தினமலரைக் கண்டித்து சென்னையில் மாபெரும் ஆர்ப்பாட்டம்

நம் உயிரினும் மேலான நபி (ஸல்) அவர்களின் உருவத்தை கேலி சித்திரமாக வரைந்து புனிதமிகு ரமளான் மாதத்தில் வெளியிட்ட தினமலர் நாளிதழைக் கண்டித்து சென்னையில் உள்ள தினமலர் அலுவலம் அருகில் தடையை மீறி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை இன்று (4-9-2008) தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நடத்தியது.

நேற்றைய தினம் (3-9-2008) முடிவு செய்யப்பட்டு இன்று (4-9-2008) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது என்றாலும் ஆயிரக்கணக்கான சகோதர சகோதரிகள் நோன்பு வைத்ததோடு கலந்து கொண்டு தங்களின் கண்டனங்களைப் பதிவு செய்தனர்.

இதில் மாநிலத் தலைவர், மாநில பொதுச் செயலாளர் மற்றும் மாநில நிர்வாகிகள் கலந்து கொண்டு கண்டன உரை ஆற்றினார்கள்.

இறுதியில் கூட்டத்தில் கலந்து கொண்டவர்களை காவல் துறையினர் கைது செய்யத் துவங்கி வாகனத்தில் ஏற்றிச் சென்றனர். அதிகமானவர்களைக் கைது செய்ய வேண்டியிருந்ததால் தங்க வைப்பதற்கு இடம் இல்லாமல் முதல் கட்டமாக கைது செய்து ஏற்றிச் சென்றவர்களையும் வழக்கம் போல் சிட்டியை ரவுண்ட் அடித்துவிட்டு மன்றோசிலை அருகே இறக்கிவிட்டது குறிப்பிடதக்கது.

 விரிவான செய்திகள் மற்றும் படங்களுக்கு இங்கே கிளிக்கவும்

 

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: