‘சகுணம்’ ஓர் அலசல்
மனித வரலாற்றில் சகுணம் தொடர்ந்தேர்ச்சியான ஒரு தொற்று நோயாகவே காணப்படுகின்றது. அதனை வைத்து சிலர் வயிறு வளர்ப்பதையும் நாட்டு நடப்புக்கள் எமக்கு எடுத்துக் கூறுகின்றன. அறிவியல் வளர்ச்சியடைந்த இந்த நவீன யுகத்திலும் படித்தவர்கள், பாமரர்கள் என வேறுபாடின்றி அனைவரும் சாத்தானிய சகுணத்தின் சாக்கடை வெள்ளத்தில் அடிபட்டுச் செல்பவர்களாகவே இருக்கின்றனர்.
எனவே எமது சமூகத்தின் நன்மை கருதி சகுணத்தின் உண்மை நிலைப்பாட்டையும், அதனால் ஏற்படும் தீமைகளையும் உங்கள் முன் சமர்ப்பிக்கின்றோம். படித்து பயன் பெற வேண்டும் என்பதே எங்கள் அவா!
‘சகுணம்’ என்பதற்கு அரபியில் ‘ததய்யுர்’ எனப்படும். இது ‘தய்ர்’ எனும் பெயர்ச் சொல்லில் இருந்து பிறந்ததாகும். புறவைக்கு அரபியில் ‘தய்ர்’ என்பர்.
:இன் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது சமூகம் | குறிச்சொற்கள்: சகுணம், மூடநம்பிக்கை


