மே 10, 11 தஞ்சையில் முஸ்லிம்களின் தவ்ஹீத் எழுச்சி மாநாடு
அய்யா அழைக்கிறார், அம்மா அழைக்கிறார், அண்ணன் அழைக்கிறார், தளபதி; அழைக்கிறார், தலைவர் அழைக்கிறார் என்றுதான் நாட்டில் மாநாடுகளுக்கான அழைப்புகள் விடுக்கப்படும்.
தங்களின் அரசியல் இருப்பை வெளிப்படுத்திக் கொள்ளவும் பலப்படுத்திக் கொள்ளவும் அல்லது அரசியலில் அடியெடுத்து வைக்கவும் தான் மாநாடுகள் நடைபெறுகின்றன. ஆனால் இதில் மக்களுக்கு என்ன பயன் சமுதாயத்திற்கு என்ன பயன் என்றால் பூஜ்யம் தான் விடையாக உள்ளது.
மற்றொரு புறமோ ஆண்மிகத்தின் பெயரால் நடக்கும் ஏமாற்று மாநாடுகள், பெருவிழாக்கள், அற்புத திருவிழாக்கள் மக்களை அப்படியே முட்டாள்களாக வைத்திருக்கும் மோசடிகள் குருஜியின் மூத்த சிஷ்யர் தரிசணத்;திற்காக காத்திருக்கும் கூட்டங்கள் ஏதோ மார்க்கத்தின் ஒரு பகுதியை மட்டும் எடுத்துக் கொண்ட ஹஜ்ரத்தின் துவாவிற்காக கூடும் கூட்டங்கள்.
ஆனால் இவைகளில் முற்றிலும் மாறுபட்ட இது வரை சமுதாயமே கண்டிராத வகையில் படைத்த இறைவனையே வணங்க வேண்டும் படைப்புகளை வணங்கக் கூடாது என்ற ஒர் இறை தாரக மந்திரம் உலகேங்கும் பரவுவதற்காக நடத்தப்படுவது தான் இந்த தவ்ஹீத் எழுச்சி மாநாடு.
ஒட்டு மொத்த முஸ்லிம் சமுதாயமும் முழுமையாக உலக வாழ்கையிலும் மறுமை வாழ்கையிலும் பல்வேறு விதங்களில் பயன்பெற வேண்டும் என்பதற்காக தான் இந்த தவ்ஹீத் எழுச்சி மாநாடு.
முஸ்லிம்கள் இன்று பல்வேறு விதங்களில் துண்பப்பட்டு துயரப்பட்டு உலக வாழ்கையில் எதிர் கொள்ளும் பிரச்சனைகளை சமாளிக்க வழி தெரியாமல், வழி தவறி தடம் மாறும் நிகழ்வுகள் தொடர்ந்து நடந்து கொண்டே தான் உள்ளன. சமுதாயத்தில் உள்ள பல்வேறு அமைப்புகள் தங்களை வளர்த்து கொள்வதில் தான் கவனமாக உள்ளது.
இந்த நிலை மாற இம்மையிலும் மறுமையிலும் மாபெரும் வெற்றிபெற உங்கள் வாழ்கையில் மறுமலர்ச்சி பெற குடும்பத்துடன் திரண்டு வாருங்கள் ஈருலக வெற்றியுடன் திரும்பிச் செல்லுங்கள்!
:இன் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது இஸ்லாம், சமூகம், முஸ்லிம் | குறிச்சொல்லிடப்பட்டது: கல்வி, சுய தொழில், தஞ்சை, தவ்ஹீத், மாநாடு, வேலைவாய்ப்பு

