கருணாநிதிக்கு பி.ஜே கண்டனம்

ஏகன் அல்லாஹ்வின் திருப்பெயரால்…

அன்பிற்குரிய சகோதரர்களே !

        கடந்த சில மாதங்களாகவே தமிழகத்திலுள்ள முஸ்லிம்களுடைய மானம், மரியாதை, உயிர், உடமையெல்லாம் அரசாங்கத்தினால் மிகவும் அற்பமாகவும் அலட்சியமாகவும் பார்க்கப்படுவதை தொடர்ச்சியாக கண்டு வருகிறோம். இது இந்த மூன்று நான்கு மாதங்களுக்கு முன்னால் இல்லாத ஒரு நிலை. ஒரு 5 வருடங்களுக்கு முன்னால் இருந்த ஒரு நிலை. அந்த நிலையை நோக்கி முஸ்லிம்களை கொண்டு செல்வதை நாம் வரிசையாக பார்க்கிறோம்.

         பேர்ணாம்பேட்டில் மின்சாரத்திற்காக போராட்டம் பண்ணினார்களென்றால் அது ஒரு தேவைக்கு போராட்டம் பண்ணுகிறார்கள், அரசாங்கத்தின் கையாலாகாத்தனத்திற்காக போராடுகிறார்கள். அந்த போராட்டத்திற்கு அனுமதி கொடு, மறுத்து விட்டு போ, அல்லது கைது பண்ணு அதை செய்யலாம். ஆனால் மிருகத்தை அடிக்கிற மாதிரி அடித்த காட்சியையெல்லாம் பார்க்கும் பொழுது நம்முடைய மண்டை பிளந்துவிடும் போல் உள்ளது. அவ்வளவு கடுமையான முறையில்..சும்மா நிக்கிறவனை போய் அடிக்கிறான்.

            அது மாதிரி கன்னியாகுமரி மாவட்டம் திருவிதாங்கோடடில் விநாயகர் ஊர்வலம் கொண்டு வந்து உள்ளே விட்டு அதை சட்டரீதியாக எப்படி பாதுகாப்பு செய்யவேண்டுமோ அந்த ஏற்பாடுகளையெல்லாம் செய்யாமல் முஸ்லிம்களின் கடைகளையெல்லாம் அவர்கள் தாக்க, அதன் பிறகு ஏன் தாக்கினீர்கள் என கேட்க அங்கேயும் முஸ்லிம்களை நையப்புடைத்து, இந்த போலீஸ் தடியடியினால் இந்த ஒரு வாரத்திற்குள் மட்டும் படுகாயம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 200-ஐ தாண்டுகிறது.

            அதே மாதிரி திண்டுக்கல் பேகம்பூரில் இதே மாதிரி மக்களை அடிக்க, அனைத்துமே முஸ்லிம்களுக்கு எதிராகத்தான். பேர்தான் பேசிக்கொள்வார்கள் பகுத்தறிவு வாதி அப்படி, இப்படி என்று, ஆனால் உள்ளுக்குள்ளே முழுக்க முழுக்க அவருக்குள்ளே ஒரு வித மதவெறி, தமிழக முதல்வருக்கு இருந்தால் எப்படி இருக்குமோ அதே மாதிரி இந்த காவல்துறையின் நடவடிக்கைகளெல்லாம் தொடர்ச்சியாக நடந்து கொண்டே இருக்கிறது.

          அதனுடைய முத்தாய்ப்பாக நேற்றைய தினம் (முத்துப்பேட்டை) பள்ளிவாசலுக்குள்ளே, ஊர்வலம் போகிறது என்பதற்காக முஸ்லிம்களையெல்லாம் ஜமாஅத்தார்கள் பள்ளிவாசலுக்குள் அழைத்து வைத்துக் கொள்ள, இந்த சிலை கடந்து சென்ற பிறகு, உள்ளே இருந்த மக்கள் மீது காவல்துறை மிருகங்கள் பள்ளிவாசலுக்குள்ளே பூட்ஸ் காலோடு புகுந்து பள்ளிவாசலுக்கு உள்ளே இருந்த மக்களை அடித்து துவைத்து இரத்தக் காயப்படுத்தி பள்ளிவாசலெல்லாம் இரத்த களறியாக்கின ஒரு கொடூரம் நேற்று நடந்திருக்கிறது. அப்படியானால் முஸ்லிம்களைப் பற்றி இவர்கள் என்ன மதிப்பீடு போடுகிறார்களென்றால், நாம் மதிப்பீடு போட வேண்டிய நேரம் வந்து விட்டது. இனிமேலும் ஜால்ரா…முஸ்லிம்களின் மானத்தோடும் உயிரோடும் உடமையோடும் விளையாடுவீர்கள்! எங்கள் பள்ளி வாசலிலும் விளையாடுவீர்களா? அல்லாஹ்வுடைய ஆலயத்திற்குள்ளே பூட்ஸ் காலோடு நுழையக்கூடிய தைரியம், கோவை குண்டு வெடிப்பு நேரத்தில் வந்ததை பார்த்தோம். பள்ளி வாசலுக்குள்ளே நுழைந்து தொழுது கொண்டிருந்தவர்களையெல்லாம் இழுத்துக் கொண்டு போன காட்சிகளை  பாhத்தோம். இரவு தொழுகை நேரத்தில் ரெய்டு விட்ட காட்சியை பார்த்தோம். அதற்கு சரியான பாடம் கற்பித்து கொடுத்த பிறகு அடங்கி கிடந்த இந்த கொடூரம் திரும்பவும் ஒரு பள்ளிவாசலுக்குள்ளே.

          பள்ளிவாசலுக்குள்ளே இருப்பவனை நீ ஏன் அடிக்கிறாய்? வெளியே வந்து கலாட்டா பண்ணினால்கூட நீ அடிக்கக்கூடாது. வேறு மாதிரியான முறைகளை தான் கையாள வேண்டும். ஆனால் பள்ளிவாசலுக்குள்ளே போய் அடிப்பதற்கு உனக்கு என்ன நியாயம் இருக்கு? அந்த உரிமையை உனக்கு எவன் தந்தது? ஒரு கோவிலுக்குள்ளே போய் அடிப்பியா? ஒரு சர்ச்சிலே போய் உன்னால அடிக்க முடியுமா? ஒரு குருத்வாராவில் நீ போய் அடிச்சா உன்னை விடுவாங்களா? அப்போ இந்த முஸ்லிம்களுடைய உயிர், முஸ்லிம்களுடைய வழிபாட்டு தலமென்றால் கேலிக்குரியதா அது? ஒரு மதிப்பு இல்லையா? அப்போ இரத்தம் கொதிக்கிற அளவுக்கு இப்போதைய ஆளும் கட்சியுடைய நடவடிக்கைகள் முஸ்லிம்களுடைய மத உணர்வுகளோடு மோதி பார்க்கிறது.

           முஸ்லிம்களுடைய உடம்போடு மோதிப் பார்த்தார்கள்! முஸ்லிம்களுடைய உரிமையோடு மோதிப் பார்த்தார்கள்! தினமலர் எப்படி நபிகள் நாயகம்(ஸல்) அவர்களுக்கு கார்ட்டூன் வரைந்து மதத்தோடு மோதிப் பார்த்ததோ அதே மாதிரியான ஒரு யுத்தத்தை தமிழ்நாடு போலீஸார், கலைஞர் தலைமையில் இருக்கிற போலீஸார் பள்ளிவாசலில் பூட்ஸோடு நுழைந்து, பள்ளிவாசலில் வெள்ளைக்காரன் காலத்தில் சிந்தின இரத்தம்! இப்போ இரத்தம் சிந்த வைத்திருக்கிறார்கள். பள்ளிவாசலில் உள்ளே நுழைந்து, அடித்து, காயப்படுத்தி பயங்கரமான ஒரு வெறியாட்டம், மிருக வெறியாட்டம் நடத்தி இருக்கிறார்கள்.

          இதற்கு நியாயம் கேட்கிற வகையில் தெளிவான ஒரு முடிவு எடுக்க வேண்டிய நேரம் வந்திருக்கிறது. இதற்கு இந்த மிருகங்களுக்கு எதிராக சரியான நடவடிக்கை எடுத்து, அரசாங்கம் ஒழுங்கான நியாயம் வழங்கவில்லை என்றால் தமிழகம் கிடுகிடுக்கிற ஒரு போராட்டத்தை இங்கு நடத்துவதற்கான ஒரு முடிவை இன்று நாம் எடுக்க வேண்டும்.

             அல்லாஹ் ரப்பில் ஆலமீன் இது மாதிரி போராடக்கூடிய மக்களுக்கு தான் வெற்றியை தருவான்.

 (சென்னை மண்ணடியிலுள்ள தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் தலைமையகத்தில் ஜூம்மாவில் மௌலவி.பி.ஜெய்னுல் ஆபிதீன் அவர்களால் நிகழ்த்தப்பட்ட  இந்த கண்டன உரை அன்றைய தினம் விண் டிவி யிலும் ஒளிபரப்பு செய்யப்பட்டது.)

 நன்றி:dawa news (dawa.seithi@gmail.com)

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: