இரண்டாம் உலகப்போருக்குப் பின் உலக நாடுகள் முழுவதிலும் நவீன காலனித்துவத்தை ஏற்படுத்த முயற்சிகளை மேற்கொள்ளும் அமெரிக்கா, அரபு மற்றும் ஆப்ரிக்க நாடுகள் பலவற்றில் பாதுகாப்பு என்ற போலிக் காரணம் கூறி பயமுறுத்தி தனது பெரிய பல படைத்தளங்களை ஏற்கனவே ஏற்படுத்தி விட்டது. அமெரிக்காவின் படைத்தளப் பட்டியலில் குவைத், கத்தர், பஹ்ரைன், ஒமான், சவூதி அரேபியா போன்ற அரபு நாடுகளும் பல ஆப்பிரிக்க நாடுகளும் உள்ளன. இவையல்லாமல் ஆப்கானிஸ்தானம், இராக் பொன்ற நாடுகளின் மீது நேரடியாக ஆக்கிரமிப்பு யுத்தம் நடத்தி, அங்கும் தனது இலட்சகணக்கான படைவீரர்களையும் நவீன ஆயுதங்களையும் கொண்ட படைத்தளங்களை ஏற்படுத்தியுள்ளது.
ஒரு பக்கம் தீவிரவாதம், பயங்கரவாதம், பாதுகாப்பு, அல் காயிதா, தாலிபான், 9/11 போன்ற ஏட்டில் ஆதாரத்துடன் நிரூபிக்க இயலாப் பொய்க் காரணங்களைக் கூறி ஆக்ரமிப்புகளையும் ஆக்ரமித்த நாடுகளில் காலனித்துவத்தையும் ஏற்படுத்தி வரும் அமெரிக்கா, இவற்றைப் பெரிதாகக் கண்டு கொள்ளாத, நடுநிலை வகிக்கும் பல முக்கிய நாடுகளில் பொருளாதாரத்தின் மூலமும் உலக மயமாக்கலின் மூலமும் மறைமுகமாக நவீன காலனித்துவத்தை நிறுவி வருகின்றது.
:இன் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது பொதுவானவை | குறிச்சொற்கள்: அமெரிக்கா

