இஸ்லாத்துக்கு அழைக்கும் விஞ்ஞானம்

அறிவியல் அபிமானிகளே! நாம் வசிக்கும் இந்த பூமி ஓரிடத்தில் ஓய்ந்திருக்காமல் அதன் பாட்டுக்கு மணிக்கு 1,08,000 கி. மீ. வேகத்தில் ஓட்டம் பிடித்தால் என்றேனும் ஒரு நாள் இந்த பூகோளம் பேரண்டத்தின் எல்லையை தாண்டுமா, தாண்டாதா?. அதுதான் போகட்டும் – கோடிக்கணக்கான வருடங்களாக இந்த நிகழ்ச்சிப் போக்கு நடந்து கொண்டிருக்கையில் குறைந்த பட்சம் இந்த பூமி அது உள்ளடங்கியிருக்கும் பால்வழி மண்டலத்தையாவது  என்றோ தாண்டியிருக்க வேண்டாமா?. தாண்டியே சென்றிருக்க வேண்டும். ஆனால் ஏன் தாண்டவில்லை?.

ஆகாயத்திற்கு ஓர் எல்லை உண்டு என்று பரிசுத்த குர்ஆன் கூறியதையோ, அல்லது பால்வழி மண்டலம் (அதைப்போன்று பற்பலவும்) உண்டு என அதே பரிசுத்த குர்ஆன் கூறுவதையோ  நீங்கள் மறுக்கிறீர்களா?. இல்லை. நவீன அறிவியலின் சக்தி வாய்ந்த தொலை நோக்கிகள்  பேரண்டத்தின் எல்லைகளையே நமக்குக் காட்டி, இப்பேரண்டம் ஓர் எல்லைக்குட்பட்டதே என 1400 வருடங்களுக்கு முன்பே அறிவியல் பேருலகில் மறுமலர்ச்சி ஏற்படுத்திய பரிசுத்த குர்ஆனை மெய்ப்பித்து நிற்கையில் நீங்கள் குர்ஆனை மறுக்க முடியாது. பேரண்டத்திற்கு ஓர் எல்லை இருப்பதும் உண்மை: அந்தப் பேரண்டத்திற்குள் பூகோளமும், ஏனைய யாவும் விண்ணோட்டம் நிகழ்த்தி கொண்டிருப்பதும் மெய்யே என ஒப்புக் கொண்ட பிறகு, விண்ணோடிக் கொண்டிருக்கும் இப்பொருட்கள் என்றேனும் ஒரு நாள் அதற்குள்ளிலிருந்து விலகிச் செல்லுமா, செல்லாதா என்ற வினா எழுகிறதா இல்லையா?.

அறிவார்ந்த நண்பர்களே! மேற்கண்ட அதே வினாவை வேறு வார்த்தைகளில் கேட்டால் எப்படிக் கேட்கலாம்?. ஆகாயமும், பூமியும் விலகுவதற்குரிய வாய்ப்பு உண்டா என்று கேட்கலாம். இப்படியொரு கேள்வியைக் கேட்க வாய்ப்பை ஏற்படுத்தித் தந்த ஞானக் களஞ்சியமாம் பரிசுத்த குர்ஆன் (அதை மெய்ப்பிக்க வந்த அறிவியலும்) அறைந்தது: விலகாது! விலகவே விலகாது! ஏனெனில் விலகாதவாறு அவைகளைப் படைத்த அதியற்புதப் படைப்பாளனாகிய அதனுடைய படைப்பாளன்தான் அதனைத் தடுத்துக் கொண்டிருக்கிறான் என்று.

விண்ணும், மண்ணும் விலகாமல் தடுக்கப்படுகிறது என்று கூறுகிறதே பரிசுத்த குர்ஆன். இதிலாவது உங்கள் எவருக்கும் ஐயம் ஏற்படுமா?. அப்படி ஏதேனும் ஐயம் ஏற்படுமேயானால் இரண்டு காரணங்களால் உங்கள் ஐயம் விலகியாக வேண்டும். முதல் காரணம் மெய்யாகவே பூகோளத்தின் விண்ணோட்டம் பேரண்டத்தின் எல்லையைத் தாண்டும் இலக்கில் அமைந்திருந்தால் தற்போது நமது பூமி பால்வழி மண்டலத்தில் இருந்திருக்க முடியாது. ஏன்?. ஏனென்றால் பூமியின் திசை வேகம் இம்மண்டலத்தை என்றோ – அதைத் தாண்டச் செய்திருக்கும். எப்படி?.

எப்படியென்பதைப் பார்ப்போம். பால்வழி மண்டலத்தின் பருமன் 10,000 ஒளியாண்டுகள் ஆகும். ஒளியாண்டு (டுiபாவ லநயச) என்பது ஒரு மூலப் பொருளிலிருந்த புறப்படும் ஒளி வருடம் முழுவதும் தொடர்ந்து போய்க் கொண்டிருந்தால் எவ்வளவு தொலைவை அது கடக்குமோ, அவ்வளவு தொலைவு என்பது அதன் பொருள். ஒளி ஒரு வினாடியில் செல்லும் தொலைவு (தூரம்) 3,00,000 கி. மீ. ஆகும். இதன்படி நிதானமாகக் கணக்கிட்டுப் பார்த்தால் ஒரு மணி நேர ஒளித்தூரம் என்பது 10,000 மணிநேர பூமி பயணத் தூரத்திற்கு சமமாகும். ஆகவே 10,000 ஒளி வருடப் பருமன் கொண்ட பால்வழி மண்டலத்தை பூகோளம் வெறும் 10 கோடி வருடத்திற்குள்ளாகவே கடந்து சென்றிருக்கும். ஆனால் பேரண்டத்தில் பூகோளம் உருவாகி 500 கோடி வருடங்களாக பூகோளத்தின் விண்ணோட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தும் கூட, இந்த பூகோளம் பால்வழி பெருமண்டலத்திலேயேதான் இருந்து வருகிறது. ஆகவே விண்ணும், மண்ணும் விலகாமல் தடுக்கப்படுகிறது என்று கூறும் பரிசுத்தக் குர்ஆனை நம்பித்தான் ஆக வேண்டும் என முதல் காரணத்தில் காணப்படும் அறிவியல் பேருண்மையே நம்மீது நிர்ப்பந்தம் செலுத்துகிறது.

அருமை நண்பர்களே! அறிவியல் அபிமானிகளே! அடுத்த காரணத்தைக் காண்பதற்கு முன் சற்று நேரம் அறிவியலே நம்பும்படி நிர்ப்பந்திக்கும் ஒன்றை ஒருவர் நம்ப மறுத்தால் அவர் அறிவியல் அபிமானியா? அல்லது அறியாமையின் அபிமானியா என்று சிந்தியுங்களேன்

தொடர்ந்து…..

மறுமொழி இடுக

பின்னூட்டம் இட புகுபதிகை செய்திருக்கவேண்டும்