ஜார்ஜ் புஷ் மீது வழக்குத் தொடுப்பது எப்படி?

‘போரா? இராக்கிலா? சேச்சே! அதெல்லாம் எப்போதோ முடிஞ்சுபோச்சு! இராக் மக்கள் முந்தாநாளே இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிட்டாங்களே!’ என மைக் செட் வைத்து அலறிக்கொண்டு இருக்கிறது அமெரிக்கா. சி.என்.என்., பி.பி.சி., என்று எதைத் திருகினாலும் பாந்தமான பாக்தாத் நகரத்தை மட்டுமே தரிசிக்க முடிகிறது. குழந்தைகளும் பெண்களும் சமர்த்தாகச் சாலையில் நடந்து போய்க்கொண்டு இருக்க, அமெரிக்க வீரர்கள் அவர்களைப் பார்த்து அன்புடன் டாடா காட்டுகிறார்கள்.

நிஜம்தானா இதெல்லாம்? இராக் அமைதிப்பூங்காவாகி விட்டதா? அதுதான் இல்லை. லாலிபாப் சுவைக்கும் குழந்தைகூட இந்தப் பிம்பத்தை நம்பாது என்பது தான் நிஜம். இந்த விநாடி வரை இராக் பற்றி எரிந்துகொண்டு இருக்கிறது. தினம் தினம் கார்கள் வெடிக்கின்றன. சாலை ஓரங்களில், புதர்களுக்கு இடையில் இராக்கியர்களின் சடலங்கள் கண்டெடுக்கப்படுகின்றன. அல் கொய்தா ஆட்களைத் தேடுகிறோம் என்கிற சாக்கில், கண்ணில் பட்டவரைஎல்லாம் கைது செய்கிறார்கள் அமெரிக்க வீரர்கள். வெளியில் வர இயலாமல் வீட்டுக்குள்ளேயே அடைந்து கிடக்கிறார்கள் இராக் கியப் பெண்கள்.

சமீபத்தில், அமெரிக்க மக்களிடம் சர்வே ஒன்று எடுத்தார்கள். ‘இராக் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?’ இதுதான் கேள்வி. இராக் மோசமான நிலைமையில் இருக் கிறது என்றார்கள் 62 சதவிகிதம் பேர். 61 சதவிகிதம் பேர், இனி பழைய இராக்கைப் பார்க்க முடியாது என்று சத்தியம் செய்தார்கள். ஊர் உலகத்துக்கெல்லாம் தெரிந்த பிறகு, கட்டக் கடைசியாக அமெரிக்க மக்களுக்கும் இராக் பற்றிய உண்மை தெரிய ஆரம்பித்திருக்கிறது.

உதாரணம், சமீபத்தில் வெளியாகி அமெரிக்கா முழுவதிலும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்திக்கொண்டு இருக்கும் புத்தகம். தலைப்பு – ‘The Prosecution of George W. Bush for Murder’. எழுதியிருப்பவர் வின்சென்ட் புல்யோஸி. பப்ளிக் பிராசிக்யூட்டராக இருந்தவர். வீட்டுக்குள் சிப்பிக் காளான் வளர்ப்பது எப்படி என்பது போல், ஜார்ஜ் புஷ் மீது வழக்குத் தொடுப்பது எப்படி என்று இந்தப் புத்தகத்தில் படிப்படியாகக் கற்றுத் தந்திருக்கிறார் இவர்.

மேலும்….

மறுமொழி இடுக

பின்னூட்டம் இட புகுபதிகை செய்திருக்கவேண்டும்