அக்டோபர் 13 மாபெரும் பேரணி & தொடர் முழக்கப் போராட்டம்!

அக்டோபர் 13 மாபெரும் பேரணி & தொடர் முழக்கப் போராட்டம்!

ஏன்? எதற்காக?

கடந்த சில மாதங்களாக தமிழக அரசு முஸ்லிம்களை நசுக்கும் விஷயத்தில் கடுமையான தீவிர போக்கைக் கடைப்பிடித்து வருகின்றது. முஸ்லிம்களின் சட்டப்பூர்வ உரிமைகளை பரிப்பதிலும் தீவிரம் காட்டி வருகின்றது.

• முஸ்லிம்கள் பாஸ்போர்ட்டிற்கு விண்ணப்பம் செய்தால் அதன் விசாரணை அறிக்கையை பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு தராமல் வேண்டுமென்றே வருடக் கணக்கில் தாமதப்படுத்தும் காவல் துறையின் அராஜகப் போக்கு.

• மத்திய அரசாங்கம் முஸ்லிம்களுக்காக வழங்கும் கல்வி உதவிகளை வழங்காமல் மாநில அரசு தட்டிக் கழிப்பது.

• அடிப்படை வசதிகளுக்காகவும், உரிமைகளுக்காகவும் ஜனநாயக வழியில் போராடும் அமைப்பு சாரா முஸ்லிம்கள் மீது காட்டுமிராண்டித் தனமாக தாக்குதல் நடத்துவது.

• தாக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க மறுத்து அவர்கள் மீதே வழக்கு போடுவது.

• முஸ்லிம்களை மதத்தைச் சொல்லி போலிசார் கொச்சைப்படுத்தி பேசுவது.

• மத ஊர்வலம் என்ற பெயரில் முஸ்லிம் தெருக்களில் இஸ்லாத்தையும், முஸ்லிம் பெண்களையும் இழிவுபடுத்தும் வகையில் கோஷம் போடுவதை அனுமதிப்பது, அத்தகையவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் காவல் துறை வேடிக்கைப் பார்ப்பது.

• இலவச நிலம், இலவச வீடு உள்ளிட்ட எல்லா இலவச திட்டங்களிலும் முஸ்லிம்களின் சதவிகிதத்திற்கு ஏற்ப உரிமை வழங்க மறுப்பது.

• முத்துப்பேட்டை பள்ளிவாசலுக்குள் நுழைந்து நோன்பாளிகள் மீது கண்மூடித்தனமாக போலிசார் தாக்குதல் நடத்தியது.

7 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்த கைதிகளை விடுதலை செய்து விட்டு 7 ஆண்டுகளும் அதற்கு மேலும் விசாரணைக் கைதிகளாக உள்ள முஸ்லிம்களை மட்டும் விடுதலை செய்யாமல் பாரபட்சம் காட்டியது.

• இந்து கோவில்களில் பூசாரிகளாக பணியாற்றுவோர் நலனுக்காக வாரியம் அமைத்து விட்டு, பள்ளிவாசலில் பணியாற்றும் முஸ்லிம் மதகுருமார்களான உலமாக்களுக்காக நலவாரியம் அமைக்க மறுப்பது

என முஸ்லிம்களுக்கு எதிரான போக்கு தொடர்கின்றது.

இந்த அக்கிரமத்தை ஆள்வோருக்கு சுட்டிக்காட்டி உணர்த்தவும்,

எதிர் காலத்தில் இது போன்று நடக்காமல் தடு;த்து நிறுத்தவும்

இந்த சமுதாயம் மானத்தோடும் மரியாதையோடும் வாழ்வதை உறுதி செய்யவும் 13-10-2008 அன்று நடைபெறும் உரிமைப் போரில் பங்கேற்க.

இன்றிலிருந்தே தயாராவீர்! அநியாயத்திற்கு எதிராக

அலைகடலென திரண்டு வாரீர்
 

நாள்: 13-10-2008 (திங்கள் கிழமை)
நேரம் காலை 10 மணி இன்ஷா அல்லாஹ்
 

பேரணி புறப்படும் இடம்: மன்றோ சிலை அருகில்
தீவுத்திடல்
தொடர் ஆர்ப்பாட்டம்: அரசு விருந்தினர் மாளிகை,
சேப்பாக்கம்.
 
TAMILNADU THOUHEED JAMATH

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: