அறிவியல் தொழில் நுட்பக் கண்டுபிடிப்புகளை உலகிற்கு வாரி வழங்கிய வரலாற்றை மீண்டும் உயிர்த்தெழச் செய்திருக்கும் ஈரான், அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்தில் ஏனைய இஸ்லாமிய நாடுகளுக்கு முன்னோடியாய் விளங்கி வருவது அனைவரும் அறிந்ததே! அறிவியல் தகவல் தொழில்நுட்ப நிறுவனம் அளிக்கும் தகவலின்படி ஈரானின் உற்பத்தி வளர்ச்சி விகிதம் 1994 – 2004 க்குள் பத்து மடங்கு உயர்ந்துள்ளது. மிகக் குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால் கல்வி மற்றும் பயிற்சி தொடர்பான அதிகரித்துள்ளது.
இத்தகைய விழிப்புணர்ச்சியின் காரணமாக ஈரானிய சமுதாயம் சர்வதேச அளவில் சாதனைகளை அள்ளிக் குவித்துக் கொண்டிருக்கிறது. இஸ்லாம் வலியுறுத்தும் ஆண் பெண் என்ற பால் வேற்றுமையின்றி “அறிவைத் தேடுதல்” எனும் அடிப்படை இங்கே நிருபணமாகிக் கொண்டுள்ளது
:இன் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது சமூகம், பொதுவானவை, முஸ்லிம் | குறிச்சொற்கள்: முஸ்லிம் பெண், விஞ்ஞானிகள்

