மிருகங்களால் கொல்லப் பட்ட மனிதர்கள்

நேற்று (26.11.2008) இரவு 9.45 மணியளவில் இந்தியாவின் வணிக நகரமான மும்பையின் சி.எஸ்.டி என்று சொல்லப் படும் நகரின் தலையாய இரயில் நிலையத்தில் சில பயங்கரவாத மிருகங்களின் நடவடிக்கை ஆரம்பம் ஆனது. ஜீன்ஸ் பேண்ட், கருப்பு டி-சர்ட், வலக்கையில் கட்டப் பட்ட சிவப்புக் கயிறு, தோளில் ஒரு பை என்ற கோலத்தில் இரயில் நிலையத்துக்குள் புகுந்த பயங்கரவாதிகள், முதலில் பைகளில் வைத்திருந்த கையெறி குண்டு(கிரணைட்)களைக் கண்டபடி வீசினர். பின்னர் அங்கு நின்று கொண்டிருந்த அப்பாவிகளைத் தானியங்கித் துப்பாக்கிகளால் இலக்கின்றிச் சுட்டனர்.

 அதேவேளை பயங்கரவாதிகளின் இன்னொரு குழு மும்பையின் உல்லாச விடுதியான கஃபே லியோபோல்டிலும் காமா மருத்துவ மனையிலும் துப்பாக்கிச் சூடு நடத்தியது. இராணுவத்தினர் பயன் படுத்தும் ஏகே-47 ரக துப்பாக்கிகளையே பயங்கரவாதிகள் பயன்படுத்தியுள்ளனர்.

பின்னர் மும்பையின் புகழ்மிக்க தாஜ்மஹால், ஓபராய் டிரைடன்ட் ஆகிய நட்சத்திர ஹோட்டல்களுக்குச் சென்று, அங்குத் தங்கியிருந்த பலரையும் துப்பாக்கி முனையில் சிறை பிடித்தனர். சில அப்பாவிகளைத் துப்பாக்கிகளால் சுட்டுக் கொன்றனர்.

 மேலும் கொலாபா, மெட்ரோ சினிமா, நாரிமன் ஹவுஸ், கிய இடங்களில் பயங்கரவாதக் குழுவினர் தாக்குதல்களை நடத்தினர். பயங்கரவாதிகள் தொடங்கிய தாக்குதல்களின் கடந்த 24 மணி நேரத்தில் இதுவரை அப்பாவிப் பொதுமக்கள் 101 பேர் கொல்லப்பட்டனர்; 187 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

 

செய்தியறிந்து மும்பைக் காவல்துறையினரும் அதிரடிப்படையினரும் ஹோட்டல்களுக்கு விரைந்தனர். பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையில் துப்பாக்கிச் சண்டை ஆரம்பமானது.

 

ஓபாராய் ஹோட்டலில் 10க்கும் மேற்பட்ட வெளிநாட்டினரை பயங்கரவாதிகள் பிணைக் கைதிகளாகப் பிடித்து வைத்துள்ளனர். பயங்கரவாதிகள் பிடியில் உள்ள வெளிநாட்டினர் உள்ளிட்டோரை மீட்க ஓபராய் மற்றும் தாஜ் ஹோட்டல்களை தேசிய பாதுகாப்புப் படை கமாண்டோக்கள் 200 பேர் சுற்றி வளைத்துத் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

 

இந்தத் துப்பாக்கிச் சண்டையில் தாஜ் ஹோட்டலின் ஒரு பகுதி தீப்பிடித்துக் கொண்டது.

 

பயங்கரவாதிகளில் மூவர் தாஜ் ஹோட்டலிலும் இருவர் ஓபராய் ஹோட்டல் சண்டையிலும் கொல்லப் பட்டனர்.

 மேலும்………

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: