

அன்பர்களே,
‘ஒண்டவந்த பிடாரி ஊர் பிடாரியை விரட்டிய கதையாக’ இஸ்லாமிய வரலாற்றில் மூன்றாவதாக சங்கைப்படுத்தப்பட்ட பூமியான பாலஸ்தீன மண்ணுக்கு வந்தேறிகளாக வந்து சேர்ந்தவர்கள் யூதர்கள். தனது எஜமான் ‘ஆக்கிரமிப்பு புகழ்’ அமேரிக்காவின் ஆதரவோடு ‘இஸ்ரேல்’ என தன்னை பிரகடனப்படுத்திய நாள்முதல் மண்ணின் மைந்தர்களான முஸ்லிம்களின் ரத்தத்தை குடித்து தாகம் தீர்த்து வருகிறது.
இந்த வந்தேறிகளின் ரத்தவெறிக்கு பச்சிளம் பாலகர்கள் கூட தப்பியதில்லை. இந்த வந்தேறிகள் எப்போது தாக்குதல் நடந்தினாலும் தம்மால் இயன்றவரை போராடி ஷகீதாகி வருபவர்கள் பாலஸ்தீனியர்கள். வந்தேறிகளின் பீரங்கி வாகனத்தை தனது கையிலுள்ள கல்கொண்டு தாக்கி நாங்கள் உயிர்நீத்தாலும் உனக்கு அஞ்சுபவர்கள் அல்ல நாங்கள் என நெஞ்சுரம் கொண்ட தங்கங்கள் பாலஸ்தீனியர்கள்.
அப்படிப்பட்ட முஸ்லிம்கள் மீது வந்தேறி போர்விமானங்கள், நேற்று எவ்வித முன்னறிவிப்பு அன்றி சரமாரியாக குண்டுமழை பொழிந்ததில் 215 பேர் ஷகீதாகியுள்ளனர்.75oபேர் படுகாயமடைந்துள்ளனர். அக்கிரமத்தாக்குதல் நடத்திய வந்தேறி இஸ்ரேல், தாக்குதல் தொடரும் என அறிவித்துள்ளது. வழக்கம் போல முஸ்லீம் நாடுகள் பத்திரிக்கையில் வன்மையாக கண்டிக்கிறோம் என்ற அறிக்கையோடு வாய் மூடிவிட்டது.
அன்று நபி[ஸல்]காலத்தில் ஒரு உடைவாளை கரமேந்தி பெரும்படையை வென்ற வீரமிக்க பரம்பரை, இன்று பறந்து விரிந்த ஆட்சி அதிகாரம்,தளவாடங்கள், செல்வ செழிப்புகள் எல்லாம் இருந்தும், ஒரு சுண்டக்காய் ,நம் இனத்தை கருவருப்பதை வேடிக்கை பார்க்கிறார்கள் என்றால், இவர்களை பற்றியும் நபி[ஸல்]அவர்கள் முன்னறிவிப்பு செய்துள்ளார்கள்.
‘ஒருகாலம் வரும் அப்போது தட்டிலுள்ள இறைச்சியை நோக்கி வருபவர்களை போல் உங்களை நோக்கி எதிரிகள் வருவார்கள்அவர்களுடைய உள்ளத்தில் உங்களை பற்றிய பயம்அகற்றப்பட்டுவிடும்என்று நபி[ஸல்]அவர்கள் கூறியவுடன், அந்த நாளில் நாங்கள் எண்ணிக்கையில் குறைவாக இருப்போமா? என நாங்கள் வினவ, இல்லை! நீங்கள் அதிகமாக இருப்பீர்கள் ஆனால் உங்கள் உள்ளத்தில் ‘வகண்’ நிறைந்திருக்கும் என்றார்கள். ‘வகன்’ என்றால் என்ன என்று நாங்கள் வினவ, உலகத்தை விரும்புவீர்கள் மரணத்தை வெறுப்பீர்கள் என்று நபியவர்கள் பதிலளித்தார்கள். [நூல்;அஹ்மத்]
என்னே! ஒரு சத்திய வார்த்தை இன்றைய ஆட்சியாளர்களுக்கு அப்படியே பொருந்திப்போகிறது பாருங்கள். ஆனாலும் இந்த யூத வந்தேறிகளுக்கு சொல்லிக்கொள்கிறோம் நிச்சயமாக! யூதர்களே உங்களை முஸ்லிம்கள் வெல்வோம்[இன்ஷா அல்லாஹ்] இதை இன்றைய முஸ்லீம் ஆட்சியாளர்களை நம்பி நாங்கள் சொல்லவில்லை. எங்களின் ஒரே தலைவர் நபி[ஸல்] அவர்கள் முன்னறிவிப்பு செய்துள்ளார்கள்.
‘நீங்கள் யூதர்களை வெல்வீர்கள்! எந்த அளவுக்கென்றால் கல்லுக்குப்பின்னால் மறைந்திருக்கும் யூதனை அந்தக்கல்,இதோ! ஒரு யூதன் என்று காட்டிக்கொடுக்கும்.என்று நபி[ஸல்]அவர்கள் கூறினார்கள். நூல்;புஹாரி.
அந்த நாளுக்காக உலக முஸ்லிம்களே அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்!
நன்றி: நிழல்களும் நிஜங்களும்
:இன் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது அழைப்பு, சமூகம் | குறிச்சொற்கள்: இஸ்ரேல், பலஸ்தீன்

