எவரெஸ்ட் சிகரத்தில் ஒலித்த பாங்கின் ஓசை

எவரெஸ்ட் சிகரத்தில் ஒலித்த பாங்கின் ஓசை –  செங்கம் எஸ். அன்வர் பாஷா

இஸ்லாத்தில், மலைகளுக்கு புனிதமான சிறப்புக்கள் கிடைத்துள்ளன. உலகம் படைக்கப்பட்ட நேரத்தில், முதன் முதலாக மக்காவின் நிலமும், “அபு குபைஸ்” மலைக்குன்றும் தோன்றின. நூஹு நபி (அலை) அவர்கள், உலகப்பிரளயத்தின் போது பிரயாணித்த கப்பல், ஜுதி மலையில் தான் தரை தட்டி நின்றது. ஹள்ரத் மூஸா (அலை) அவர்களை இறைவன் “சையதுல் ஜிபால்” என்ற “தூர்சீனா” மலைக்கு வரவழைத்து உரையாடினான். “பனீநயீம்” என்ற மலையின் உச்சியில் தான், ஹள்ரத் லூத் (அலை) அவர்களின் அடக்கஸ்தலம் அமைந்துள்ளது. “ஸஃபா மர்வா” மலைகள் மார்க்க அடையாளங்களாக உள்ளன. என்று அல்குர்ஆன் (2:158) கூறுகிறது. நபிகள நாயகம் (ஸல்) அவர்கள் “ஜப்லே நூர்” என்ற மலையில் அமைந்துள்ள ஹீரா குகையில் தியானத்தில் இருக்கும் நேரத்தில் தான் வஹி அருளப்பட்டது. அத்துடன் திருமறையின் வசனமும் முதன் முதலாக இறங்கியது. மதீனாவிலுள்ள “உஹது” மலையும் புனிதமான வரலாற்று சின்னமாகும். இமாம் தாவூத் (ரஹ்) அவர்கள் இந்தியா, பாக்கிஸ்தான் எல்லையை ஒட்டிய ஆப்கானிஸ்தானின் மலைப்பகுதியில் தான் பிறந்தார்கள். “காரசான்” மலையில் காஜாமுயீனுத்தீன் அஜ்மீரி (ரஹ்) அவர்கள் முராகபாவில் அமர்ந்திருந்தார்கள்.

தற்போது, இந்தியாவின் இமய மலையில் உள்ள எவரெஸ்ட் சிகரத்திற்கும் ஒரு தனி சிறப்பு கிடைத்துள்ளது! கடந்த 21- 5- 2008 ம் தேதி முப்பது வயது நிரம்பிய ஃபாரூக் ஸஅத் ஹம்மாதுல் ஸமன் (ZAMAN) என்ற இளம் மலை ஏறும் வீரர் 29035 அடி உயரம் கொண்ட எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி வரலாறு படைத்துள்ளார். இதனால், இவர் உலகிலேயே உயரமான எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய சவூதி அரேபியாவைச் சேர்ந்த முதல் வீரர் என்ற தகுதி பெறுகிறார்.

நேபாள நாட்டின் நேரப்படி பகல் மூன்று மணிக்கு, நேபாள மக்களால் “சகர்மாதா” என்று அன்புடன் அழைக்கப்படும் எவரெஸ்ட் சிகரத்தில் காலடி பதித்தார் வெற்றி வீரர் ஃபாரூக். முதல் காரியமாக அங்கு இஸ்லாத்தின் கடமையான தொழுகைக்கு வரும்படி அழைக்கப்படும், பாங்கினை உரக்கச் சொன்னார். அந்த ஓசை மலைகளில் எதிரொலித்து, ரீங்காரமிட்டது. அடுத்தபடியாக, “கலிமா” எழுதப்பட்ட சவூதி அரேபியாவின் தேசியக்கொடியை அங்கு பறக்க விட்டார். இறுதியாக எல்லாம் வல்ல நாயனுக்கு ஷுக்ரானா நஃபில் தொழுகையை தொழுது முடித்தார்.

உலகத்தின் மிகவும் உயரமான இடத்தில் நின்று உலக மக்களை தொழுகைக்கு வரும்படி கூவி அழைத்ததின் மூலம் சரித்திர சாதனையை நிகழ்த்தி விட்டார் அந்த அரேபியவீரர் !

இதில் மேலும் ஒரு சிறப்பு என்னவென்றால், 20-5-2008 –ந் தேதியை நேபாள அரசு, சர்வதேச மவுண்ட் எவரெஸ்ட் நாள்” என்று அறிவித்திருந்தது ! காரணம், 29-5-1953 ம் தேதியன்று தான் ஸர் எட்மண்டுஹில்லாரி “நேபாளி” “ஷேர்பா” டென்சிங்குடன் முதன் முதலாக எவரெஸ்ட் சிகரத்தில் ஏறினார்.

தொடர்ந்து……..

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: