குண்டுவெடிப்புகளுக்குக் காரணம் ஹிந்துத்துவா அமைப்பு –

கடந்த செப்டம்பரில் மகாராஷ்டிராவின் மாலேகோனிலும் குஜராத்தின் மொடஸாவிலும் இருசக்கர வாகனங்களில் வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டுகள் சில நிமிட இடைவெளியில் இரண்டு இடங்களிலும் வெடித்துச் சிதறின. மாலேகோனில், தடை செய்யப்படுவதற்கு முன்பு செயல்பட்டிருந்த சிமியின் பழைய அலுவலகத்தின் முன்பக்கத்தில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை சமூக விரோத ஹிந்துத்துவாவைச் சேர்ந்தவர்கள் நிறுத்தியிருந்தனர். குஜராத்தின் மொடஸாவில், குண்டுவெடிப்புக்கு உபயோகிக்கப்பட்ட இருசக்கர வாகனத்தின் சீட்டில் குர்ஆன் வசனங்கள் உள்ள ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்தது. இதிலிருந்து திட்டமிட்டு, சிமியின் மீது குண்டுவெடிப்புகளைச் சுமத்துவதற்குச் சங்பரிவாரம் செயல்பட்டிருந்ததும் உறுதியாகியுள்ளது.

 

இருசக்கர வாகனங்களின் உரிமையாளர்களை அடையாளம் தெரியாமல் இருக்க வண்டியின் நம்பர் பிளேட் மற்றும் எஞ்சினில் உள்ள எண்களைச் சுரண்டி மாற்றியிருந்தனர். தடயவியல் அதிகாரிகளின் உதவியோடு காவல்துறை நடத்திய பரிசோதனையில், குண்டுவெடிப்புகளுக்கு உபயோகிக்கப்பட்ட இரு சக்கர வாகனங்கள் குஜராத்தில் விற்கப்பட்டவை என்பது உறுதி செய்யப் பட்டது.

 

இவ்விரு சக்கர வாகனங்களின் உரிமையாளர் ஆர்.எஸ்.ஸ்ஸின் மாணவர் இயக்கமான அகில பாரதீய வித்யார்தி பரிஷத்(.பி.வி.பி)’ என்ற அமைப்பில் தீவிரத் தொண்டராகச் செயல்பட்டிருந்தவராவார்.

 

இந்தக் குண்டுவெடிப்புகளை நடத்தியவர்கள், மத்தியப் பிரதேச மாநிலம் இண்டோரைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் இந்து ஜாகரண் மஞ்ச்தொண்டர்களே என்பதையும் மகாராஷ்டிரக் காவல்துறை கண்டு பிடித்துள்ளது. வழக்கின் விவரங்கள் மத்திய உளவுத்துறைப் பிரிவுகளுக்கும் வழங்கப்பட்டுள்ளதாகக் காவல்துறை தெரிவித்தது.

 

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் மாலேகோனில் நடந்த குண்டுவெடிப்புகளுக்குப் பின்னணியில் சங்கபரிவார இயக்கங்களே செயல்பட்டிருந்தன என்பதையும் வழக்கம்போல் அந்தப் பழியை முஸ்லிம்கள் தலையில் சுமத்துவதற்காக ஒட்டுத்தாடி, தொப்பி போன்றவை ஹிந்துத்துவத் தீவரவாதிகளால் பயன்படுத்தப் பட்டிருந்தன என்பதையும் அண்மையில் கேரளாவில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் விபின் தாஸ் என்பவர் தன் வீட்டுத் தோட்டத்தில் பதுக்கி வைத்திருந்த சக்தி வாய்ந்த வெடிகுண்டுகளைக் கேரளக் காவல்துறை கண்டு பிடித்ததையும் சத்தியமார்க்கம்.காம் வெளியிட்டிருந்தது வாசகர்களுக்கு நினைவிருக்கலாம். ஆனால், நாட்டில் நடக்கும் எல்லா குண்டுவெடிப்புகளுக்கும் சிமியைத் தொடர்புபடுத்துவதிலேயே காவல்துறை இதுவரை கவனம் செலுத்தியிருந்தது. சிமி வழக்கில் நீதிபதி கீதா மிட்டலின் கையால் குட்டுப் பட்ட பிறகு மகாராஷ்டிரக் காவல்துறையின் போக்கில் குறிப்பிடத் தக்க மாற்றம் தெரிய வந்துள்ளது.

 

மகாராஷ்டிர சிறப்புக் காவல்படையின் அண்மைக் கண்டுபிடிப்புகளைத் தொடர்ந்து நேற்றைய பாராளுமன்ற செயல்பாடுகள் அனைத்தும் ஸ்தம்பித்தன. சூனிய வேளையில், குண்டுவெடிப்புகள் தொடர்பான காவல்துறையின் கைது நடவடிக்கைத் தகவல்களை முஸ்லிம்லீக், கம்யூனிஸ்ட், காங்கிரஸ் கட்சிகள் பாராளுமன்றத்தில் வெளிப்படுத்தின.

 

குண்டுவெடிப்புகள் நடைபெறும் வேளைகளில் அவற்றை ஒரு குறிப்பிட்ட சமுதாயத்திற்கு எதிராக மட்டுமே திருப்பி, அரசுகள் அநியாயம் இழைக்கின்றனஎனவும் காவல்துறையின் இக்கண்டுபிடிப்பை அடிப்படையாகக் கொண்டு உடனடியாக பஜ்ரங்தளை அரசு தடை செய்ய வேண்டும்எனவும் மாலேகோன் மற்றும் நாண்டட் பகுதிகளில் இதற்கு முன்னர் நடந்த குண்டுவெடிப்புகளோடு பஜ்ரங்தளுக்குத் தொடர்புடையது நிரூபிக்கப் பட்டுள்ளதுஎனவும் கம்யூனிஸ்ட் தலைவர் ப்ருந்தா காராட் அரசுக்குக் கோரிக்கை விடுத்தார். “நாட்டில் நடக்கும் அக்கிரமங்களின் பின்னணியில் சங்கபரிவாரமே உள்ளது என்பது ஆதாரப்பூர்வமாக பலமுறை கண்டறியப்பட்டு நிரூபிக்கப்பட்ட போதிலும் அரசு அவற்றுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கத் தயங்குகிறதுஎனவும் அவர் குற்றம் சாட்டினார்.

 

இந்தக் குண்டுவெடிப்புகளில் தொடர்புடையதாக நிரூபிக்கப்பட்டுள்ள ஹித்துத்துவ மாணவர் இயக்கமான எ.பி.வி.பியை உடனாடியாகத் தடை செய்ய வேண்டும்என காங்கிரஸ் எம்.பி. ரஷீத் ஆல்வி கோரிக்கை விடுத்தார். “ஒரு மாணவர் இயக்கம் இதுபோன்ற தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபடுவது ஆதாரப்பூர்வமா நிரூபிக்கப்பட்டுள்ளது இதுவே முதல் முறைஎனவும் அவர் கூறினார். ஆனால், “இது போன்ற எத்தகைய தீவிரவாத செயல்பாடுகளையும் எந்த ஒரு முழுச் சமுதாயத்தோடும் தொடர்பு படுத்தக் கூடாதுஎன மத்திய அமைச்சர் கபில் சிபல் பதிலளித்தார்.

 

குண்டுவெடிப்புகளின் பின்னணியில் சங்கபரிவாரம் செயல்பட்டுள்ள விஷயம் கண்டுபிடிக்கப்பட்ட இச்சம்பவத்தைப் பாராளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்ட நிமிடம் முதல், பாஜக பாராளுமன்றத்தின் செயல்பாடுகளை முடக்கும் விதமாக கூச்சலிட்டுப் பிரச்சனை ஏற்படுத்தியது.

 மேலும்……..

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: