திருந்தாத தினமலர் இருந்தென்ன..?

ஏழை மக்களுக்கு சுகாதாரக் காப்பீடு” என்ற தலைப்பில் கடந்த ஆண்டு 06.10.2007இல் தினமலர் ஒரு செய்தி வெளியிட்டிருந்தது. அச்செய்திக்கு எவ்விதத் தொடர்புமின்றி அச்செய்தியோடு ஒரு படம் இணைக்கப் பட்டிருந்தது. அது, சர்ச்சைக்குரிய டென்மார்க்கின் யூல்லண்ட் போஸ்ட்டன் இதழில் வெளியான கேலிச்சித்திரங்களில் ஒன்றாகும். டென்மார்க் கேலிச்சித்திரங்கள் அப்போது அதிகம் அறியப் படாததால் அது கவனம் பெறாமல் போயிற்று. தினமலரின் இந்தத் திட்டமிட்ட எழுத்து வேசித்தனம் நடந்தது கடந்த ஆண்டின் ரமளானில் என்பது இங்கு நினைவு கூரத் தக்கது.

 

முஸ்லிம்கள் இவ்வாண்டின் புனித மாதமான ரமளானை மகிழ்வுடன் தொடங்க முயன்றபோது அவர்களது மகிழ்ச்சியைக் குலைத்து அவர்களுக்கு வருத்தத்தையும் சீற்றத்தையும் ரமளான் பரிசாக அளித்திருக்கிறது தினமலர் நாளிதழ்.

 

முஸ்லிம்கள் ரமளான் நோன்பைத் தொடங்கிய 01.09.2008 நாளிட்ட தினமலரின் வேலூர், திருச்சி, ஈரோடு, சேலம் பதிப்புகளில் இலவச இணைப்பாக வெளியிடப் பட்ட கம்ப்யூட்டர் மலரில், முஸ்லிம்கள் உயிரினும் மேலாக மதிக்கும் அவர்களின் தலைவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைக் குறித்து டென்மார்க்கின் யூல்லண்ட் போஸ்ட்டன் வெளியிட்டிருந்த இன்னொரு கேலிச்சித்திரத்தை வெளியிட்டது.

 

கொதித்தெழுந்த முஸ்லிம்கள், தமிழகத்தின் பல பகுதிகளில் தங்கள் எதிர்ப்புகளைக் காட்டத் தொடங்கினர்.

 

கேலிச் சித்திரம் வெளியான அன்று மாலை வேலூரை அடுத்த மேல்விஷாரத்தில் முஸ்லிம்கள் மறியல் செய்தனர். தொடர்ந்து, வேலூரில் உள்ள தினமலர் அலுவலகத்தை முற்றுகையிடப் போவதாக அறிவித்ததால் வேலூர் மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள்  வேலூர் தினமலர் அலுவலகம் முன்பு 02.09.2008 காலையில் குவிந்து போராட்டத்தைத் துவக்கினர்.

 

காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை வேலூர்-பெங்களூர் சாலைப் போக்குவரத்து முற்றிலும் சீர்குலைந்தது.

 

தொடர்ந்து வாசிக்க….

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: