இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநில மாநாடு

 

நாட்டை வலிமையாக்க
அனைவரும் சகோதரத்துவத்துடன் இணைந்து செயல்பட வேண்டும்
இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டில் கவிஞர் அப்துல் ரகுமான் பேச்சு

“நாட்டை வலிமையாக்க அனைவரும் சகோதரத்துவத்துடன் இணைந்து செயல்பட
வேண்டும்” என்று இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டில் கவிஞர் அப்துல்
ரகுமான் பேசினார்.

இலக்கிய மாநாடு

இஸ்லாமிய தமிழ் இலக்கிய கழகத்தின் முதல் மாநில மாநாடு திருச்சி ஜமால்
முகமது கல்லூரியில் தொடங்கியது. தொடக்க விழாவிற்கு கழக பொதுச்செயலாளர்
இதாயத்துல்லா தலைமை தாங்கினார்.

ஜமால் முகமது கல்லூரி முதல்வர் ஷேக்முகமது வரவேற்றார். ஜே.எம்.ஹாரூன்
எம்.பி, பத்ஹூர் ரப்பானி, பேராசிரியர் அப்துல்சமது ஆகியோர் வாழ்த்தி
பேசினார்கள். விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் திருமாவளவன், தஞ்சை
தமிழ் பல்கலைக்கழக துணைவேந்தர் சி.சுப்பிரமணியம் ஆகியோர் சிறப்பு
விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

ரூ.4 லட்சம் நிதி

விழாவில் தஞ்சை தமிழ் பல்கலைக்கழக ஆய்வு இருக்கை நிதியாக ரூ.4 லட்சம்
வழங்கப்பட்டது. இந்த நிதியை கழகத்தின் துணைத்தலைவர் பிரசிடென்ட்
அபூபக்கர், துணைவேந்தர் சுப்பிரமணியத்திடம் வழங்கினார். இலக்கியத்துறை
அறிஞர்களுக்கு ரூ.5 ஆயிரம் பொற்கிழியுடன் கூடிய விருதுகள் வழங்கப்பட்டன.

தஞ்சை தமிழ்பல்கலைக்கழக துணைவேந்தர் சி.சுப்பிரமணியம் பேசுகையில்,
“இஸ்லாம் வருவதற்கு முன்பே அரபு நாட்டிற்கும் தமிழ் இலக்கியத்திற்கும்
தொடர்பு உண்டு. அப்போது அரபு நாடுகளில் இருந்து தமிழகத்திற்கு வந்தவர்களை
யவனர்கள் என்று அழைத்தார்கள். ஏற்கனவே உள்ள நிதியுடன் தற்போது
வழங்கப்பட்ட நிதியையும் இணைத்து இஸ்லாமிய அறிஞர்களை நியமித்து இஸ்லாமிய
இலக்கியம் தொடர்பான ஆய்வு பணிகள் மேற்கொள்ளப்படும்” என்றார்.

சகோதரத்துவம்

விழாவில் கவிஞர் அப்துல் ரகுமான் பேசுகையில், “இஸ்லாமியர்களுக்கும்
தமிழர்களுக்கும் இடையே பல ஒற்றுமைகள் உள்ளன. பட்டினத்தார் ஒன்றென்று இரு,
தெய்வம் உண்டென்று இரு என இஸ்லாம் குறித்து தெரியாமல் பாடியிருக்க
முடியாது. இந்த நாட்டை வலிமையாக்க நாம் அனைவரும் இணைந்து
சகோதரத்துவத்துடன் செயல்பட வேண்டும்” என்றார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பேசுகையில்,
“அமெரிக்காவின் ஏகாதிபத்தியத்தை எதிர்க்கக்கூடிய சக்தி இஸ்லாமுக்கு
மட்டுமே உண்டு. இந்த இலக்கிய அமைப்பு ஒடுக்கப்பட்ட மக்களையும்,
இஸ்லாமியர்களையும் இணைக்கும் லட்சியத்தை நோக்கி செல்ல வேண்டும்.
தலித்துகளும் சிறுபான்மையினரும் இணைந்தால் மத்தியிலும், மாநிலத்திலும்
ஆட்சியை நிர்ணயிக்கும் சக்தியாக உருவாக முடியும். இஸ்லாமியர்களின்
பாதுகாப்பு அரணாக நாங்கள் எப்பொழுதும் செயல்படுவோம்” என்றார்.

ஒற்றுமை

இஸ்லாமிய தமிழ் இலக்கிய கழகத்தின் துணைத்தலைவர் பிரசிடென்ட் அபூபக்கர்
பேசுகையில், “இந்த அமைப்பு இஸ்லாமியர்களின் மட்டும் பாடுபடும் அமைப்பல்ல.
தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்தவர்களின்
முன்னேற்றத்திற்கும் வழிகாட்டும் அமைப்பு. இந்த அமைப்பின் மூலமாக பிற
சமுதாயத்தை சேர்ந்தவர்களுக்கும் விருதுகள் வழங்கப்படுகின்றன. ஒற்றுமையாக
செயல்படுவதன் மூலமாக நாம் மிக அதிகமாக சாதிக்க முடியும்” என்றார்.

மாநாடு தொடர்ந்து நேற்றும் நடைபெற்றது. இதில் மத்திய மந்திரிகள்
ஜி.கே.வாசன், பழனிமாணிக்கம் உள்பட பலர் பேசினார்கள்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: