தீர்ப்பை மதிப்போம்…

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)… உங்கள் அனைவர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக…ஆமின். பாப்ரி மஸ்ஜித் தொடர்பான வழக்கில் இன்ஷா அல்லாஹ் இன்று தீர்ப்பு வழங்கப்பட இருக்கின்றது. இந்நேரத்தில் நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய சிலவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன். தீர்ப்பு எதுவாகினும் அது இறைவனின் நாட்டம் என்பதை நாம் நன்றாகவே அறிந்துள்ளோம். ஒரு உண்மையான முஸ்லிம் இறைவனுக்கு அடிபணியவும், அவனுடைய தூதர் வாழ்ந்து காட்டியப்படி வாழவுமே நினைப்பான். குறைஷிகளுடனான ஒப்பந்தத்தில் அவர்கள் விரும்பவில்லை என்பதற்காக நபி என்ற [...]

பாபர் மசூதியின் சரித்திரம்.

இந்தியாவின் உத்தரபிரதேசம் மாநிலத்திலுள்ள அயோத்தி நகரில் அமைந்திருந்த நூற்றாண்டு கால பழமைவாய்ந்த பாபரி மஸ்ஜித் 1992ஆம் ஆண்டு ஹிந்து பயங்கரவாத அமைப்புகளால் முற்றிலுமாகத் தகர்க்கப்பட்டது. சுமார் 450 ஆண்டுகால பழமைவாய்ந்த மஸ்ஜித் இருக்கும் இடம் இந்துக் கடவுளான ராமர் பிறந்த இடம் என்றும், எனவே அவ்விடம் தங்களுக்கே சொந்தம் என்றும் கூறி, கடந்த நாற்பதாண்டுகளுக்கு முன்பு தொடரப்பட்ட வழக்கு எதிர்வரும் 24.09.2010 அன்று தீர்ப்பளிக்கப்படவுள்ளது.நீதிமன்ற தீர்ப்பு முஸ்லிம்களுக்கு சாதகமாக அமைந்தாலும் நடைமுறையில் உண்மையான நீதி கிடைக்குமா என்பது [...]

சவூதியில் பொதுமன்னிப்பு

NEWS from பாலைவனத் தூது ரியாத்,செப்.22:இதர வளைகுடா நாடுகளை பின்பற்றி சவூதி அரேபியாவும் சட்டத்திற்கு புறம்பாக நாட்டில் வசிக்கும் வெளி நாட்டவர்களுக்கு பொதுமன்னிப்பு வழங்கி வெளியேற உத்தரவிட்டுள்ளது. வருகிற செப்.25 முதல் 2011 ஆம் ஆண்டு மார் 23 வரையிலான 6 மாத கால அவகாசம் இதற்காக வழங்கப்பட்டுள்ளது. இக்காலக்கட்டத்தில் உம்ரா விசா, ஹஜ் விசா, சுற்றுலா விசா ஆகியவற்றில் சவூதி அரேபியாவிற்கு வருகை தந்து விசா காலாவதியான பிறகும் சவூதியில் சட்டத்திற்கு புறம்பாக தங்கியிருக்கும் வெளிநாட்டினர் [...]

திருமாவளவனின் முஸ்லிம் அரசியல், மாற்றமா ஏமாற்றமா?

திருமாவளவனின் முஸ்லிம் அரசியல், மாற்றமா ஏமாற்றமா? ஆண்டாண்டு காலமாக அடிமைகளாகவும், கூலிகளாகவும் கைகட்டி நின்ற சமுதாயத்தை, ‘டை’ கட்ட வைத்தவர் அண்ணல் அம்பேத்கர். ஒடுக்கப்பட்ட சமுதாயத்தின் அடையாளமாக உதித்த அவர், தமது அறிவாலும், ஆளுமையாலும், தலித் மக்களைத் தலைநிமிரச் செய்தார். சாதியின் பெயரால்… மனுநீதியின் பெயரால்… ஒதுக்கப்பட்டு, வதைக்கப்பட்ட அடித்தட்டு மக்களுக்குச் சமூக நீதியைப் பெற்றுத் தந்தார். இந்துத்துவத்தின் வேருக்கு வெந்நீர் ஊற்றிய அந்தத்தலைவர், தமது இறுதி மூச்சு உள்ளவரை இந்துத்துவ எதிர்ப்பில் தீவிரம் காட்டினார். “இந்துவாகச் [...]

ஈராக் போரில் அமெரிக்கா கொடுத்த விலை அதிகம்: ஒபாமா

ஈராக்கில் அமெரிக்கா நடத்தி வந்த் போர் முடிவுக்கு வந்துள்ளதாக அறிவித்துள்ள அதிபர் பராக் ஒபாமா, இந்த போருக்காக அமெரிக்கா கொடுத்துள்ள விலை மிக அதிகம் என்று தெரிவித்துள்ளார். பேரழிவு ஆயுதங்களை ஈராக் பதுக்கி வைத்து இருப்பதாக கூறி அப்போதைய அமெரிக்க அதிபர் புஷ், ஈராக் மீது 2003 ஆம் ஆண்டு படையெடுத்தார். இந்நிலையில், அமெரிக்க அதிபராக பதவி ஏற்ற ஒபாமா, போரை முடிவுக்கு கொண்டு வந்து அமெரிக்க படைகள் 2010 ஆம் ஆண்டு ஆகஸ்டு 31 ஆம் [...]

Follow

Get every new post delivered to your Inbox.