நிறம் மாற்றப்படும் வரலாறுகள்!
ஸ்டூவர்ட் மில் என்கிற ஆங்கிலேய வரலாற்றாசிரியர் ‘ஹிஸ்டரி ஆஃப் பிரிட்டிஷ் இந்தியா’ என்கிற தமது வரலாற்று நூலில், இந்தியாவை ‘இந்து இந்தியா’, ‘முஸ்லிம் இந்தியா’ என்று வகைப்படுத்தினார். இந்தியாவில் இன்று இந்துத்துவ சக்திகள் தூபமிட்டு வளர்த்து வரும் இந்து, முஸ்லிம் சமுதாயங்களுக்கிடையிலான பகை நெருப்பின் பொறி இங்குதான் பற்ற வைக்கப்பட்டது. ஆங்கில ஏகாதிபத்தியத்திற்கு எதிராகத் தொடக்கக் காலத்தில் எவ்வித கருத்து வேற்றுமைகளும் இல்லாமல் இந்துக்களும் முஸ்லிம்களும் இணைந்தே போராடினர். குறிப்பாக 1857 ல் நடந்த மாப்பிள்ளைக் கலகம் என அழைக்கப்படும் முதல் இந்திய சுதந்திரப் போரில் முஸ்லிம் மன்னர்களின் பங்கு குறிப்பிடத் தக்கது. முஸ்லிம் மன்னர்களிடம் இந்துக்கள் அமைச்சர்களாகவும் இந்து மன்னர்களிடம் முஸ்லிம்கள் படைத்தலைவர்களாகவும் இருந்திருக்கின்றனர். வெள்ளையர்களின் வருகைக்கு முன்னர் இந்தியாவில் இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் இருந்த பிணைப்பினை இது உறுதி செய்கிறது. இவ்விரு தரப்பினருக்குமிடையில் நிலவிய இத்தகைய நேசத்தையே வெள்ளையரின் ‘பிரித்தாளும் சூழ்ச்சி’ பிரித்து வைத்தது.
:இன் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது சமூகம், பொதுவானவை | குறிச்சொல்லிடப்பட்டது: இந்திய வரலாறு, கல்வி முறை

