இஸ்லாத்துக்கு அழைக்கும் விஞ்ஞானம்

அறிவியல் அபிமானிகளே! நாம் வசிக்கும் இந்த பூமி ஓரிடத்தில் ஓய்ந்திருக்காமல் அதன் பாட்டுக்கு மணிக்கு 1,08,000 கி. மீ. வேகத்தில் ஓட்டம் பிடித்தால் என்றேனும் ஒரு நாள் இந்த பூகோளம் பேரண்டத்தின் எல்லையை தாண்டுமா, தாண்டாதா?. அதுதான் போகட்டும் - கோடிக்கணக்கான வருடங்களாக இந்த நிகழ்ச்சிப் போக்கு நடந்து கொண்டிருக்கையில் குறைந்த பட்சம் இந்த பூமி அது உள்ளடங்கியிருக்கும் பால்வழி மண்டலத்தையாவது  என்றோ தாண்டியிருக்க வேண்டாமா?. தாண்டியே சென்றிருக்க வேண்டும். ஆனால் ஏன் தாண்டவில்லை?.
ஆகாயத்திற்கு ஓர் எல்லை [...]

நச்சுக் குண்டுகளையும், அக்கினிக்குண்டுகளையும் உற்பத்தி செய்யும் இஸ்ரேல்!

ஈரான் ஏவுகணைச் சோதனை நடத்தியவுடன் பீதியில் அலறும் அமெரிக்கா தனது கள்ளப்பிள்ளை ஈஸ்ரேலிடன் உள்ள பேரழிவு ஆயுதங்களைப் பற்றி வாய்திறக்காதது ஏன்?
- HUSSAINGHANI
ஈரான் மீது தாக்குதல் நடத்த தயாராகுங்கள்’ என, தனது கள்ளக்குழந்தையான இஸ்ரேலை புஷ் கேட்டுக் கொண்டுள்ளார். மிகப் பெரிய பேரழிவை ஏற்படுத்தும் நச்சுக் குண்டுகளையும், அக்கினிக்குண்டுகளையும் உற்பத்தி செய்து இஸ்ரேல் குவிக்கிறது.
எந்த இஸ்லாமிய நாட்டிலும் இத்தகைய அழிவு ஆயுதங்கள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஈரான் கடந்த வாரம் நீண்ட தூர மற்றும் நடுத்தர ரகத்தைச் [...]

ஆட்டம் காண்கிறது அமெரிக்கா

சொர்க்கபுரி; குப்பை கூட்டும் தொழிலாளி கூட காரில் வந்திறங்கிப் பணியாற்றுவார்; எந்தக் கவலையுமின்றி சுகமாக வாழும் மக்கள்; பொருளாதார வளமும் ஜனநாயக மாண்புகளையும் கொண்ட நாடு; குடி, கூத்து, கும்மாளம் என ஆனந்தமாகப் பொழுதைக் கழிக்கும் மக்கள்  என அமெரிக்க வல்லரசின் செல்வச் செழிப்பைப் பற்றி முதலாளித்துவ எழுத்தாளர்கள் பெருமிதத்தோடு குறிப்பிடுகிறார்கள்.

 ஆனால், அதே அமெரிக்காவில்தான் வறுமை, வேலையின்மை; வேலையிழந்து வாழ்விழந்து உழைக்கும் மக்கள் பிச்சை எடுக்கும் அவலம்; தற்கொலைகள், போதை மருந்து, கொலைகொள்ளைகள் என சமூகம் அழுகி [...]

அடுத்தடுத்து ஈரான் ஏவுகணைச் சோதனை-இஸ்ரேலுக்கு குறி?

வாஷிங்டன்: நேற்று ஏவுகணைச் சோதனை நடத்திய ஈரான் இன்று 9 ஏவுகணைகளை ஒரே நேரத்தில் ஏவி சோதனை நடத்தியுள்ளது அமெரிக்காவுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது. ஈரானின் ஏவுகணைச் சோதனகளை அமெரிக்கா கடுமையாக கண்டித்துள்ளது.
இந்த சோதனைகள் மூலம் அமெரிக்க நகரங்களையும், இஸ்ரேலையும் தாக்கும் வல்லமை தங்களுக்குக் கிடைத்திருப்பதாக ஈரான் கூறியுள்ளது.
ஈரானின் ஹோர்மஸ் ஜலசந்திப் பகுதியில் இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது. இந்த நீர் வழிப் பாதையில்தான் உலகின் 40 சதவீத எண்ணைக்குழாய்கள் செல்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. (எண்ணை வளம் மிக்க நாடுகளில் [...]

ஜார்ஜ் புஷ் மீது வழக்குத் தொடுப்பது எப்படி?

‘போரா? இராக்கிலா? சேச்சே! அதெல்லாம் எப்போதோ முடிஞ்சுபோச்சு! இராக் மக்கள் முந்தாநாளே இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிட்டாங்களே!’ என மைக் செட் வைத்து அலறிக்கொண்டு இருக்கிறது அமெரிக்கா. சி.என்.என்., பி.பி.சி., என்று எதைத் திருகினாலும் பாந்தமான பாக்தாத் நகரத்தை மட்டுமே தரிசிக்க முடிகிறது. குழந்தைகளும் பெண்களும் சமர்த்தாகச் சாலையில் நடந்து போய்க்கொண்டு இருக்க, அமெரிக்க வீரர்கள் அவர்களைப் பார்த்து அன்புடன் டாடா காட்டுகிறார்கள்.

நிஜம்தானா இதெல்லாம்? இராக் அமைதிப்பூங்காவாகி விட்டதா? அதுதான் இல்லை. லாலிபாப் சுவைக்கும் குழந்தைகூட இந்தப் பிம்பத்தை [...]

கர்ப்பிணிப் பெண்களின் கனிவான கவனத்திற்கு

கர்ப்பிணிப் பெண்கள் தாங்கள் பிரசவிக்கும் தேதியை மருத்துவர்கள் மூலம் அறியலாம். தாங்களாகவே தேதியை அறிய உதவும் கால்குலேட்டர்.
இங்கே கிளிக்கவும் 

முஜாஹிதே மில்லத் ஜி.எம்.பனாத்வாலா ஸாஹிப் வஃபாத்!

இந்திய யுனியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவர் முஜாஹிதேமில்லத் குலாம் மஹ்மூது பனாத்வாலா ஸாஹிப் அவர்கள் இன்று மாலை 3:30 மணியளவில் மும்பையிலுள்ள அவரது இல்லத்தில் காலமானார்.
http://muslimleaguetn.com/hqreleases.asp?id=10
http://kayalpatnam.com/shownews.asp?id=1898
அன்னாரது வாழ்க்கைக் குறிப்பு பின்வருமாறு:-
ஆசிரியர் குலாம் மஹ்மூது பனாத்வாலா ஸாஹிப் 1933ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதி மும்பையில் ஹாஜி நூர் முஹம்மது அவர்களின் மகனாகப் பிறந்தார்.
மும்பை பல்கலைக் கழகத்தில் எம்.காம். பி.எட். பட்டப்படிப்பை முடித்தார். 1954 முதல் 1962 வரை அஞ்சுமனே இஸ்லாம் உயர்நிலைப்பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றினார். [...]

அடி மேல் அடி வாங்கும் அமெரிக்கா!

இரண்டாம் உலகப்போருக்குப் பின் உலக நாடுகள் முழுவதிலும் நவீன காலனித்துவத்தை ஏற்படுத்த முயற்சிகளை மேற்கொள்ளும் அமெரிக்கா, அரபு மற்றும் ஆப்ரிக்க நாடுகள் பலவற்றில் பாதுகாப்பு என்ற போலிக் காரணம் கூறி பயமுறுத்தி தனது பெரிய பல படைத்தளங்களை ஏற்கனவே ஏற்படுத்தி விட்டது. அமெரிக்காவின் படைத்தளப் பட்டியலில் குவைத், கத்தர், பஹ்ரைன், ஒமான், சவூதி அரேபியா போன்ற அரபு நாடுகளும் பல ஆப்பிரிக்க நாடுகளும் உள்ளன. இவையல்லாமல் ஆப்கானிஸ்தானம், இராக் பொன்ற நாடுகளின் மீது நேரடியாக ஆக்கிரமிப்பு யுத்தம் [...]

முஸ்லிம் லீக் மணிவிழா மாநாடு ! இணையதளத்தில் !!

முஸ்லிம் லீக் மணிவிழா மாநாடு ! இணையதளத்தில் !!
முஸ்லிம் லீக் மணிவிழா மாநாட்டு நிகழ்ச்சிகள் 21 ஜுன் 2008 மாலை 6 மணி முதல் இணையதளத்தில் ஒலிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மாநாட்டு நிகழ்வுகளைக் காண :
www.muslimleaguetn. com
www.easylive. tv

மன்னர் ஃபஹதின் எளிமையான நல்லடக்கத்தினால் இஸ்லாத்தை ஏற்ற பாதிரியார்!

சவுதி அரேபியாவின் மன்னராக இருந்த ஃபஹத் பின் அப்துல் அஜீஸ் 2005-ல் மரணமடைந்தார். அவரை தலைநகர் ரியாத்தில் உள்ள பொது மையவாடியில் மிக மிக எளிமையான முறையில் அரச குடும்பத்தினர் அடக்கம் செய்தனர். இந்த அரிய நிகழ்ச்சி இத்தாலியில் உள்ள பிரபல கிறிஸ்துவ பாதிரியார் ஒருவரை மனமாற்றம் அடையச் செய்தது. அதைத் தொடர்ந்து அவர் தனது வாழ்வியல் நெறியாக இஸ்லாமிய மார்க்கத்தை ஏற்றுக் கொண்டார் என்ற தகவலை ஆக 21, 2005 அன்று வெளிவந்த அரப் [...]