தினமலருக்கு நான்காவது (நீதியின்) அடி!

 முஸ்லிம்களுடைய உயிரினும் மேலான தலைவரும் இறைத்தூதருமான நபிகள் நாயகத்தை இழிவு செய்யும் வகையில் தினமலர் கார்ட்டூன் வெளியிட்டதும் அதற்காக முஸ்லிம்கள் தங்களது எதிர்ப்புகளைப் பல வழிகளில் தெரிவித்துக் கொண்டிருப்பதும் தெரிந்ததே.

 

அவற்றுள்மனித நீதிப் பாசறைஅமைப்பினர் சட்ட ரீதியான எதிர்ப்புகளைக் காட்டி, அல்லாஹ்வின் அருளால் ஓரளவு வெற்றியும் பெற்றுள்ளனர். தினமலர் பத்திரி்கைக்கு எதிராக பல்வேறுபட்ட வழக்குகளைத் மனித நீதிப் பாசறை அமைப்பினர் தொடுத்து, வழக்கில் தாங்கள் குறுக்கீடு செய்து வாதாடும் உரிமை கோரி இருந்தனர்.

 

 கடந்த 05.09.2008இல் விசாரணைக்கு வந்த இவ்வழக்கில் மனித நீதிப் பாசறை அமைப்பினர் குறுக்கீடு செய்து வாதாடலாம் என்ற உத்தரவுடன் அடுத்தடுத்து 10,12,15 ஆகிய தேதிகளுக்கு வழக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

 

 கடந்த 15.09.2008இல் விசாரணைக்கு வந்த இவ்வழக்கில் தினமலர் பத்திரிகை இந்தப் புனித ரமழான் மாதத்தில் இது போன்ற பிரச்சினைக்குரிய கேலிச்சித்திரங்களை வெளியிட்டதானது இஸ்லாமியர்களின் மத உணர்வுகளைப் புண்படுத்தி மதக் கலவரத்தைத் தூண்டக் கூடிய நடவடிக்கை என்றும் ஆகவே இவ்வழக்கில் தொடர்புடைய தினமலர் நிர்வாகிகளைக் கைது செய்ய உத்தரவிட வேண்டும் என்றும் அவர்களுக்கு முன்ஜாமின் வழங்க கூடாதென்றும் மனித நீதிப் பாசறையின் வழக்கறிஞர் திரு. சங்கர சுப்பு வாதாடினார்.

 

மனித நீதிப் பாசறையினர் தொடுத்துள்ள வழக்குகளில் தங்களைக் கைது செய்யாமலிருக்க தினமலர் பத்திரிகையின் நிர்வாகிகளான ஆர்.வேங்கடபதி, ஆர். ராகவன், ஆர்.த்தியமூர்த்தி ஆகியோர் சென்னை உயர் நீதி மன்றத்தில் முன்னதாக மனுச் செய்திருந்தனர்.

 

வழக்கை விசாரித்த நீதிபதி ஆர்.ரகுபதி,

 

ஊடகத்துறைக்கு வழங்கப் பட்டுள்ள எழுத்துச் சுதந்திரம் என்பது பொதுமக்களுள் ஒரு சாராரின் உணர்வுகளைச் சீண்டிப் பார்ப்பதற்கும் ஒற்றுமையாக வாழ்பவர்களுக்கிடையில் பிளவை ஏற்படுத்துவதற்கும் வழங்கப் பட்டிருக்கும் லைஸென்ஸ் அல்ல.  மனித வரலாற்றில் பெரும் ஆளுமையுடைய ஒருவரைக் குறித்து செய்தி வெளியிடப் படும்போது உச்சமான எச்சரிக்கையோடு பரிசீலித்து வெளியிட வேண்டும். இல்லையேல் பொது அமைதிக்குப் பங்கம் விளைவிக்கக் கூடிய பின்விளைவுகள் ஏற்படுவதைத் தடுக்க முடியாது.

  

The freedom given to the press should not be treated as a licence to denigrate the feelings of a section of the people and to divide communities for sleazy gains. While publishing sensitive matters and describing the images and works of illustrious personalities who influenced the human history, the utmost care and caution should be exercised, since harebrained attitude to such matters will have devastating consequences, upsetting public order and peace

 

என்று தனது தீர்ப்பைத் தொடங்கி,

 

allowing such practice would affect national integrity and imperil the constitutional aspirations.

 

என முடித்தார்.

தொடர்ந்து படிக்க…….

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: