசிய மாநாட்டிற்காக இங்கே கூடியிருக்கிறோம். நமது முன்னே நமது கட்சியின் 60 ஆண்டு கால வரலாற்றுச் சிறப்பு உள்ளது. நமது பலமும், பலவீனமும் நமக்கு தெரிந் திருக்கிற நிலையில் தற் போதைய சூழ்நிலையை ஆய்வு செய்வதற்கும், எதிர் காலத்தில் நமது கட்சியை வலுப்படுத்தத் தேவையான உத்திகளை அமைப்பதற் கும் நாம் இங்கே குழுமியி ருக்கிறோம்.  எனது இந்த அறிக்கை தற்போதைய நிலவரத்தை வழிப்படுத்த பயன்படும். இந்திய ய+னி யன் முஸ்லிம் லீக் சென்னையில் 1948-ம் ஆண்டு மார்ச் 10-ல் கீழ்க் கண்ட கொள்கை குறிக் கோளுடன் ஸ்தாபிக்கப் பட்டது.

அ) இந்திய விடுதலை இந்தியாவின் கவுரவம் மற்றும் இந்திய மக்களின் வளர்ந்து வரும் பலம், செழிப்பு மற்றும் மகிழ் வுக்கு பாடுபடவும் அவற்றை பேணவும், பாது காக்கவும், பராமரிக்கவும், உதவி செய்வதும்.

ஆ) நாட்டில் முஸ்லிம் கள் மற்றும் இதர சிறு பான்மையினரின் உரிமை கள், நலன்கள் ஆகிய வற்றை  அடைவது மற்றும் பாதுகாப்பும்

இ) இந்தியாவில் முஸ்லிம்களுக்கும் மற்ற சமூகத்தினருக்கும் இடையே பரஸ்பர புரிந் துணர்வு, நல்லெண்ணம், சுமூகம், நட்புணர்வு, ஒற் றுமை, ஐக்கியம் ஆகிய வற்றை மேம்படுத்துவது மாகும்.

சோர்வடைந்த நேரங் களிலெல்லாம் இந்த சமு தாயத்தை சரியாக வழி காட்டிய இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் ஸ்தபாகர் காலஞ் சென்ற காயிதெ மில்லத் முஹம்மது இஸ் மாயில் சாஹிப் மற்றும் அவரது சகாக்களுக்கு நாம் நன்றி செலுத்துவோம்.

மதச்சார்பற்ற ஜன நாயகம் மற்றும் சமூகநீதி ஆகியவற்றிற்கு இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் ஆரம்பிக்கப்பட்ட காலங் களிலிருந்து பாடுபட்டு வரு கிறது. இந்திய முஸ்லிம் களின் கலாச்சாரத் தன் மையை பாதுகாப்பதை நோக்கமாக கொண்டு அவர்களை தேசிய நிர்மா ணத்தில் பங்கு பெறவும், காலமாற்றத்தின்போது ஏற்படும் சவால்களை மதஅர்ப்பணிப்போடு – தேசியப்பார்வையோடு சந்திக்க அவர்களை தயார்ப்படுத்த முஸ்லிம் லீக் லட்சியமாக கொண் டுள்ளது.

1952-லிருந்து இன்று வரை பாராளுமன்றத்தில் இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் பிரதிநித்துவம் கொண் டுள்ளது. கேரளாவில் ஒரு கட்டத்தில் மந்திரி சபையை நடத்திச் செல் லும் மிகச் சிறந்த சரித்திரப் பதிவை கொண்டிருந்தது. 1979-ல் கட்சியின் மிகச் சிறந்த தலைவரான காலஞ் சென்ற சி.எச். முஹம்மது கோயா கேரளாவின் முதல மைச்சரானார். இந்திய தேசிய காங்கிரஸ் மற்றும்  பிற மதச்சார்பற்ற கட்சி களுடன்  ஐக்கிய ஜனநாயக  கூட்டணி அமைத்து    இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் சிறப்பாக செயல்பட்டு வந்தது.

