இந்த வீடியோவைப் பார்த்தால் கண்கள் இரத்தக் கண்ணீர் வடிக்கும்

புனித தேசம் வீடியேவைக்காண இங்கே கிளிக்கவும்

விடைபெறுகிறான் ஒரு கொடுங்கோலன்

போ! வராதே! எட்டு ஆண்டுகள்! எத்தனை மனிதர்கள். இந்த மண்ணில் பிறந்து அதன் அழுக்கைக் கூட ரசித்து வாழப் பிறந்தவர்களை உன் ஆயுதங்களால் அழித்தாய். அதற்காக உன்னை ஆண்டவனே அனுப்பியதாகவும் அறிவித்தாய்! உன் அத்தனைத் திமிரையும் ஒரு செருப்பு அடக்கியதே! அந்த நேரம் கூட செத்து விடுவோம் என்று நீ பதை பதைத்தாயே! ஆனால்… எத்தனை பச்சிளம் குழந்தைகள் உன் குண்டுகளுக்கு இரையாகி துடிதுடித்து இறந்தது. எத்தனை குழந்தைகள் தன் சொந்தங்களைப் பிரிந்து அனாதையாகிவிட்டது. விதவையாகிய பெண்கள் [...]

படுகொலைக் களமாகும் பலஸ்தீனம்! -வெ.ஜீவகிரிதரன்

கட்டுரை: படுகொலைக் களமாகும் பலஸ்தீனம்! -வெ.ஜீவகிரிதரன் http://www.muslimleaguetn.com/news.asp?id=514 மன்சூரா அபு அம்ரா அமைதியாக தன் வீட்டினிலே உறங்கிக் கொண்டிருந்த 18-வயது இளம் பெண்- மருத்துவமனை கட்டிலில் உடலெங்கும் காயங்களுடன் கை, கால்கள் முறிந்த நிலையில் கிடத்தப்பட்டிருக்கிறாள். அவளுடைய 17-வயது சகோதரன் எஹியா உயிரற்ற பிணமாக கட்டிட இடிபாடுகளுக்கிடையிலிருந்து கண்டெடுக்கப்பட்டான். உம்மு மஹ்மூது தஸ்பி 47 வயதான தாய்-தன் குழந்தையுடன் இரவு முழுவதும் வெட்ட வெளியில், கொட்டும் மழையில் தவித்து நின்றாள். காலையில் தன் வீடு முழுவதும் சிதறிக் [...]

இஸ்ரேல் Vs ஹமாஸ்- நுழைகிறது ஹிஸ்புல்லா?!

காஸா: காஸா பகுதியில் பாலஸ்தீனியர்கள் மீது இஸ்ரேல் கண்மூடித்தனமாக மனிதாபிமானமில்லாத வகையில் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், இஸ்ரோலுக்கு பதிலடி கொடுக்க ஹிஸ்புல்லா தயாராக வருகிறது. லெபனானில் இரு ஆண்டுகளுக்கு முன் இஸ்ரேல்-ஹிஸ்புல்லா இடையே நடந்த மோதலில் இஸ்ரேலுக்கு பெரும் உயிர்ச் சேதம் ஏற்பட்டது. ஈரானின் ஆதரவோடு இஸ்ரேலை எதிர்கொண்டது ஹிஸ்புல்லா. இந் நிலையில் இப்போது காஸா பகுதியில் ஹமாஸ் தீவிரவாதிகளை தாக்குகிறோம் என்ற பெயரில் அப்பாவி பாலஸ்தீனியர்களை கொன்று குவித்து வருகிறது. ஹமாஸ் அமைப்பினர் ஏ.கே.-47 [...]

‘சங்கீதா’வா இருந்த நான் ‘ஆயிஷா’ ஆனேன்.

”ஓட்டம்… ஓட்டம்… ஓட்டம்னு 10 வருஷமா ஓடிக்கிட்டேதான் இருந்தேன்!” – அத்தனை அலுப்புடன் ஆரம்பிக்கிறார் ஆயிஷா. கோவை குண்டுவெடிப்புச் சம்பவங்களைத் தொடர்ந்து ‘பர்தா பயங்கரவாதப் பெண்’ என்று வர்ணிக்கப்பட்ட அதே பிரபல ஆயிஷா என்கிற சங்கீதா! 4 வருட சிறைத் தண்டனையின் இடையே பெயிலில் வெளிவந்திருக்கும் ஆயிஷாவை சென்னை பிராட்வேயின் நெருக்கடியான குடியிருப்பு ஒன்றில் சந்தித்தேன். சில மாதங்களுக்கு முன்பு வரை ஒரு பள்ளியில் ஆசிரியையாகப் பணிபுரிந்தவர், சமீபத்தில்தான் இரண்டாவது ஆண் குழந்தையைப் பிரசவித்திருக்கிறார். ”பேட்டி எடுத்துக்கலாம். ஆனா, [...]

சிறுபான்மையினரின் புதிய மாத இதழ்

க‌விக்கோவை சிறப்பாசிரிய‌ராக‌க் கொண்டு விரைவில் ச‌ம‌ உரிமை மாத‌ இத‌ழ்   க‌விக்கோ அப்துல் ர‌ஹ்மானைக் கொண்டு விரைவில் சம‌ உரிமை மாத‌ இத‌ழ் பிப்ர‌வ‌ரி மாத‌ம் முத‌ல் வெளியிட‌ப்ப‌ட‌ இருப்ப‌தாக‌ இஸ்லாமிய‌ இல‌க்கிய‌க் க‌ழ‌க‌ பொதுச் செய‌லாள‌ர் எஸ்.எம். இதாய‌த்துல்லாஹ் செய்தியாள‌ர்க‌ளிட‌ம் தெரிவித்தார்.   ச‌ம‌ உரிமை மாத‌ இத‌ழில் சிறுபான்மையின‌ருக்கு அர‌சு வ‌ழ‌ங்கும் ச‌லுகைக‌ள் ப‌ற்றிய‌ த‌க‌வ‌ல்க‌ள், சிறுபான்மையின‌ரின் செய்திக‌ள், ச‌மூக‌, க‌ல்வி ம‌ற்றும் பொருளாதார‌ மேம்பாட்டு நிக‌ழ்வுக‌ள் குறித்த‌ செய்திக‌ள் உள்ளிட்ட‌ ப‌ல்வேறு [...]

அயல்நாட்டு வேலைவாய்ப்பு பதிவை புதுப்பிக்க கால அவகாசம்

கடலூர், ஜன. 3: அயல்நாட்டு வேலை வாய்ப்புக்காக பதிவு செய்து, புதுப்பிக்க முடியாமல் போனவர்கள் புதுப்பித்துக் கொள்ள காலஅவகாசம் வழங்கப்பட்டு இருக்கிறது. தமிழக அரசின் வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: வெளிநாட்டு நிறுவனங்களில், மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த பணிகள், பொறியாளர்கள் மற்றும் பொறியியல் தொழில் நுட்பம் சார்ந்த பணிகளில், தமிழ்நாடு அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் தமிழகத்தினரை பணி அமர்த்தி வருகிறது. பதிவு மூப்பு அடிப்படையில், அயல்நாட்டு வேலை வாய்ப்புக்கான தேர்வுக்கும் பரிந்துரைக்கப்பட்டு வருகிறார்கள். [...]

பலஸ்தீனம் பற்றி எரிகிகிறது –

மீண்டும் ஒரு மனிதத் தன்மையற்ற, கொடூரமான இஸ்ரேலின் விமானத் தாக்குதலில் குழந்தைகள், பெண்கள், வயோதிகர்கள், நோயாளிகள் உட்பட 300க்கும் மேற்பட்ட ஃபலஸ்தீனியர்கள் அநியாயமாகக் கொல்லப் பட்டுள்ளனர். ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் படுகாயமுற்றுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. உணவுப்பொருட்கள், மருந்துப் பொருட்கள் போன்ற அத்தியாவசியப் பொருட்கள் கஸ்ஸாவுக்குள் கொண்டு செல்வதற்கு இஸ்ரேல் தடை செய்துள்ள நிலையில், ஒரு பக்கம் நீண்ட இஸ்ரேலிய பிரிவினைச் சுவரும் மறுபக்கம் எகிப்திய செக்போஸ்ட் அடைப்பும் இருக்க, மனிதர்களைக் கூண்டுக்குள் அடைத்து வைத்து, குண்டுகளைப் பொழிந்ததற்குச் சமமாக [...]

Follow

Get every new post delivered to your Inbox.