மக்கா-மதினா அதிவேக நவீன இரயில் திட்டம்

மக்கா-மதினா இரயில் திட்டம்மக்கா-மதினா அதிவேக இரயில் போக்குவரத்து திட்டத்திற்கு சவுதி அரேபியாவின் மன்னர் அப்துல்லாஹ் உத்தரவு பிறப்பித்துள்ளார். ஹஜ் மற்றும் உம்ரா புனிதப் பயணங்களில் புதிய வசதியை ஏற்படுத்தித் தரும் இத்திட்டத்தின் மதிப்பு சுமார் 20 பில்லியன் சவுதி ரியால் (சுமார் 5.33 பில்லியன் அமெரிக்க டாலர்) ஆகும்.

இப்புதிய திட்டம் தரும் வசதியின்படி, மணிக்கு 300 கி.மீ வேகத்தில் செல்லக்கூடிய அதி நவீன இரயிலில், 30 நிமிடத்தில் மக்காவிலிருந்து ஜித்தாவிற்கும், 2 மணிநேரத்தில் மதினாவிற்கும் செல்ல முடியும் என்று சவுதி அரேபியாவின் போக்குவரத்துத் துறை அமைச்சர் டாக்டர் ஜபாரா அல் ஸராய்ஸ்ரி தெரிவித்துள்ளார்.

இத்திட்டத்தின் கீழ் சுமார் 500 கி.மீ புதிய அதிநவீன மின்சார இரயில் பாதை மக்கா-ஜித்தா-மதினாவிற்கு இடையே போடப்படும். இப்புதிய இரயில்பாதை அதிநவீன தொழில்நுட்பத்துடன் சிறந்த தகவல் தொடர்பையும் உள்ளடக்கியதாக இருக்கும். சவுதி அரேபியாவின் நவீன போக்குவரத்தை இத்திட்டம் மேலும் அதிகப்படுத்தும் என்பதாகத் தெரிகிறது.

மேலும்………

மறுமொழி இடுக

பின்னூட்டம் இட புகுபதிகை செய்திருக்கவேண்டும்