கேரளாவில் செய்யது அப்துர் ரஹ்மான் பாபக்கி தங்ஙள், கே.எம். சீதி  சாஹிப், பானக்காடு பி.எம்.எஸ்.ஏ. ப+க்கோயா தங்ஙள் மற்றும் செய்யது முஹம்மது அலி ஷாஹிப் தங் ஙள் ஆகியோரின் சிறந்த தலைமையின் கீழ் அது ஒரு அரசியல் சக்தியாக விளங்கியதை யாராலும் மறக்க முடி யாது. கேரளா வில் பல் வேறு காலகட் டங்களில் கூட்டணி மந்திரி சபையில் அமைச்சர்கள் பங்கு பெற்று கல்வி, உள்துறை, தொழில்கள், பொதுப் பணி, உள்ளாட்சி, சமூக நலம், மீன்வளம் போன்ற பல்வேறு இலாக் காக் களை நிர்வகித்திருக் கிறார் கள்.

மேற்கு  வங்கத்தில்            1970-ம் ஆண்டு ஆரம்ப கட்டத்தில் இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் அமைச்சர்கள் இருந்திருக் கிறார்கள். அஜாய் முகர்ஜி முதல்வராக இருந்த மந்திரி சபையில் ஏழு சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்டு ஏ.கே.ஏ. ஹஸ னுஸ் ஸமான் அமைச்ச ராக பணியாற்றியிருக்கி றார். கேரளா மற்றும் மேற்கு வங்கத்திற்கு அப் பாற்பட்டு இந்திய ய+னியன் முஸ்லிம் லீகிற்கு தமிழ் நாடு, பாண் டிச்சேரி, மகா ராஷ்டிரா, கர்நாடாக, உ.பி. அஸ்ஸாம் ஆகியவற்றில் எம்.எல்.ஏ.க் கள் இருந்திருக் கிறார்கள்.

டெல்லி மாநகராட்சியி லும் வேறு சில மாநகராட் சியிலும் முஸ்லிம் மேயர் கள் பணியாற்றியிருக்கி றார்கள்.

மதச்சார்பற்ற ஜனநாயக கோட்பாடுகளின் பின்னே இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் உறுதியாக நிற்கிறது.  மதச்சார்பற்ற சக்திகள் அமைக்கும் ஜனநாயக அமைப்புகளில்தான் முஸ்லிம்களின் எதிர்காலம் சிறப்பாக அமையும் என் பதை இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் உணர்ந்தி ருக்கிறது.  மதச்சார்பற்ற கட்சிகளுடன் கூட்டணி வைத்தால்தான்  முஸ்லிம் களின் அடையாளம், சமூ கத்தின் பாதுகாப்பு ஆகிய வற்றை உறுதிப்படுத்த முடி யும் என்பதை இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் உறுதியாக நம்புகிறது. முற்போக்கு -மதச்சார்பற்ற சக்திகளுடன் இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் கூட்டணி வைப்பதானது தேசப்பற்றோடு கூடிய சிறந்த எதிர்காலத் திட்டம் என்பதை காலம் நிரு பித்திருக்கிறது.

சிறுபான்மையினர்களின் உரிமைகளை பாதுகாப்ப தில் இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் எப்போதும் முன்னணியில் இருந்திருக்கி றது.  இந்த தேசத்தின் சட்ட வடிவமைப்புகளில் முஸ்லிம் சமுதாயத்தின் உணர்வுகள் பிரதிபலிப்ப தற்கு  இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் காரணமாக இருந்திருக்கிறது. வழி பாட்டுத் தலங்கள் பாது காப்பு சட்டம், விவாகரத்து செய்யப்பட்ட முஸ்லிம் பெண்கள் பாதுகாப்பு சட் டம், அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழக சட்டம் ஆகியவை முஸ்லிம்களின் உரிமைகளை பாதுகாக்க இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் செல்வாக்கை அறிந்து கொள்ள சில எடுத்துக்காட்டுகளாகும்.

மேலும்….

Advertisements

ஒரு பதில்

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: