முஸ்லிம் லீக் மணிவிழா மாநில மாநாடு குறுந்தகடு

எதிர்வரும் 26.07.2008 சனிக்கிழமை மாலை 4 மணியளவில் திருச்சி, பாலக்கரை – மதுரை ரோடு, பேலஸ் தியேட்டர் அருகிலுள்ள சந்தன மஹாலில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மணிவிழா மாநில மாநாடு குறுந்தகடு வெளியீட்டு விழா மற்றும் எழுத்தரசு ஏ.எம்.ஹனீஃபின் எழுத்துலக சேவைக்கு பாராட்டு விழா ஆகியன நடைபெறவுள்ளன.

விழாவுக்கு துபை காயிதெமில்லத் பேரவை தலைவர் ஹாஜி எம்.அப்துர் ரஹ்மான் தலைமையேற்கிறார். திருச்சி புறநகர் மாவட்டச் செயலாளர் வி.எம்.ஃபாரூக் வரவேற்புரையாற்றுகிறார்.

புறநகர் மாவட்ட தலைவர் ஜி.எஸ்.ஏ.மன்னான், மாநகர் மாவட்டத் தலைவர் கே.எம்.கே.ஹபீபுர்ரஹ்மான், புறநகர் மாவட்ட பொருளாளர் எம்.ஒய்.ஷாஜஹான், மாநகர் மாவட்ட செயலாளர் ஏ.அப்துல் கப+ர் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தமிழ் மாநில தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் தமிழ்நாடு மாநில இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் சார்பில் பொற்கிழி வழங்கி சிறப்புரையாற்றவுள்ளார்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மணிவிழா மாநில மாநாடு குறுந்தகட்டை, மாநில பொதுச் செயலாளர் டாக்டர் ஹக்கீம் எஸ்.ஏ.சையத் சத்தார் வெளியிட, முதல் பிரதியை துபை காயிதெ மில்லத் பேரவை பொதுச் செயலாளர் ஏ.லியாகத் அலி, துபை காயிதெ மில்லத் பேரவை ஏ.முஹம்மது தாஹா ஆகியோர் பெறுகின்றனர்.

மாநில பொருளாளர் வடக்கு கோட்டையார் வி.எம்.செய்யது அஹமது, எம்.ஏ.கலீலுர் ரஹ்மான் எம்.எல்.ஏ., எச்.அப்துல் பாஸித் எம்.எல்.ஏ., தளபதி ஷபீகுர் ரஹ்மான் மன்பஈ, எம்.எஸ்.ஏ.ஷாஜஹான், கவிஞர் இஸட்.ஜபருல்லாஹ், நெல்லை மஜீத், திருப்ப+ர் எம்.ஏ. சத்தார், கோவை எம்.எஸ். முஹம்மது ரபீக், ஜி.எம். ஹாஸிம், முஃப்தி ஏ.உமர் பாரூக், எம். ஜெய்னுல் ஆபிதீன், காயல் மஹப+ப், கமுதி பஷீர், கே.ஏ.எம். முஹம்மது அப+பக்கர், கோவை நாஸர் எம்.சி., வழக்கறிஞர் வெ.ஜீவகிரிதரன், வழுத்தூர் ஏ.பஷீர் அஹமது, மில்லத் எஸ்.பி.முஹம்மது இஸ்மாயில், எம்.ஏ.எம். நிஜாமுத்தீன் (எம்.ஏ.எம். கல்லூரி), கே.பி.இஸ்மத் பாட்ஷா ஆகியோர் வாழ்த்துரை வழங்குகின்றனர்.

இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் மாநில துணைத்தலைவர் எழுத்தரசு ஏ.எம்.ஹனீஃப் ஏற்புரை நிகழ்த்துகிறார்.

விழா ஏற்பாடுகளை இந்திய ய+னியன் முஸ்லிம் லீக், திருச்சி மாநகர் மாவட்டம், திருச்சி புறநகர் மாவட்டம் ஆகியன இணைந்து செய்துள்ளன.

இதனையே அழைப்பாக ஏற்று தாய்ச்சபையின் முன்னணியினர், சமுதாய பெருமக்கள் அனைவரும் பெருந்திரளாக வருகை தர அன்புடன் அழைக்கப்படுகிறீர்கள்.

தகவல்:
எம்.கே.எஸ்.ஜமால்,
மாநகர் மாவட்ட செயலாளர்.

தகவல்: முதுவை ஹிதாயத்

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: