அமெரிக்காவில் வசிக்கும் இந்தியருக்கு சர்வதேச மத நல்லிணிக்க விருது

வாஷிங்டன்: அமெரிக்காவில் வசித்து வரும் இந்தியரான எபூ படேலுக்கு லூயிஸ்வில்லி கிராவிமேயர் மத நல்லிணக்க விருது [^] கிடைத்துள்ளது.

வருடந்தோறும் கிராவிமேயர் விருதுகளை லூயிஸ்வில்லி கிராவிமேயர் அறக்கட்டளை வழங்கி வருகிறது. இந்த விருதை நிறுவியர் சார்லஸ் கிராவிமேயர்.

இசை, அரசியல் [^] அறிவியல், மனோதத்துவம், கல்வி [^], மதம் ஆகிய பிரிவுகளில் ஐந்து பேருக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.

2010ம் ஆண்டுக்கான மத நல்லிணக்கத்திற்கான விருது 32 வயதாகும் எபூ படேலுக்கு வழங்கப்படுகிறது. விருதுடன் ரூ.ஒரு கோடி பரிசுத் தொகையும் கிடைக்கும்.

எபூ படேல் அமெரிக்காவின் சிகோகா நகரில் வசித்து வருகிறார். பல்மத இளைஞர் அமைப்பை நிறுவி அதன் செயல் இயக்குநராக இருக்கிறார் படேல். 2007ம் ஆண்டு இவர் எழுதிய தனது சுயசரிதையான Acts of Faith: The Story of an American Muslim, the Struggle for the Soul of a Generation என்ற நூலுக்காக இந்த விருது அவருக்குக் கிடைத்துள்ளது.

67 போட்டியாளர்களிலிருந்து படேல் இந்த விருதுக்குத் தேர்வாகியுள்ளார்.

படேலின் மையம், பல்வேறு சமயங்களைச் சேர்ந்த இளைஞர்களை ஒருங்கிணைத்து அவர்களை சமூக சேவையில் ஈடுபடுத்தி வருவது குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவின் 50க்கும் மேற்பட்ட கல்லூரி வளாகங்களில் படேலின் மையம் செயல்பட்டு வருகிறது.

எபூ படேல் ஒரு முஸ்லீம் என்பதும், இந்த விருதினைப் பெறம் முதல் முஸ்லீம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

எபூ படேல், பாரக் ஒபாமாவின் மதநல்லிணக்க ஆலோசனைக் குழுவிலும் இடம்பெற்றுள்ளார்.

நன்றி  Thatstamil

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: