பரங்கிப்பேட்டை மீரா பள்ளியில் கிறிஸ்தவ சகோதரர்கள்

மதங்களில் கடவுள் கொள்கை மற்றும் பிற சமயத்தவருடனான புரிந்துணர்விற்காக மதுரை இறையியல் கல்லூரியை சேர்ந்த சுமார் 34 கிறிஸ்துவ சகோதரர்கள் நேற்று 15.09.2008 அன்று லுஹர் தொழுகைக்கு பிறகு ஜாமிஆ மஸ்ஜித் மீராப்பள்ளி வந்திருந்தனர்.

மீராப்பள்ளி பேஷ்இமாம் ஜனாப் அப்துல்லா அவர்களும், ஜனாப். அப்துல் காதிர் மதனி அவர்களும் இஸ்லாத்தில் கடவுள் கொள்கையை பற்றியும், பைபிளில் கிறிஸ்துவை பற்றி கூறப்பட்டவை பற்றியும், குர்ஆனின் பார்வையில் ஏசுநாதர் என்பவர் இறைவன் அல்ல, இறைவனின் செய்தியை மக்களுக்கு சுமந்து வந்த ஒரு தூதர் எனவும், இறைவன் மூவர் அல்ல ஒருவராகத்தான் இருக்கமுடியும் எனவும், இறைவன் தனக்கு ஒரு மகனை ஏற்படுத்திக்கொள்ள தேவையில்லை என்பதனைப்பற்றியும் மிக விரிவாக பைபிளில் இருந்தே ஆதாரங்களுடன் விளக்கி பேசினார்கள். வேதமளிக்கப்பட்டவர்கள் என்று குர்ஆன் அவர்கள பரிவுடன் அழைப்பதாக மதனி அவர்கள் குறிப்பிட்டு பேசி அவர்களின் வேதத்தையும், குர்ஆனையும் திறந்த மனதுடன் படித்துப்பதர்த்து நேர்வழி பெறுமாறு வேண்டினார். 

சுமார் 3 மணி நேரம் நடைபெற்ற இந்த உரைகள வந்திருந்த கிறிஸ்துவ சகோதரர்கள் பொறுமையுடன் அமர்ந்திருந்து கேட்டனர். ரமலான் காலமாக இருந்ததால் வந்திருந்த விருந்தினர்கள சரியான முறையில் உபசரிக்க இயலாமல் போனது குறித்து மீராப்பள்ளி நிர்வாகம் தனது வருத்தத்தை வெளியிட்டாலும் நல்ல சில உணவு ஏற்பாடுகள செய்து இருந்தது. 

இம்மாதிரியான புரிந்துணர்வு அமர்வுகள் நமதூருக்கு புதிது என்றாலும் திரளான பொதுமக்கள் அமைதியுடன் கலந்து கொண்டு உரையினை கேட்டனர். இனியாவது உலகமக்களுக்கான இறைவனின் செயதியை மாற்று மத சகோதரர்களுக்கு கொண்டு சேர்க்கும் மகத்தான பணியின் அருமை நமக்கு புரிபடுமா
நன்றி: பரங்கிப்பேட்டை தகவல் களஞ்சியம்
Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: