ஈகை பெருநாள் செய்தி!

விடைபெறும் ஒவ்வொரு ரமளானும் ஒரு முஸ்லிமைப் பொறுத்தவரை, இரு அதிமுக்கியச் செய்திகளை விட்டுச் செல்கின்றது.

 

ஒன்று, இவ்வுலக மாந்தர் சுபிட்சம் பெற படைப்பாளனால் வகுத்தளிக்கப்பட்ட அமைதி மார்க்கமான இஸ்லாத்தின் பாடபுத்தகமாம் இறைவனின் வார்த்தைகள், – திருகுர்ஆன் – பட்டுத்துணியால் போர்த்தி பாதுகாப்பாக பரணில் அடுக்கி வைத்திருந்ததைத் தூசி தட்டி, மாதம் முழுதும் வெளிச்சம் காண வைத்துள்ளது. இவ்வுலக மாந்தருக்கான அருள்கொடையாக இறைவனால் இறக்கியருளப்பட்ட இந்த அமானிதத்தைச் சென்று சேராதவர்களுக்குச் சேர்த்து வைப்பது, ஒவ்வொரு முஸ்லிமின் தலையாய கடமையாகும். அதனை நினைவுறுத்தும் முகமாக, தூசி தட்டி வெளியே எடுக்கப்பட்டதைப் படித்து விளங்கி, தூதர் வழிகாட்டுதல் படி எட்டாதவர்களுக்குச் சேர்த்து வைத்தல்.

 

மற்றொன்று, இறை அளித்த வழிகாட்டுதல் – திருகுர்ஆன் படி வாழ்வை அமைத்துக் கொண்டால் எத்தகைய பராக்கிரமசக்தியையும் இறை உதவியுடன் தகர்த்தெறிய முடியும் என்ற பத்ரின் அறிவிப்பு.

 

எந்த ரமளானில் வெற்றிக்கான வழிகாட்டி திருகுர்ஆனை இறக்கி வைத்தானோ அதே ரமளானில் அதன்படி வாழ்க்கையை அமைத்துக் கொண்டவர்களுக்கு எண்ணிப்பார்க்க இயலா வெற்றியையும் இறைவன் பரிசாக அளித்து, அதன் பக்கம் நம்பிக்கையுடன் விரைந்து வர அறிவிப்பு செய்கின்றான்.

 

இதனைத் தத்துவார்த்தரீதியில் கூட உணர்ந்துக் கொள்ளாத முஸ்லிம்கள், ரமளான் வந்தது; அமல்கள் போட்டி போட்டு செய்தோம். ரமளான் சென்றது; மற்றொரு ரமளானுக்காகக் காத்துள்ளோம் என, எதிர்பார்க்க இயலா எதிர்காலத்தில் நம்பிக்கை வைத்து, கிடைக்க வேண்டிய வெற்றிகளைக் குழிதோண்டி புதைக்க ஆரம்பித்து விடுகின்றனர்.

 

மேலும்…..

மறுமொழி இடுக

பின்னூட்டம் இட புகுபதிகை செய்திருக்கவேண்டும்